Saturday 17 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மீனவர்கள் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினை பற்றி ஆலோசனை 3 நாள் பயணமாக இலங்கை மந்திரி டெல்லி வருகை பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு

3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா நேற்று டெல்லி வந்தார். அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மீனவர்கள் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி, ஜனவரி, 18-01-2015,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
புதிய அதிபர்சிறிசேனா
அங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ராஜபக்சே, சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா அமோக வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்று உள்ளார். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார்.
அதிபர் தேர்தலில் தமிழர்களின் பெருவாரியான ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா, முன்பு ராஜபக்சே அரசில் மந்திரியாக இருந்தவர்.
                                                                                                                                மேலும்,. . . . .

காணும் பொங்கலையொட்டி கடற்கரைகள், உயிரியல் பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்


சென்னை, ஜனவரி, 18-01-2015,
காணும் பொங்கலையொட்டி கடற்கரைகளிலும், அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காணும் பொங்கல்
பொங்கல் விழாவின் 3-வது நாளான நேற்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நாளில் விவசாய தொழிலாளர்கள் தங்கள் நிலச்சுவான்தார்களை சந்தித்து பரிசு பெறுவார்கள். உற்றார்-உறவினர்களும் வீடுகளிலோ, கோவில்களிலோ ஒருவரை ஒருவர் கண்டு தாங்கள் விளைவித்த பொருட்களை பரிசாக வழங்கி மகிழ்வார்கள்.
ஆனால் இப்போது இந்த சம்பிரதாயங்கள் மறைந்து, பொழுதுபோக்கு இடங்களை காண்பது என்ற வகையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளில் சென்று பொழுதை கழிக்கின்றனர்.
உயிரியல் பூங்கா
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர். முந்தைய காலங்களில் மாட்டு வண்டிகளில் வந்த நிலைமை மாறி, தற்போது டெம்போ போன்ற சரக்கு வாகனங்களில் குடும்பத்தினருடன் மதிய உணவு பொட்டலங்களுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்தனர்.
அவர்களுக்காக 20 சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மட்டும் 61 ஆயிரத்து 175 பேர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர்.
                                                                                                                    மேலும்,. . . . 

98-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


சென்னை, ஜனவரி, 18-01-2015,
எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தலைமைக்கழகத்திலும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தும், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் அ.தி.மு.க.வினரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களும் கொண்டாடினார்.
பல்வேறு இடங்களில் தெரு முனைகளில் பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் எம்.ஜி.ஆர். படம் வைக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.
                                                                                                   மேலும், . . . .

தடுப்பூசி போட்டதால் இறந்ததா? கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தைகள் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு


சென்னை, ஜனவரி, 18-01-2015,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். தடுப்பூசி போட்டதால் தான் குழந்தைகள் இறந்ததாக உறவினர்கள் முற்றுகையிட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. .
தடுப்பூசி
சென்னை அரும்பாக்கம் ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 30). இவருடைய மனைவி சரண்யா (25). இவர்களுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி ராஜாத்தி (21). இவர்களுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்த 2 குடும்பத்தாருடைய பச்சிளம் குழந்தைகள் உள்பட மொத்தம் 51 குழந்தைகளுக்கு கடந்த 7-ந் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
                                                                                                              மேலும், . . . .

No comments:

Post a Comment