Thursday 15 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க., அனைத்து பூத்களிலும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, ஜனவரி, 16-01-2015,
பா.ஜ., 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அ.தி.மு.க., சத்தமின்றி சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஒவ்வொரு பூத்திலும், 90 வாக்காளர்களுக்கு ஒரு கமிட்டி உறுப்பினர் என்ற வகையில், நிர்வாகிகள் நியமனம் நடக்கிறது.தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு மாற்றாக உருவெடுக்க பா.ஜ., மும்முரம் காட்டி வருகிறது. கால அவகாசம் கொடுத்தால், பா.ஜ., சாதித்து விடும் என அ.தி.மு.க., எண்ணுகிறது. எனவே விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த, அ.தி.மு.க., தயாராகிவருகிறது. இதற்கு தயாராகும் படி, நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலை போல், சட்டசபை தேர்தல் களம் அ.தி.மு.க.,விற்கு எளிமையாக இருக்காது என, அக்கட்சி தலைமை கருதுகிறது.
                                                                                                                      மேலும், . . . . 

சோனியா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டதால் பரபரப்பு

புதுடெல்லி, ஜனவரி, 16-01-2015,
சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதியிருக்கும் புத்தகம் 'தி ரெட் ஸேரி'. இந்த புத்தகம் 2008-ம் ஆண்டு முதலில் ஸ்பெயின் மொழியில் 'El Sari Rojo' என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான தகவல்கள் உண்மையில்லாதவை என காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதை எழுதிய ஆசிரியர் மோரோவுக்கு 2010-ம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட முடியாமல் இருந்தது.
                                                                                                                       மேலும், . . . .  .

கிரன் பேடி பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டி?

புதுடெல்லி, ஜனவரி, 16-01-2015,
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரன் பேடி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வந்த கிரன் பேடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை நிலையத்தில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடையே பேசிய கிரன் பேடி, பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து, அதனால் ஏற்பட்ட ஈர்ப்பினால் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்ததாகவும், வரும் 7-ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில்
                                                                                                                   மேலும், . . . . 

மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தை சீனாவில் பரபரப்பு

பெய்ஜிங், ஜனவரி, 16-01-2015,
சீனாவில் Oriental Goddess and Mountain spirit என்ற டைட்டிலில் பெயிண்டிங் கலெக்ஷன் செய்வதற்காக ஒரு ஓவியர் தனது 23 வயது மகளையே நியூட் மாடலாக வைத்து நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை வீசி வருகிறது. அவர் வரைந்த அவரது மகளின் ஓவியங்கள் பேஸ்புக்கிலும் வேகமாக காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சீனாவை சேர்ந்தவர் லீ ஜூவாங்பிங். ஓவியரான இவர் ஆயில் பெயிண்டிங்கில் மிக பிரபலமானவர். அவரது மகள் லீ குவின் (23). பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவித்து நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்தார் ஜூவாங்பிங். பின் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை அப்படியே ஓவியமாக வரைந்துள்ளார். இதற்கு உலகெங்கிலுமுள்ள ஓவியக் கலைஞர்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது.
                                                                                                                 மேலும், . . . . .

No comments:

Post a Comment