Thursday 7 August 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-08-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-08-2014) மாலை, IST- 03.00 மணி, நிலவரப்படி,

இந்து முன்னணி தலைவர் கொலையில் 6 தீவிரவாதிகள் கைது

சென்னை, ஆகஸ்ட், 07–08-2014,

இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவரான சுரேஷ்குமார், அம்பத்தூரில் கடந்த ஜூன் மாதம் 18–ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்து முன்னணி தெரு முனை கூட்டங்களில் இந்து மதத்தை பற்றி பல்வேறு தகவல்களை திரட்டி புள்ளி விவரங்களுடன் பேசி வந்த சுரேஷ்குமார் சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்தும் ஆவேசமாக பேசியிருக்கிறார். இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போது தீவிரவாத இயக்கத்தினர் சிலர் தான் திட்டம் போட்டு சுரேஷ் குமாரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் பெரிய அளவில் உதவிகள் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அம்பத்தூர் பாடியை சேர்ந்த நசீர், கடலூர் பரங்கிப்பேட்டையை சேர்ந்த குத்புதீன் மற்றும் காஜாமொய்தீன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினர். இவர்களுடன் 17 வயது மாணவர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் அனைவரும் சுரேஷ் குமாரின் நடமாட்டம் பற்றி கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்கள். இருப்பினும் சுரேஷ்குமாரை வெட்டிக் கொன்றவர்கள் யார்? என்பதில் மர்மம் நீடித்தது.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் 4 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் மயில் வாகனன் ஆகியோர் தீவிரவாதிகளை எப்படி பிடிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் 2 நாட்களுக்கு முன்னர் பெங்களூருக்கு விரைந்தனர். அங்கு விவேக் நகர் மற்றும் சிவாஜி நகர் பகுதியில் முகாமிட்ட அவர்கள் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போலீசாரின் இந்த ரகசிய ஆபரேஷனுக்கு நல்ல பலன் கிடைத்தது.
                                                                                                             மேலும், . . . . .  

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் மிசோரம் கவர்னர் நீக்கம் குறித்து புதிய தகவல்
புதுடில்லி, ஆகஸ்ட், 07–08-2014,
மிசோரம் கவர்னர் நீக்கம் செய்யப்பட்டதற்கு அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதே காரணம் என்ற புதிய தகவலை மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. இவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு பல முறை அரசு செலவில் பயணம் செய்து பணத்தை வீணடித்துள்ளார் என்றும், இது தொடர்பாக அவர் முறைகேடான கணக்கை சமர்ப்பித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கமலா பெனிவால் (87) காங்கிரஸ் கட்சியின் முழு விசுவாசியாக இருந்து வந்தவர்.
                                                                                               மேலும், . . . . . 

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என அச்சம்
நைஜிரியா, 07-08-2014,
நைஜிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நைஜிரியாவின் சிபோக் பகுதியில் பள்ளியில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவிகளை போஹோ காரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
                                                                                                       மேலும், . . . . 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் ”அம்மா விதைகள்” சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, 07-08-2014,
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110--வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப் பதாவது:-
மண் வளத்தை மேம்படுத்துதல், நவீன உத்திகளை கையாளுதல், விதை, நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், பயிர்க் கடன் வழங்குதல், தீவிர சாகுபடி முறை, நுண்ணீர் பாசனத் திட்டம், நெல் நடவு இயந்திரங்கள், களை எடுக்கும் கருவிகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குதல் போன்றவற்றின் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற் கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. இதன் காரணமாக, 2013-14 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் 110.65 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் நிலையை தமிழ்நாடு எய்தி மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண் தொழிலை
                                                                                           மேலும், . . . .. . . 

No comments:

Post a Comment