Sunday 18 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி

ஸ்ரீரங்கம் தொகுதியில் பலமுனை போட்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கிறது மனுதாக்கல் இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திருச்சி, ஜனவரி, 19-01-2015,
தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மனுதாக்கல்இன்று தொடக்கம்
இது கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக் கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
28-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அப்போது தகுதி இல்லாத வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 30-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சூடு பிடிக்கிறது
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதையொட்டி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
                                                                                                             மேலும், . . . . 

உடலில் தீப்பிடித்து எரிந்த மர்மம்: பச்சிளம் குழந்தைக்கு சென்னையில் தீவிர சிகிச்சை ‘கேமரா’ மூலம் 24 மணி நேரம் கண்காணிப்பு


சென்னை, ஜனவரி, 19-01-2015,
உடலில் தீப்பிடித்து எரிந்த பச்சிளம் குழந்தைக்கு சென்னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையை ‘கேமரா’ மூலம் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தைக்கு காலில் தீ
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 25). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு கடந்த 9-ந்தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்து 7 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு திடீரென்று காலில் தீப்பிடித்தது. இதையடுத்து, அந்த பச்சிளம் குழந்தையை உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அந்த பச்சிளம் குழந்தை, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
                                                                                                                  மேலும், . . . .

நெல்லை அருகே பரபரப்பு சம்பவம்: சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

நெல்லை, ஜனவரி, 19-01-2015,
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்து சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சிறுத்தைப்புலி
நெல்லை மாநகரின் கடைசி எல்லைப்பகுதியாக பாளையங்கோட்டை திருமால் நகர் உள்ளது. இது ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்து இருக்கிறது. இங்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இதன் அருகே நேற்று காலை 6-30 மணியளவில் சிறுவர்கள் சுற்றித்திரிந்தனர். அப்போது அங்குள்ள ஒருவர் வீட்டின் அருகில் புல்வெளியில் ஒரு சிறுத்தைப்புலி படுத்து கிடந்தது. இதைக்கண்ட சிறுவர்கள் விளையாட்டாக கற்களையும், கட்டைகளையும் எடுத்து அதன் மீது வீசினார்கள். இதனால் அந்த சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடி அருகில் இடிந்து கிடந்த மாட்டு கொட்டகைக்குள் புகுந்தது. ஆனால் சிறுவர்கள் விடாமல், பின் தொடர்ந்து சென்றார்கள்.
ஊருக்குள் புகுந்தது
இதன் பின்னர் அந்த சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்தது.
                                                                                                                      மேலும், . . . . 

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கரும்பு விலை டன்னுக்கு ரூ.3,500 என அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, ஜனவரி, 19-01-2015,
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.3,500 என அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரும்பு கொள்முதல் விலை
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் படும் வேதனைகளின் மற்றொரு பரிமாணமாக, கரும்பு விவசாயிகள் போதுமான, உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2005-2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் டன் ஒன்றுக்கு 1014 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை 2010-2011-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியில் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் என உயர்த்தப்பட்டது.
முத்தரப்பு கூட்டம்
தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் ஒவ்வொரு
                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment