Sunday 25 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் மோடி-ஒபாமா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இருவரும் கூட்டாக அறிவிப்பு

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இருந்து வந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, டெல்லியில் நேற்று பிரதமர் மோடிக்கும், ஒபாமாவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
புதுடெல்லி, ஜனவரி, 26-01-2015,
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார்.
டெல்லியில் ஒபாமா
தனது அழைப்பை ஏற்று, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த ஒபாமா- மிச்செல் தம்பதியினரை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்திற்கு மரபு மீறி நேரில் சென்று வரவேற்றார். இது ஒரு சிறப்பு நிகழ்வாகும். தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் ஒபாமாவுக்கு சம்பிரதாய ரீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து நேராக தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று ஒபாமா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து டெல்லி ஐதராபாத் பவனுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அங்கே சிறிது நேரம் நடந்து கொண்டே சாதாரண முறையில் கலந்துரையாடினர்.
தொடர்ந்து இரு தலைவர்களும், அதிகாரிகள் சூழ்ந்திருக்க, பேச்சுவார்த்தை நடத்தினர்.
                                                                                                      மேலும், . . . .

மரபுகளை மீறி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜனவரி, 26-01-2015,
இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
கட்டித்தழுவி வரவேற்பு
இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று டெல்லி வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர், டெல்லி விமான நிலையத்தில் காலையில் வந்திறங்கினார்.
அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு வந்திருந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய ஒபாமாவை மோடி கட்டித்தழுவியும், கை குலுக்கியும் வரவேற்றார். ஒபாமாவுடன் வந்த அவரது மனைவி மிச்செல்லையும் மோடி வரவேற்றார்.
மன்மோகன் சிங்
பொதுவாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை விமான நிலையத்தில் மத்திய மந்திரி அல்லது உயர் அதிகாரிகள் வரவேற்பது தான் மரபாகும்.
                                                                                                  மேலும், . . . . 

சங்கராபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூர கொலை தலைமறைவான பட்டதாரி வாலிபருக்கு வலைவீச்சு

சங்கராபுரம், ஜனவரி, 26-01-2015,
மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தலைமறைவான பட்டதாரி வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மது விருந்துக்கு அழைப்பு
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 35). எம்.காம்., எம்.பில். பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ்(30) மற்றும் அவருடைய நண்பர்களான மூர்த்தி(32), முனியன்(65) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது ராமகிருஷ்ணன், தனது நண்பரான வேலாஞ்சேரியை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான பஞ்சாட்சரம்(40) என்பவரையும் அழைத்து வந்தார்.
                                                                                                             மேலும், . . . . .

இன்று குடியரசு தினம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஜனவரி, 26-01-2015,
நாட்டின் குடியரசு தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நம் மோடியின் நல்லரசை நோக்கி வல்லரசுகளும் நாடிவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், நம் மோடியின் நல்லரசு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. குடியரசை நாம் பெற்ற பின்பு இப்பொழுதுதான் நம் நாட்டின் அரசு குடிமக்களின் அரசாக பாமர மக்களின் அரசாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
உணவு, உறைவிடம் போலவே சுகாதாரமும் அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டிருக்கிறது.
                                                                                                மேலும், . . . . .

No comments:

Post a Comment