Friday 16 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை, பூங்காக்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


சென்னை, ஜனவரி, 17-01-2015,
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரைகள், பூங்காக்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் காணும் பொங்கலன்று குடும்பத்துடன் மெரினா, பட்டினப்பாக்கம், எலியட்ஸ், திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரைகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருககாட்சி சாலை போன்ற இடங்களுக்கு சென்று பொழுதை உற்சாகமாக கழிப்பார்கள்.
இதனால் இந்த இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கடற்கரைகளில் மணல் பரப்பு தெரியாத அளவுக்கு எங்கும் மக்கள் கூட்டமே கடல்போல இருக்கும். இதனால் இன்று கடலில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
                                                                                மேலும்,. . . . 

எம்.ஜி.ஆர். புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அனைவரின் அரசியல் பணிகளும் அமைய வேண்டும் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு, ஜெயலலிதா கடிதம்

சென்னை, ஜனவரி, 17-01-2015,
எம்.ஜி.ஆரின் கனவுகளுக்கேற்ப அ.தி.மு.க. ஆட்சி எப்பொழுதும் நடைபோட்டிட, எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் நம் அனைவருடைய அரசியல் பணிகளும் அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா கடிதம்
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
                                                                                                                   மேலும், . . . . .

குடியரசு தின விழாவின் போது இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் ராணுவம் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ஜனவரி, 17-01-2015,
குடியரசு தின விழாவின் போது இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக சுமார் 200 தீவிரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது.
அதிர்ச்சி தகவல்
இந்திய குடியரசு தினவிழா 26-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த விழாவின் போது நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
                                                                                          மேலும், . . . . .

ஜல்லிக்கட்டு நடைபெறாததால் சோகம்: கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் அலங்காநல்லூர், பாலமேட்டில் கடைகள் அடைப்பு


அலங்காநல்லூர், ஜனவரி, 17-01-2015,
ஜல்லிக்கட்டு நடைபெறாததால் அலங்காநல்லூர், பாலமேட்டில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அனுமதி இல்லை
தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் கோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற கோர்ட்டு அனுமதி கிடைத்து விடும் என்று மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்பார்த்தனர்.
இதையொட்டி மதுரையில் ஆர்ப்பாட்டம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதையொட்டி அவனியாபுரத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் திடலில் தைப்பொங்கல் தினமான நேற்றுமுன்தினம் (15-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடைபெறாததால் களை இழந்து காணப்பட்டது.
இதை கண்டித்து கருப்புச்சட்டை அணிந்து பேரணியாக செல்லப்போவதாக மாடுபிடி வீரர்கள் தெரிவித்தனர்.
                                                                                                மேலும், . . . . .

No comments:

Post a Comment