Thursday 14 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-08-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

68- வது சுதந்திர தினம் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட், 14–08-2014,
கவர்னர் ரோசையா சுதந்திர தின வாழ்த்து
தமிழக கவர்னர் ரோசையா வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
சுதந்திர தின நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்நாளில் நாடு உயர்ந்த நிலையை அடைய நமது பொறுப்புகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்துவோம் என்பதில் உறுதியேற்போம்.
நாட்டின் ஒருமைப்பாடும், அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றிலும் நமது பங்களிப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் நாளை காலை 9.45 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் சிலை திறப்பு விழா நடத்தப்படுகிறது. கவர்னர் ரோசையா இதை திறந்து வைக்கிறார்.
காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
                                                                                                                      மேலும், . . . 

நீதிபதிகள் நியமன அதிகார திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
புதுடில்லி, ஆகஸ்ட், 14–08-2014,
ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதிகள் நியமன அதிகார திருத்த மசோதா குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த மசோதவின் சிறப்புக்கள் , அதிகாரம் குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதா நிறைவேறியது. ஆதரவாக 177 ஓட்டுக்கள் விழுந்தது.
அமைச்சர் பேசுகையில், கொலிஜியம் என்ற முறை மாற்றப்படுகிறது.
                                                                                                                  மேலும், . . . . .

பூலான் தேவி கொலை வழக்கில் ஷேர் சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி, ஆகஸ்ட், 14–08-2014,
பூலான்தேவி கொலை வழக்கில் ஷேர் சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியலில் ஈடுபட்டு வந்த பூலான்தேவி கடந்த 2001ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஷேர் சிங் ராணா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட மற்ற 10 பேரையும் விடுதலை செய்தது.
பின்னர் ராணாவுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நேற்று முன்தினம் டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி பாரத் பரஷார் முன்னிலையில் விவாதம் நடந்தது.
                                                                                                மேலும், . . . . . 

இந்தியாவில் தூக்கிலிடப்படும் பெண்கள் சகோதரிகளுக்கு விரைவில் தூக்கு

மும்பை, ஆகஸ்ட், 14–08-2014,
மராட்டியத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் விரைவில் தூக்கிலிடப்பட உள்ளனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித் என்ற சகோதரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 13 குழந்தைகளை கடத்திய சகோதரிகள் 9 குழந்தைகளை கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
                                                                                                   மேலும், . . . .

No comments:

Post a Comment