Monday 12 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

வேட்பு மனு தாக்கல் 19-ந் தேதி தொடங்குகிறது காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ல் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி, ஜனவரி, 13-01-2015,
தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஸ்ரீரங்கம் தொகுதி
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்தை விட 41 ஆயிரத்து 848 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் 27-ந் தேதி 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, அவர் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும், முதல்-அமைச்சர் பதவியையும் இழந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.
பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல்
இந்த நிலையில், டெல்லியில் நேற்று டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தார். அப்போது தேர்தல் கமிஷனர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம் ஜைதி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்படி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி நடைபெறுகிறது.
                                                                                                         மேலும், . . . . .

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: சொத்துவரி செலுத்தாத நிறுவனங்கள் முன்பு எச்சரிக்கை பதாகைகள் ‘தண்டோரா’ அடித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை, ஜனவரி, 13-01-2015,
சென்னை நுங்கம்பாக்கத்தில் சொத்துவரி செலுத்தாத நிறுவனங்கள் முன்பு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பதாகைகளை ஒட்டினார்கள். மேலும், ‘தண்டோரா’ அடித்தும் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை நுங்கம்பாக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை முறையாக சொத்து வரி செலுத்துவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கம் மண்டல வருவாய் உதவி அதிகாரி எஸ்.ஜெகன்நாதன் தலைமையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் முறையாக சொத்து வரி கட்டாத கட்டிடங்கள் முன் ‘தண்டோரா’ அடித்தும், எச்சரிக்கை பதாகைகள் ஒட்டியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஹாடோஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவன கட்டிடம், திருமூர்த்தி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டல், ஆர்.கே.மட் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடம் உள்பட 10 கட்டிடங்களில் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ரூ.60 கோடி நிலுவை
இதுகுறித்து எஸ்.ஜெகன்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                           மேலும், . . . . .. . . .

சென்னையில் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது போதையில் வாகனம் ஓட்டிய 16,616 பேரின் லைசென்ஸ் ரத்து ஆகிறது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

சென்னை, ஜனவரி, 13-01-2015,
சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், போதையில் வாகனம் ஓட்டிய 16,616 பேரின் லைசென்சை ரத்து செய்ய சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்றும், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று மாலை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விபத்துகளை குறைக்க...
சென்னையில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தினமும் திங்கள் முதல் வெள்ளிவரை 62 முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடக்கிறது. சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 124 சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது போக்குவரத்து போலீசார் தனியாக இந்த வாகன சோதனைகளை நடத்துகிறார்கள். சட்டம்-ஒழுங்கு போலீசார் தனியாக தினமும் 85 இடங்களில் சோதனை வேட்டை நடத்துகிறார்கள்.
கடுமையான இந்த சோதனை நடவடிக்கைகள் காரணமாக சென்னை நகரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதிலும், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையில் 2011-ம் ஆண்டு இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 34 லட்சம் ஆகும். தற்போது 2014-ம் ஆண்டு முடிவில் 10 லட்சம் வாகனங்கள் அதிகரித்து, 44 லட்சம் வாகனங்கள் சென்னை நகர ரோடுகளில் பவனி வருகின்றன. ஹெல்மட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம், போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பலனாக விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
247 இறப்பு எண்ணிக்கை குறைவு
விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு 1,411 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
                                                                                                                          மேலும், . . . . .

பரங்கிமலை- பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் 6 வார்டுகளில் அ.தி.மு.க வெற்றி தி.மு.க. ஒரு வார்டில் வெற்றி

ஆலந்தூர், ஜனவரி, 13-01-2015,
பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டு தேர்தலில் 6 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டோன்மெண்ட் போர்டு துணைத்தலைவர் பதவியை அக்கட்சி கைப்பற்றி உள்ளது. தி.மு.க. ஒரே ஒரு வார்டில் மட்டும் வெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கை
சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு 7 வார்டுகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவிக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் 25,031 வாக்குகள் பதிவாகி இருந்தது. நேற்று காலை பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
கண்டோன்மெண்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி தாசில்தார் ஆர்.அருளானந்தம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 5-வது வார்டில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பேட்டரி இல்லாததால் ஓட்டு எண்ண முடியவில்லை. பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து சரி செய்தபின்னர் வாக்குஎண்ணிக்கை நடந்தது.
வார்டு வாரியாக விவரம் வருமாறு:-
                                                                                                                 மேலும், . . . . .

No comments:

Post a Comment