Friday 23 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு ‘மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும்’

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தானை கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்.
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2015,
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
ஒபாமா நாளை வருகிறார்
தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேருகிறார்.
இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.
பாகிஸ்தானுக்கு கண்டிப்பு
அதில், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டித்து இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது:-
                                                                                                                மேலும், . . . .

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுப்பிரமணியம் போட்டி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

சென்னை, ஜனவரி, 24-01-2015,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. போட்டியிட விரும்பியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்னும் 2 நாட்களில் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவும் தரவில்லை என்றும் அறிவித்த நிலையில், மற்றொரு பிரதான கட்சியான தே.மு.தி.க.வின் ஆதரவை பெறுவதற்காக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.
                                                                                                                    மேலும், . . . .

தயாநிதி வீட்டில் தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டது எப்படி? அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல்., 'மாஜி' ஊழியர்

சென்னை, ஜனவரி, 24-01-2015,
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் என்ற முறையில், சென்னையில் உள்ள தயாநிதி வீட்டுக்கு, ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், நவீன தொழில் நுட்பத்தை இணைத்து, சன் 'டிவி' அலுவலகத்துக்கு, மடை மாற்றி விட்டார்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலருமான மதிவாணன் கூறினார். இவர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'மாஜி' ஊழியர்.
புகைப்படம், வீடியோ
தயாநிதி வீட்டில், சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பகம் அமைக்கப்பட்டது குறித்து, அவர் கூறியதாவது: தயாநிதி, 2004 - 2007 கால கட்டத்தில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், அவரது சென்னை வீட்டுக்கு, போன் இணைப்பு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில், ஒருங்கிணைந்த 'டேட்டா நெட்வொர்க்' சேவை (ஐ.எஸ்.டி.என்.,) அறிமுகமானது. அதற்கு முன், தொலைபேசியில், பேச மட்டுமே முடியும். இப்புதிய சேவை மூலம், தொலைபேசியில் பேசுவதோடு, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட அனுப்பும் சேவைகளையும் பயன்படுத்த முடியும். இவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது தான், ஐ.எஸ்.டி.என்., சேவை.சென்னை, போட்கிளப் பகுதியில் உள்ள, தயாநிதி வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது. சென்னை, மாம்பலம் தொலைபேசி இணைப்பகம் மூலம், இந்த இணைப்பில், 323 சர்க்யூட்கள் வடிவமைக்கப்பட்டன.
வெளிப் பார்வைக்கு, இணைப்பு ஒன்றாக தெரிந்தாலும், 323 தொலைபேசிகள் இயங்கும். இவை அனைத்திலும், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது.
                                                                                                                      மேலும், . . .. 

இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்தது

புதுடெல்லி, ஜனவரி, 24-01-2015,
இந்திய சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்தது.
குடியரசு தினவிழா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக, அவரது அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக குடியரசுத்தின விழாவுக்காக ராஜபாதையில் ஒபாமா வரும்போது, இந்த காரில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய ஜனாதிபதியுடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை ஒபாமா கடைப்பிடித்தால், இந்தியாவில் பீஸ்ட் காரை பயன்படுத்தாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
நகரும் கோட்டை
இதற்கிடையே ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரில் அடங்கியுள்ள மலைக்க வைக்கும் வசதிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘நகரும் கோட்டை’ என வர்ணிக்கப்படும் இந்த கார், 8 டன் எடை கொண்டது.
இந்த கார் 8 அங்குல தடிமன் கொண்ட உடல் கவசத்தையும், 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது.
                                                                                                               மேலும், . . . . 

No comments:

Post a Comment