Tuesday 19 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

பல்லாவரம் தனியார் பள்ளியில் மாணவி கற்பழித்து கொலை? நூற்றுக்கணக்கில் பெற்றோர் திரண்டு ஆர்ப்பாட்டம் - சாலை மறியல்

சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
சென்னை, பல்லாவரம் தனியார் பள்ளியில், மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக, வெளியான தகவலையடுத்து, நேற்று காலை முதல், பெற்றோர் அந்த பள்ளியை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலையில், செயின்ட் தெரேசா மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில், 4,800 மாணவியர் படிக்கின்றனர்; 120 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பள்ளியில், சில தினங்களுக்கு முன், மாணவி ஒருவர், கட்டட வேலை செய்யும் வட மாநில கட்டுமான தொழிலாளிகளால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார் என்று, பல்லாவரம் பகுதியில் தகவல் பரவியது. இதனால், பள்ளி மாணவியர், பெற்றோர், பகுதிவாசிகள் மத்தியில் பெரும் பீதி பரவியது. ஆனால், அது வெறும் வதந்தி என்றும், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க, மர்ம நபர்கள் சிலர் வதந்தி பரப்புவதாகவும், நேற்று முன்தினம், பல்லாவரம் காவல் நிலையத்தில், பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.நேற்று காலை, 8:00 மணிக்கு, பள்ளி துவங்கிய சிறிது நேரத்தில், பள்ளியின் முன், பெற்றோர் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பள்ளியின் வாசல் கதவை திறந்து, வளாகத்திற்குள் சென்றனர்.
'கொல்லப்பட்ட பள்ளி மாணவி யார்? எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? கொலை தொடர்பாக ஏன் தகவல் மறைக்கப்பட்டது?' என, சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
                                                                                                          மேலும், . . . . 

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு குட்பை மாற்று திட்டத்திற்கு தயாராகும் மத்திய அரசு
புதுடில்லி, ஆகஸ்ட், 19-08-2014,
வட்டார போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்.டி.ஓ., ஆபீஸ்) மூட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கு பதிலாக மாற்று அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது, அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். இந்த அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரதப் பழசாகிப் போன சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மாற்றுவதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு ஈடுபாடு காட்டி வருகிறது.
                                                                                                      மேலும், . . . .

சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? ராமதாஸ் பேட்டி

சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நடந்த தென் சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:–
கே:– பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறதா?
ப:– இது பற்றி அவர்களிடமே கேளுங்கள்.
கே:– சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா பா.ம.க. கூட்டணி நீடிக்குமா?
ப:– இதுபற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்வோம்.
கே:– மத்தியில் அமைந்துள்ள பா.ஜனதா அரசும் இலங்கை தமிழர் விவகாரத்திலும், மீனவர் விவகாரத்திலும் சரியான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லையே?
                                                                                     மேலும், . . . .

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை, ஆகஸ்ட், 19-08-2014,
மத்திய அரசின் கெயல் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்துக்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன.
இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் தொழிற்துறை முதன்மை செயலாளர் கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார்.
அதில் ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்,
                                                                                                             மேலும், . . . 

No comments:

Post a Comment