Friday 2 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (03-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (03-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர சதி திட்டம் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் படகில் வந்த 4 தீவிரவாதிகள் பலி கடலோர காவல் படை மடக்கியதும் தீவைத்ததால் படகு வெடித்துச் சிதறி மூழ்கியது


மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தீவிர வாதிகள் 4 பேர் வந்த படகை நடுக்கடலில் கடலோர காவல் படையினர் மடக்கினர். இதனால் தீவிரவாதிகள் தீ வைத்ததால் படகு வெடித்துச் சிதறியதில் 4 பேரும் பலி ஆனார்கள்.
புதுடெல்லி, ஜனவரி,03-01-2015,
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக படகில் வந்த 10 தீவிரவாதிகள் மும்பை நகரில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலி ஆனார்கள்.
தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்
அவர்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி விசாரணைக்கு பின்னர் தூக்கில் போடப்பட்டான்.
தீவிரவாதிகளால் மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் புத்தாண்டையொட்டி முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாகிஸ்தான் படகு
இந்த நிலையில், பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கேத்தி பந்தர் என்ற இடத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று அரபிக்கடல் பகுதியில் தென்படுவதாகவும்,
                                                                                                          மேலும், . . .  .

கேரளாவில் தாக்குதல் நடத்தும் தமிழக மாவோ தீவிரவாதிகள் 6 பேரை பிடிக்க 3 மாநில போலீசார் அதிரடி வேட்டை


சென்னை, ஜனவரி,03-01-2015,
கேரளாவில் பதுங்கி தாக்குதல் நடத்தும் மாவோ தீவிரவாதிகள் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க 3 மாநில போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல்
கேரள மாநில வனப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள அட்டப்பாடி வனச்சரக அலுவலகம் மீது மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். வனத்துறைக்கு சொந்தமான ஜீப் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதே பகுதியில் 2 ஓட்டல்களும் தாக்கப்பட்டன.
நேற்று அதிகாலையில் கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம், செக்காளியில் தனியார் கல்குவாரி ஒன்றின் மீதும் மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல்களினால் கேரள மாநில போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
                                                                                                         மேலும், . . . .  

ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்தல் நடந்தது தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் 63 சதவீதம் பேர் புதிதாக தேர்வு கருணாநிதி அறிக்கை

சென்னை, ஜனவரி,03-01-2015,
தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் 63 சதவீதம் பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும், ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்தல் நடந்தது என்றும் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக அடிப்படையில் தேர்தல்
தி.மு.க.வின் 14-வது பொதுத் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் படிப்படியாக முறையாக நடைபெற்று, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 9-1-2015 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அன்றையதினம் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தலும் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த இந்த 14-வது பொதுத் தேர்தலில் பங்கேற்ற தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 85 லட்சம் ஆகும்.
                                                                                                                      மேலும், . . .  .

மும்பையில் மின்சார ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ரெயில் நிலையங்கள் சூறை ஆத்திரம் அடைந்த பயணிகள் வன்முறை




மும்பை, ஜனவரி,03-01-2015,
மும்பையில் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் 2 ரெயில் நிலையங்களை சூறையாடினார்கள். வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.
நடுவழியில் நின்ற ரெயில்கள்
மராட்டியத்தில் மும்பை, தானே மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தானே மாவட்டம் பத்லாப்பூரில் இருந்து மும்பை சி.எஸ்.டி. நோக்கி நேற்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை 7 மணி அளவில் தாக்குர்லி ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது.
சிறிது நேரத்தில் கல்யாணில் இருந்து சி.எஸ்.டி. நோக்கி வந்த மற்றொரு மின்சார ரெயிலும் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் அந்த பகுதியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. வேலைக்கு செல்லும் நேரம் என்பதால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில் சேவை நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வாகனங்களுக்கு தீ வைப்பு
திவா ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்து தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர்.
                                                                                                                        மேலும், ., . .  .

No comments:

Post a Comment