Friday 30 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

1½ ஆண்டுகளாக சோனியாகாந்தியை சந்திக்க முடியவில்லை காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக பரபரப்பு பேட்டி

சென்னை, ஜனவரி, 31-01-2015,
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன்
காங்கிரஸ் கட்சி தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் இருந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20–ந் தேதி மத்திய மந்திரி பதவியில் இருந்து திடீரென அவர் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சி மேலிடம் வலியுறுத்தியதை தொடர்ந்தே ஜெயந்தி நடராஜன் இந்த முடிவை எடுத்தார் என்று அப்போது கூறப்பட்டது. மேலும், பாராளுமன்ற தேர்தலையொட்டி, அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் எந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.
சோனியாகாந்திக்கு கடிதம்
கடந்த 1½ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட ஜெயந்தி நடராஜன், கடந்த நவம்பர் மாதம் 5–ந் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தின் நகல் நேற்று முன்தினம் திடீரென வெளிவந்தது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு, முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் எழுதியிருந்த கடிதத்தில், ‘‘என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னுடைய கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறோம். மந்திரி பொறுப்பில் 2 ஆண்டு காலம்தான் இருந்திருக்கிறேன். ஆனால், இரவு பகல் பாராமல் 30 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். மன்மோகன்சிங்கும், நீங்களும் கட்சியின் செய்தி தொடர்பாளராக நான் ஆற்றிய பணிகளை பாராட்டியிருக்கிறீர்கள். 10 ஆண்டு கால செய்தி தொடர்பாளர் பணியில் ஒரு தவறு கூட இழைத்ததும் இல்லை. ஆனால், இதுவரை என்னை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை’’ என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.
பேட்டி
இந்த கடிதம், தற்போது வெளியான நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                                    மேலும், . . . . .

தமிழகத்தில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை டெல்லியில் நடந்தது

புதுடெல்லி, ஜனவரி, 31-01-2015,
தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
1 லட்சம் அகதிகள்
இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மற்றும் படுகொலைகள் தீவிரமடைந்த போது, அங்கிருந்து சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர்.
இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலையீட்டினால், இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
தற்போது சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் அகதிகள் தமிழகத்தில் உள்ளனர்.
                                                                                                                     மேலும், . . . .

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது ஸ்ரீரங்கம் தொகுதியில் 29 பேர் போட்டி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 முனை போட்டி

திருச்சி, ஜனவரி, 31-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்பட 29 பேர் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
27-ந்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 28-ந்தேதி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
34 வேட்பு மனுக்கள் ஏற்பு
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அண்ணாதுரை, ஜனதா பரிவார் வேட்பாளர் ஹேமநாதன் ஆகிய முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளர் மனுக்கள், உரிய படிவங்கள் இணைக்கப்படாத சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன
                                                                                             மேலும், . . . . .

ஜெயலலிதா வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட பண பரிமாற்றம் நடைபெறவில்லை சசிகலா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரு, ஜனவரி, 31-01-2015,
ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட முறையில் எந்தவொரு பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று சசிகலா தரப்பு வக்கீல் வாதாடினார்.
சாட்சியங்களை படித்து காட்டினார்
பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 5-ந்தேதியில் இருந்து தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, சசிகலா தரப்பு வக்கீல் தனது வாதத்தை தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று 17-வது நாளாக நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு மூத்த வக்கீல் பசந்த்குமார்,
                                                                                                           மேலும், . . . . . 

Thursday 29 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

குடியரசு தின பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர் மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி காஷ்மீரில் நடந்த சம்பவம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள்


புதுடெல்லி, ஜனவரி, 30-01-2015,
குடியரசு தின பதக்கம் அறிவிக்கப்பட்ட மறுநாள் ராணுவ அதிகாரி ஒருவர் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பலியான விதம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ராணுவ அதிகாரி
வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் முனிந்திர நாத் ராயும் ஒருவர். அவர், மென்மையான இதயம் கொண்ட துணிச்சலான அதிகாரி என்று பெயர் பெற்றவர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளத்தால் தத்தளித்தபோது, துணிச்சலுடன் செயல்பட்டு, நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றினார். இதற்காகவே அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 50 ஆப்பிள் விவசாயிகளை சிம்லாவுக்கு அனுப்பி வைத்து, ஆப்பிள் விவசாயத்தின் லாப நுணுக்கங்களை கற்றுக் கொள்ள செய்தவர்.
குடும்பம்
இத்தகைய பின்புலம் கொண்ட கர்னல் முனிந்திர நாத் ராய்க்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டபோது, குடும்பத்தினரும், உறவினர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி, 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மறுநாள், அதாவது 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் திரால் பகுதியில் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நெஞ்சை உருக்கும் தகவல்கள்
2 நாட்கள் கழிந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:–
                                                                                                                     மேலும், . . . .

டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடபோவதில்லை கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்ப பா.ஜனதா முடிவு விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விக்கு பதில் தர தயார் என்கிறது ஆம் ஆத்மி


புதுடெல்லி, ஜனவரி, 30-01-2015,
டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ள பா.ஜனதா, கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்பப்போவதாக கூறி உள்ளது. விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் என ஆம் ஆத்மி பதிலடி தந்துள்ளது.
தேர்தல் அறிக்கை கிடையாது
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
                                                                                                                     மேலும், . . . .

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை வீரர்கள் வர இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை, ஜனவரி, 30-01-2015,
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
                                                                                                           மேலும், . . . . .

நெல்லையில் பயங்கரம் விவசாய சங்க தலைவர் வெட்டிக்கொலை தங்கை மகன் உள்பட 2 பேர் கைது


திருநெல்வேலி, ஜனவரி, 30-01-2015,
நெல்லையில், விவசாய சங்க தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தங்கை மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
விவசாய சங்க தலைவர்
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அசோகா வீதி 2–வது தெருவைச் சேர்ந்தவர், அய்யாப்பிள்ளை என்ற கணேசன் (வயது 54). விவசாயி. இவர் பாளையங்கால் விவசாயிகள் சங்க தலைவராகவும், பகிர்மான குழு உறுப்பினராகவும் இருந்தார். சேவா பாரதி என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் சமூக சேவையும் செய்து வந்தார்.
முதியோர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து உதவித்தொகை வாங்கி கொடுத்து உதவிகள் செய்தார்.
திருமணம் ஆகாத கணேசன், தன்னுடைய அண்ணன் முத்தையா வீட்டில் வசித்து வந்தார்.
                                                                                                  மேலும், . . . . .

Wednesday 28 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப ஆலோசனை டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை, ஜனவரி, 29-01-2015,
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழ் அகதிகள்
இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்வது குறித்து, நாளை (30-ந் தேதி) நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது அகதிகள் விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால், அது அவர்களின் விருப்பம் என்பதை பிரதமர் அறிவார்.
எனவே, இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த கூட்டம் கருதப்படும். மேலும், தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
3 லட்சம் பேர் வருகை
கடந்த 1983-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி முதல் இன்று வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் தமிழகத்திற்கு 4 கட்டங்களில் வந்துள்ளனர்
                                                                                                                   மேலும், . . . .

ஆசிரியையிடம் வழிப்பறி செய்த வழக்கு நீராவி முருகன், தப்பிச்செல்ல பாலத்தில் இருந்து குதித்தான் கை, கால் உடைந்த நிலையில் பிடிபட்டு கோர்ட்டில் ஆஜர்

ஆலந்தூர், ஜனவரி, 29-01-2015,
துரைப்பாக்கத்தில் ஆசிரியையிடம் வழிப்பறி செய்து பிடிபட்ட கொள்ளையன் நீராவி முருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட பாலத்தில் இருந்து குதித்தான்.
கை, கால் உடைந்த நிலையில் பிடிபட்ட அவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.
ஆசிரியையிடம் வழிப்பறி
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி வேலம் (வயது 37). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த மாதம் 19-ந் தேதி ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர். அவர்களில் ஒருவன் வேலத்திடம் கத்தியை காட்டி 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டதும், இருவரும் தப்பினர்.
இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                                                                                                        மேலும், . . . .

அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 34 பேர் மனுக்கள் ஏற்பு பா.ஜனதா வேட்பாளரின் மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு

திருச்சி, ஜனவரி, 29-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட 34 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் வளர்மதி (அ.தி.மு.க), ஆனந்த் (தி.மு.க), சுப்பிரமணியம் (பா.ஜ.க.), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள்.
வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மனோகரன் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் பால்கார் சிங் முன்னிலையில் இந்த பரிசீலனை நடந்தது.
முக்கிய கட்சி மனுக்கள் ஏற்பு
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரது மனுக்களில் எல்லா விவரங்களும் சரியாக இருந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
                                                                                                 மேலும், . . . . .

மதுவில் விஷம் கலந்து 4 பேரை கொன்றவர் போலீசில் சரண் பரபரப்பான வாக்குமூலம்


விழுப்புரம், ஜனவரி, 29-01-2015,
மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேரை கொலை செய்த பட்டதாரி வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
பட்டதாரி வாலிபர் சரண்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 35), எம்.காம்., எம்.பில். பட்டதாரியான இவர் முன்பு கள்ளக்குறிச்சியில் தனிப்பயிற்சி கல்லூரி(டூட்டோரியல்) நடத்தி வந்தார்.
கடந்த 24-ந்தேதி, இவர் தனது நண்பர்கள் கனகராஜ், மூர்த்தி, முனியன், பஞ்சாட்சரம் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து துடிக்கத்துடிக்க கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராமகிருஷ்ணன் மூக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜாவிடம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.
                                                                                                           மேலும், . . . .

Tuesday 27 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை: ‘நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன்’ கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை, ஜனவரி, 28-01-2015,
நான் பணிபுரியும் ராணுவ அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பி நிம்மதியை கெடுத்ததால் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்தேன் என்று கைதான ராணுவ வீரர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகராறு
மதுரை மாவட்டம் நாகையாபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்த ஏ.தொட்டியபட்டியில் வசிக்கும் கமலக்கண்ணன் (வயது 35) டெல்லியில் ராணுவவீரராக பணி புரிந்தார். இவருக்கும் கோமதிக்கும் (28) 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கோமதி கணவருடன் சேர்ந்து வாழாமல், மங்கள்ரேவு கிராமத்தில் தந்தை சின்னச்சாமியுடன் (முன்னாள் ராணுவவீரர்) வசித்து வந்தார். சேர்ந்து வாழ வருமாறு கமலக்கண்ணன் பலமுறை அழைத்தும் கோமதி மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஏ.தொட்டியபட்டியில் கோமதியின் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கமலக்கண்ணனும் கோமதி மற்றும் அவரது தந்தை சின்னச்சாமி, தாயார் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
5 பேர் வெட்டிக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணனும் அவரது தம்பி பரமசுந்தரமும் (28) சேர்ந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கோமதி,
                                                                                                   மேலும், . . . . 

ஆசிரியையிடம் நகை பறித்தது எப்படி? கொள்ளையன் நீராவி முருகன் நடித்துக் காட்டினான் அருகில் நின்ற ஆசிரியையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்

ஆலந்தூர், ஜனவரி, 28-01-2015,
சென்னை துரைப்பாக்கத்தில் கத்திமுனையில் ஆசிரியையிடம் சங்கிலி பறித்தது எப்படி? என்று கொள்ளையன் நீராவி முருகன் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காட்டினான்.
அப்போது அங்கு நின்ற பள்ளி ஆசிரியையின் காலில் விழுந்து கொள்ளையன் மன்னிப்பு கேட்டான்.
வலைத்தளத்தில் பரவிய கொள்ளை காட்சிகள்
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் (42). இவரது மனைவி வேலம் (37) தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி அன்று மாலை வேலை முடிந்த வேலம், ஸ்கூட்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்த 2 பேர்களில் ஒருவன், ஆசிரியை வேலத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 14 பவுன் சங்கிலி, செல்போன் ஆகியவற்றை
                                                                                                      மேலும், . .. .  .
ஸ்ரீரங்கம் தொகுதியில் மனுத்தாக்கல் முடிந்தது 46 பேர் வேட்பு மனு மனுவை வாபஸ் பெற 30-ந் தேதி கடைசி நாள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று முடிந்தது. மொத்தம் 46பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி, ஜனவரி, 28-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
அ.தி.மு.க-தி.மு.க.
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அன்றைய தினமே ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. வேட்பாளர் ஆனந்த், சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே அலுவலகத்தில் பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் கடந்த 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இறுதி நாள்
கடந்த 24-ந்தேதி வரை இரண்டு அலுவலகங்களிலும் சேர்த்து 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். 25-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும்,
                                                                                               மேலும், . . . . .

இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் முடிந்தது பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி ‘நமஸ்தே’ என்று கூறி விடை பெற்றார்

புதுடெல்லி, ஜனவரி, 28-01-2015,
இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒபாமா, பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். ‘நமஸ்தே’ என்று கூறி அவர் விடை பெற்றார்.
சவுதி அரேபியா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25-ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக, அங்கிருந்து நேரடியாக டெல்லி பாலம் விமானப்படை தளத்துக்கு சென்றார்.
அங்கு தயாராக நின்றிருந்த தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார்.
                                                                                           மேலும், . . . .

Monday 26 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை ஒபாமா, மோடி பார்வையிட்டனர்

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் பார்வையிட்டனர்.
புதுடெல்லி, ஜனவரி, 27-01-2015,
நாட்டின் 66-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் அஞ்சலி
வழக்கம்போல, டெல்லி ராஜபாதையில், பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்புக்கு வரும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை 9.45 மணிக்கு இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு வந்தார்.
வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மோடியும், மற்றவர்களும் ராஜபாதைக்கு வந்தனர். அங்கு வந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை பிரதமர் மோடி வரவேற்றார்.
                                                                                                                 மேலும், . . . . .

சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்

சென்னை, ஜனவரி, 27-01-2015,
இந்தியாவின் 66-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் கே.ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்.
சென்னையில் குடியரசு தின விழா
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக, காந்தி சிலை மூவர்ண கொடிபோன்று மலர் களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
விழா நடைபெற்ற இடத்திற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 7.52 மணிக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்பும், பின்பும் 15 போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். காரில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காமராஜர் சாலையில் இருபுறமும் குழுமியிருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர், விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
                                                                                                 மேலும், . . . . .

வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி உறுதி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிகள் களத்தில் நிற்கின்றன

சென்னை, ஜனவரி, 27-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் களத்தில் நிற்பதால், 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிவடைகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி என்பதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக எஸ்.வளர்மதி நிறுத்தப்பட்டுள்ளார். ஆளும் கட்சி என்பதால் வெற்றி பெறும் முனைப்பில், 27 அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
போட்டி யாருக்கு?
தி.மு.க. சார்பில் ஆனந்த் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
                                                                                                               மேலும், . . . . .

டெல்லி குடியரசுதின விழாவில் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக சக்ரா’ விருது மனைவி பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி, ஜனவரி, 27-01-2015,
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் சென்னை ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனுக்கு வழங்கப்பட்ட அசோக சக்ரா விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
தீவிரவாத தாக்குதல்
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன். ராணுவத்தின் ராஷ்டிரீய ரைபிள் படையின் (22-வது ராஜ்புத் பிரிவு) 44-வது பட்டாலியனில் மேஜராக பதவி வகித்து வந்த முகுந்த் காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், திடீரென ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் நுழைந்தனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ராணுவத்தை திறம்பட வழிநடத்திய முகுந்த் வரதராஜன், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 3 பயங்கர தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம்
இதைப்போல ராஷ்டிரீய ரைபிள் படையில் அங்கம் வகித்து வந்த நாயக் நீரஜ் குமார், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட குர்தாஜி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காயமடைந்த சக வீரர் ஒருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய இவர், ஒரு தீவிரவாதியையும் சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் நினைவிழக்கும் வரை, பாதுகாப்பான பகுதிக்கு நகர மறுத்து விட்டார். கடைசி வரை தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திய அவர் இறுதியில் வீரமரணத்தை தழுவினார்.
மனைவி பெற்றுக்கொண்டார்
இந்த இரு வீரர்களின் துணிச்சல் மிக்க தீரச்செயலை பாராட்டி, ராணுவத்தின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
                                                                                                                        மேலும், . . . . . . 

Sunday 25 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் மோடி-ஒபாமா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இருவரும் கூட்டாக அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இருந்து வந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, டெல்லியில் நேற்று பிரதமர் மோடிக்கும், ஒபாமாவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
புதுடெல்லி, ஜனவரி, 26-01-2015,
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார்.
டெல்லியில் ஒபாமா
தனது அழைப்பை ஏற்று, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த ஒபாமா- மிச்செல் தம்பதியினரை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்திற்கு மரபு மீறி நேரில் சென்று வரவேற்றார். இது ஒரு சிறப்பு நிகழ்வாகும். தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் ஒபாமாவுக்கு சம்பிரதாய ரீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து நேராக தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று ஒபாமா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து டெல்லி ஐதராபாத் பவனுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அங்கே சிறிது நேரம் நடந்து கொண்டே சாதாரண முறையில் கலந்துரையாடினர்.
தொடர்ந்து இரு தலைவர்களும், அதிகாரிகள் சூழ்ந்திருக்க, பேச்சுவார்த்தை நடத்தினர்.
                                                                                                      மேலும், . . . .

மரபுகளை மீறி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜனவரி, 26-01-2015,
இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
கட்டித்தழுவி வரவேற்பு
இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று டெல்லி வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர், டெல்லி விமான நிலையத்தில் காலையில் வந்திறங்கினார்.
அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு வந்திருந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய ஒபாமாவை மோடி கட்டித்தழுவியும், கை குலுக்கியும் வரவேற்றார். ஒபாமாவுடன் வந்த அவரது மனைவி மிச்செல்லையும் மோடி வரவேற்றார்.
மன்மோகன் சிங்
பொதுவாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை விமான நிலையத்தில் மத்திய மந்திரி அல்லது உயர் அதிகாரிகள் வரவேற்பது தான் மரபாகும்.
                                                                                                  மேலும், . . . . 

சங்கராபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூர கொலை தலைமறைவான பட்டதாரி வாலிபருக்கு வலைவீச்சு

சங்கராபுரம், ஜனவரி, 26-01-2015,
மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தலைமறைவான பட்டதாரி வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மது விருந்துக்கு அழைப்பு
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 35). எம்.காம்., எம்.பில். பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ்(30) மற்றும் அவருடைய நண்பர்களான மூர்த்தி(32), முனியன்(65) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது ராமகிருஷ்ணன், தனது நண்பரான வேலாஞ்சேரியை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான பஞ்சாட்சரம்(40) என்பவரையும் அழைத்து வந்தார்.
                                                                                                             மேலும், . . . . .

இன்று குடியரசு தினம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜனவரி, 26-01-2015,
நாட்டின் குடியரசு தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நம் மோடியின் நல்லரசை நோக்கி வல்லரசுகளும் நாடிவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், நம் மோடியின் நல்லரசு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. குடியரசை நாம் பெற்ற பின்பு இப்பொழுதுதான் நம் நாட்டின் அரசு குடிமக்களின் அரசாக பாமர மக்களின் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
உணவு, உறைவிடம் போலவே சுகாதாரமும் அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டிருக்கிறது.
                                                                                                மேலும், . . . . .

Saturday 24 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் ஒபாமா இன்று டெல்லி வருகை பிரதமர் மோடியை பிற்பகலில் சந்தித்து பேசுகிறார்

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஒபாமா, இன்று காலை டெல்லி வந்து சேருகிறார். பிற்பகலில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.
புதுடெல்லி, ஜனவரி, 25-01-2015
குடியரசு தின விழா நாளை (திங்கட்கிழமை) மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு விருந்தினர் ஒபாமா
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவருடன் மனைவி மிச்செல், உயர் அதிகாரிகள் குழுவினரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. எனவே வரலாறு காணாத வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று வருகிறார்
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக ஒபாமா, அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். இந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.
டெல்லியில் பாலம் என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஒபாமாவின் விமானம் தரை இறங்குகிறது. அங்கு அவரை மத்திய மந்திரி பியூஷ் கோயல் வரவேற்கிறார்.
                                                                                                     மேலும், . . . . 
கிருஷ்ணகிரி அருகே முகமூடி கொள்ளையர் அட்டகாசம் வங்கி லாக்கரை உடைத்து ரூ.12 கோடி நகைகள் கொள்ளை வடமாநில கும்பல் கைவரிசையா?


கிருஷ்ணகிரி, ஜனவரி, 25-01-2015
கிருஷ்ணகிரி அருகே வங்கிக்குள் முகமூடி கும்பல் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6,033 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. அவர்கள் வடமாநில கொள்ளையர்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேங்க் ஆப் பரோடா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர மாநில எல்லையையொட்டி குந்தாரப்பள்ளியை அடுத்து ராமாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தேசியமயமாக்கப்பட்ட ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியின் குந்தாரப்பள்ளி கிளை இயங்கி வருகிறது. 30 வருடங்கள் பழமையான இந்த வங்கியில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 52 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.
இந்த சுற்றுவட்டார கிராமங்களுக்கு இது ஒன்று தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கி. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார்கள். அந்த நகைகள் 3 பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கர்) பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. வங்கியின் மேலாளராக ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்த உதயபாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நகைகள் கொள்ளை
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வங்கியின் மேலாளர் உதயபாஸ்கர் வங்கி கதவை திறந்தார். அப்போது வங்கிக்குள் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் ஒரு லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயபாஸ்கர் இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
                                                                                                         மேலும், . . . . 

தாம்பரம் பைபாஸ் சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி 14 பேர் காயம்


தாம்பரம், ஜனவரி, 25-01-2015
தாம்பரம் பைபாஸ் சாலையில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். 14 பேர் காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பிரேக் பிடித்தபோது விபத்து நேர்ந்தது.
அரசு பஸ்
சென்னை கோயம்பேட்டில் இருந்து சேலத்திற்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று காலை 10.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ரங்கநாதன் (வயது 50) ஓட்டினார். கண்டக்டர் ஜெய்சங்கர்(45) மற்றும் 20 பயணிகள் பஸ்சில் இருந்தனர். தாம்பரம் அருகே திருநீர்மலை பகுதியில் பஸ் வரும்போது லேசாக மழை தூறியது.
அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த டிரைவர், பஸ்சை வலது பக்கமாக திருப்ப முயன்றார்.
சாலையோரம் கவிழ்ந்தது
ஆனால் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் இடதுபுறமாக சாலையின் ஓரம் கவிழ்ந்தது.
                                                                                                        மேலும், . .  . .

ஆடிட்டர் குருமூர்த்தியின் சவாலை ஏற்கிறேன் ‘குற்றத்தை நிரூபித்துக் காட்டினால், அரசியலை விட்டே விலக தயார்’ தயாநிதி மாறன் அறிக்கை

சென்னை, ஜனவரி, 25-01-2015,
ஆடிட்டர் குருமூர்த்தியின் சவாலை ஏற்க தயார் என்றும், குற்றத்தை நிரூபித்துக் காட்டினால், தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்தியமந்திரி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முறிந்த கேள்வி அம்பு
என் மீது கூறப்பட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கம் தந்துள்ளேன்.
                                                                                        மேலும், . . . . 

Friday 23 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு ‘மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும்’

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தானை கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்.
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2015,
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
ஒபாமா நாளை வருகிறார்
தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேருகிறார்.
இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.
பாகிஸ்தானுக்கு கண்டிப்பு
அதில், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டித்து இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது:-
                                                                                                                மேலும், . . . .

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுப்பிரமணியம் போட்டி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

சென்னை, ஜனவரி, 24-01-2015,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. போட்டியிட விரும்பியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்னும் 2 நாட்களில் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவும் தரவில்லை என்றும் அறிவித்த நிலையில், மற்றொரு பிரதான கட்சியான தே.மு.தி.க.வின் ஆதரவை பெறுவதற்காக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
                                                                                                                    மேலும், . . . .

தயாநிதி வீட்டில் தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டது எப்படி? அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல்., 'மாஜி' ஊழியர்

சென்னை, ஜனவரி, 24-01-2015,
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் என்ற முறையில், சென்னையில் உள்ள தயாநிதி வீட்டுக்கு, ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், நவீன தொழில் நுட்பத்தை இணைத்து, சன் 'டிவி' அலுவலகத்துக்கு, மடை மாற்றி விட்டார்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலருமான மதிவாணன் கூறினார். இவர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'மாஜி' ஊழியர்.
புகைப்படம், வீடியோ
தயாநிதி வீட்டில், சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைக்கப்பட்டது குறித்து, அவர் கூறியதாவது: தயாநிதி, 2004 - 2007 கால கட்டத்தில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், அவரது சென்னை வீட்டுக்கு, போன் இணைப்பு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில், ஒருங்கிணைந்த 'டேட்டா நெட்வொர்க்' சேவை (ஐ.எஸ்.டி.என்.,) அறிமுகமானது. அதற்கு முன், தொலைபேசியில், பேச மட்டுமே முடியும். இப்புதிய சேவை மூலம், தொலைபேசியில் பேசுவதோடு, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட அனுப்பும் சேவைகளையும் பயன்படுத்த முடியும். இவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது தான், ஐ.எஸ்.டி.என்., சேவை.சென்னை, போட்கிளப் பகுதியில் உள்ள, தயாநிதி வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது. சென்னை, மாம்பலம் தொலைபேசி இணைப்பகம் மூலம், இந்த இணைப்பில், 323 சர்க்யூட்கள் வடிவமைக்கப்பட்டன.
வெளிப் பார்வைக்கு, இணைப்பு ஒன்றாக தெரிந்தாலும், 323 தொலைபேசிகள் இயங்கும். இவை அனைத்திலும், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது.
                                                                                                                      மேலும், . . .. 

இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்தது

புதுடெல்லி, ஜனவரி, 24-01-2015,
இந்திய சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்தது.
குடியரசு தினவிழா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக, அவரது அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக குடியரசுத்தின விழாவுக்காக ராஜபாதையில் ஒபாமா வரும்போது, இந்த காரில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய ஜனாதிபதியுடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை ஒபாமா கடைப்பிடித்தால், இந்தியாவில் பீஸ்ட் காரை பயன்படுத்தாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
நகரும் கோட்டை
இதற்கிடையே ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரில் அடங்கியுள்ள மலைக்க வைக்கும் வசதிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘நகரும் கோட்டை’ என வர்ணிக்கப்படும் இந்த கார், 8 டன் எடை கொண்டது.
இந்த கார் 8 அங்குல தடிமன் கொண்ட உடல் கவசத்தையும், 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது.
                                                                                                               மேலும், . . . . 

Thursday 22 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

உதவியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்த விவகாரம்: ‘எனக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்’ கருணாநிதியை சந்தித்த பின் தயாநிதிமாறன் பேட்டி

சென்னை, ஜனவரி, 23-01-2015,
உதவியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்த விவகாரம் தொடர்பாக, எனக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை என்றும், நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் கூறினார்.
3 பேர் கைது
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தி.மு.க.வை சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு கொடுத்துக் கொண்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், ஏற்கனவே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தயாநிதிமாறனிடம் உதவியாளராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கருணாநிதியுடன் சந்திப்பு
அதனைத் தொடர்ந்து, தயாநிதிமாறனும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8.50 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை தயாநிதிமாறன் சந்தித்து பேசினார். அவருடன் வக்கீல் சண்முகசுந்தரம் உடன் இருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                               மேலும், . . . . .

என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை: ‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும், என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சந்தோஷம்
எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று தயாநிதிமாறன் சொன்னதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால், 2007-ம் ஆண்டு தான் இந்த விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது அப்போது. 323 ஐ.எஸ்.டி. இணைப்புகள் தயாநிதிமாறன் வீட்டில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் பெயரில் பதுக்கப்பட்டு இருந்தது.
அதாவது, கம்ப்யூட்டரில் இல்லாத, யாருக்குமே தெரியாத, சில பேருக்கு மாத்திரம் தெரிந்த மாதிரி இந்த 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு, அதில் இருந்து பாதாள குழி தோண்டி கேபிள் மூலம் சன் டி.வி.யில் இணைத்தார்கள். இதுபற்றி விசாரித்த சி.பி.ஐ., இது உண்மை, இது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனுமதி தேவை என்று 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்கள்.
தயாநிதிமாறன் செய்த தவறு
அப்போது யார் அதிகாரத்தில் இருந்தார்கள். அப்போது தயாநிதிமாறன் தி.மு.க.வில் இல்லை. அவர் 2007-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க.வை விட்டு விலகினார்.
                                                                                           மேலும், . . . . .

திமுக வேட்பாளர் ஆனந்த் சொத்து மதிப்பு ரூ.6.51கோடி

ஸ்ரீரங்கம், ஜனவரி, 23-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.51 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து விவரம்:
கையிருப்பு: வேட்பாளர் என். ஆனந்திடம் ரூ. 2 லட்சம், அவரது மனைவி ஏ. சௌமியாவிடம் ரூ. 1 லட்சம். மகள் ஏ. அக் சிதாவிடம் கையிருப்பு இல்லை.
வேட்பாளர் என். ஆனந்திடம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார், ரூ.20,000 மதிப்புள்ள யமஹா இரு சக்கர வாகனம். ஆனந்திடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுப் பத்திரம்.
தங்க நகைகள் மதிப்பு: என். ஆனந்திடம் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 100 கிராம், அவரது மனைவி சௌமியாவிடம் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 825 கிராம் தங்கம்,
                                                                                                           மேலும், . . . . 

ஒபாமாவின் மகள்கள் இந்தியா வரவில்லை பள்ளியில் விடுமுறை இல்லை

வாஷிங்டன், ஜனவரி, 23-01-2015,
பள்ளிக்கு விடுமுறை இல்லாததால், ஒபாமாவுடன் அவரது மகள்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாஷா, மலியா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, 3 நாள் அரசு முறை பயணமாக 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அவர், அதன் பிறகு தாஜ்மகால் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கிறார்.
வழக்கமாக ஒபாமாவின் வெளிநாட்டு பயணங்களின் போது அவருடன், மனைவி மிச்செல், மகள்கள் சாஷா (வயது 16), மலியா (13) ஆகியோரும் செல்வதுண்டு. கடந்த ஆண்டு மிச்செல் சீனாவுக்கு சென்ற போதும், அவருடன் மகள்களும் சென்றிருந்தனர்.
பள்ளிக்கே முன்னுரிமை
ஆனால் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது, அவருடன் மனைவி மிச்செல் மட்டுமே வருகிறார். அப்போது பள்ளிக்கு விடுமுறை இல்லாததால், சாஷாவும், மலியாவும் இந்தியாவுக்கு வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகள்கள் இருவரும், தங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புகிறார்கள் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
                                                                                                      மேலும், . . . .

Wednesday 21 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (22-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (22-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு

பேரையூர், ஜனவரி, 22-01-2015,
போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பெண் போலீஸ்காரர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சலுப்பபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் கருப்பாயி (வயது 32). இவர் கடந்த 2005-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு கருப்பாயிக்கும், அவருடைய தாய் மாமாவான பெத்தண்ணசாமி (35) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
                                                                                                                        மேலும், . . . .

அம்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வருகை தேர்தல் கமிஷன் ‘கெடுபிடி’

சென்னை, ஜனவரி, 22-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி வருகை தர இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
போலீஸ் பார்வையாளர்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான செலவீன பார்வையாளராக ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஸ்ரீதரதோரா ஏற்கனவே வந்துள்ளார். 22-ந் தேதி பொதுப்பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பல்கார் சிங் வருகிறார்.
இவர்கள் தவிர, போலீஸ் பார்வையாளராக அசாமைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினோத்குமார் இந்த வாரத்தில் வந்து சேருவார்.
                                                                                                                      மேலும், . . . .

கடை உரிமையாளரை கொன்று நகை கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பூந்தமல்லி, ஜனவரி, 22-01-2015,
நகை வாங்குவது போல் நடித்து நகை கடை உரிமையாளரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
நகை கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூராராம் (வயது 65). இவருடைய மகன்கள் கானாராம் (30), குணாராம் என்ற கணேஷ் (28). இவர்கள் கடந்த பல வருடங்களாக மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த 14-4-2012 அன்று கடையில் கணேஷ் மட்டும் தனியாக இருந்தார். அண்ணன் கானாராம் வேலை காரணமாக வெளியே சென்று விட்டார்.
                                                                                                                 மேலும், . . . .

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செங்கல்பட்டு கோர்ட்டில் ஒருவர் சரண்


பூந்தமல்லி, ஜனவரி, 22-01-2015,
பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் கண் எதிரே கைதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கைதி வெட்டிக்கொலை
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜன் (வயது 34). இவர், கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவரின் மனைவியை கிண்டல் செய்தபோது ஏற்பட்ட தகராறில் முருகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் வரதன் மீது உள்ளது.
                                                                                                                     மேலும், . . . . 

Tuesday 20 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது 9 பயணிகள் உடல் நசுங்கி பலி பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம்

ஒகேனக்கல், ஜனவரி, 21-01-2015,
ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது. இந்த கோர விபத்தில் 9 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் தர்மபுரி, ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக பன்னீர்செல்வம் என்பவர் இருந்தார்.
இந்த பஸ், தர்மபுரி பஸ் நிலையத்துக்கு 11.45 மணிக்கு வந்துவிட்டு ஒகேனக்கல்லை அடைவதற்கு முன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
மதியம் 1 மணியளவில் மலைப்பாதையில் உள்ள கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற வாகனத்தை டிரைவர் சிவக்குமார் முந்திச்செல்ல முயன்றார்.
பள்ளத்தில் உருண்டது
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் இடதுபுற தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
                                                                                                          மேலும், . . . . 

13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு, ஜனவரி, 21-01-2015,
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர்.
13-வது திருத்தம்
அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இதுவரை அதிகார பகிர்வு கிடைக்கவில்லை.
ஆனால், 13-வது சட்ட திருத்தத்தை எழுத்திலும், செயலிலும் அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
                                                                                                                      மேலும், . . . .

பூந்தமல்லியில் பயங்கரம் கோர்ட்டு வளாகத்தில் கைதி வெட்டிக்கொலை அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழியா? போலீசார் விசாரணை

பூந்தமல்லி, ஜனவரி, 21-01-2015,
பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்தில் நேற்று கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழியாக சம்பவம் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொலை குற்றவாளி
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜன் (வயது 34). கடந்த 2010–ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவரது மனைவியை கிண்டல் செய்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது முருகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3–வது குற்றவாளியாக வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2–ல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் வரதன் மீது உள்ளது. இந்த வழக்கும் பூந்தமல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கோர்ட்டில் ஆஜராக வந்த கைதி
இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு வரதனை போலீசார் வேனில் அழைத்து வந்தனர்.
                                                                                                                 மேலும், . . . .

சென்னை கொளத்தூர் அருகே அடுத்தடுத்து3 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியதில்4 பேர் பலி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக அதிர்ச்சி தகவல்

செங்குன்றம், ஜனவரி, 21-01-2015,
கொளத்தூர் அருகே அதிவேகமாக சென்ற லாரி அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அதிவேகமாக சென்ற லாரி
சென்னை பாடியிலிருந்து மணலி நோக்கி 200 அடி சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஒரு மினி லாரி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
கொளத்தூர் அருகே உள்ள செந்தில் நகரில் அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பெண் பலி
அதே லாரி தொடர்ந்து தறிகெட்டு ஓடி 2–வதாக மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
                                                                                                         மேலும், . . . . .