Sunday 11 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பிரதமர் மோடியுடன் அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு ஒபாமாவின் இந்திய வருகை குறித்து முக்கிய ஆலோசனை

காந்திநகர், ஜனவரி, 12-01-2015,
பிரதமர் மோடியை அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், ஒபாமாவின் இந்திய வருகை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஒபாமா இந்தியா வருகை
டெல்லியில் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்திய வருகையின்போது ஒபாமா, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து நேரடி பேச்சுவார்த்தையும் நடத்துகிறார். அப்போது இரு தரப்பு உறவு விவகாரம் மட்டுமல்லாது, சர்வதேச விவகாரங்கள், தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். ஒபாமா கலந்துகொள்வதால், குடியரசு தின கொண்டாட்டங்களில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மோடியுடன் கெர்ரி சந்திப்பு
இந்த நிலையில், குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டுக்கு இடையே அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஒபாமா வருகை குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
                                                                                                 மேலும், . . . . . 

ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக புகார் ராஜபக்சே மீது விசாரணை இலங்கை புதிய அரசு நடவடிக்கை

அதிபர் தேர்தல் முடிவு வெளியான போது ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, ராஜபக்சே மீது விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
கொழும்பு, ஜனவரி, 12-01-2015,
இலங்கையில் கடந்த 8-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கிறார்.
ராஜபக்சே படுதோல்வி
10 ஆண்டுகள் அதிபராக இருந்த ராஜபக்சே இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
8-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், அன்று இரவு 7 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிறிசேனா முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
ராணுவ புரட்சிக்கு சதி
இதனால் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக வராத நிலையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக தேர்தல் முடிவை ரத்து செய்வதற்கும்,
                                                                                                             மேலும், . . . .

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் வன்முறை தி.மு.க. வேட்பாளர் மண்டை உடைந்தது



ஆலந்தூர், ஜனவரி, 12-01-2015,
பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் தி.மு.க வேட்பாளரின் மண்டை உடைந்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
கண்டோன்மெண்ட் தேர்தல்
சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு 7 வார்டுகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்க நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதா, விடுதலை சிறுத்தைகள் உள்பட 94 பேர் களத்தில் உள்ளனர்.
7 வார்டுகளில் 11 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு 29 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. கண்டோன்மெண்ட் போர்டில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரியும், தாசில்தாருமான ஆர்.அருளானந்தம், கண்டோன்மெண்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
வேட்பாளர் மண்டை உடைந்தது
ஆண்களும், பெண்களும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
                                                                                                        மேலும், . . . . .

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட முன் வர வேண்டும் கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, ஜனவரி, 12-01-2015,
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தொடக்கமாக சீரும் சிறப்புமாக கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் புத்தாண்டு
9-ந்தேதி அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொங்கல் திருநாளை-தமிழ்ப்புத்தாண்டாகத் தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று 3-வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
23-1-2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆற்றிய உரையில், தமிழர்களுக்கென்று “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டுத்தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது’ என்றும் அறிவித்தார்.
கவர்னர் அறிவிப்பு
மறைமலை அடிகள் தலைமையில் வி.கல்யாண சுந்தரனார், கா.சுப்பிரமணியப்பிள்ளை,
                                                                                                      மேலும், . . . . . 

No comments:

Post a Comment