Saturday 3 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (04-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (04-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் 2 இந்திய வீரர்கள் உள்பட 3 பேர் பலி

பதற்றம் நீடிப்பதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உள்பட 3 பேர் பலி ஆனார்கள். எல்லையோர கிராமங்களில் பதற்றம் நீடிப்பதால், அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஜம்மு, ஜனவரி, 04-01-2015,
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், பாகிஸ்தான் ராணுவம் அதை மதித்து நடப்பது இல்லை.
பாக்.ராணுவம் அடாவடி
காஷ்மீர் மாநிலத்திற்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையையொட்டி உள்ள ராணுவ சாவடிகள் மற்றும் கிராமங்களின் மீது அடாவடித்தனமாக தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது.
புத்தாண்டு தொடக்க நாளில் சம்பா மாவட்டத்தில் உள்ள 13 எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
மீண்டும் தாக்குதல்
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நேற்று முன்தினம் இரவு தனது கைவரிசையை காட்டி உள்ளது. சம்பா, கதுவா மாவட்டங்களில் உள்ள 13 எல்லைச் சாவடிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கிகளால் குண்டுகளை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை இந்த தாக்குதல் நடந்தது.
கதுவா மாவட்டத்தில் உள்ள பட்டி, பன்சார், லோன்டி, பொபிவா, சக்காரா, லச்சிபுரா ஆகிய 6 எல்லைச்சாவடிகள் மீதும், சம்பா மாவட்டத்தில் மங்குசாக், சில்வடிவா, ரீகல், சச்சீவல், ராம்கார், மலுசாக் மற்றும் நங்கா ஆகிய 7 எல்லைச் சாவடிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் குக்கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள்.
                                                                                                    மேலும், . . . . .

இந்தியாவில் நாச வேலை சதித் திட்டத்துடன் மேலும் ஒரு ஆயுதப் படகு ஊடுருவலா? கடலோர காவல் படை தேடுகிறது

காந்திநகர், ஜனவரி, 04-01-2015,
இந்தியாவில் நாச வேலை நடத்தும் சதித் திட்டத்துடன் மேலும் ஒரு ஆயுத படகு பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படகை கடலோர காவல் படை தேடுகிறது.
படகில் வந்த தீவிரவாதிகள்
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து 4 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஒரு மீன்பிடி படகில் வந்தனர். அவர்கள் வந்த படகு கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படை கப்பல் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் நகருக்கு தென்மேற்கே 365 கிலோ மீட்டர் தொலைவில் அந்த படகை மடக்கியது.
இனி தப்பிக்க முடியாது என்று அறிந்ததும் படகில் இருந்த 4 பேரும் படகுக்கு தீ வைத்தனர். அப்போது படகில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் படகு முற்றிலுமாக எரிந்து கடலில் மூழ்கியது. அதில் இருந்த 4 தீவிரவாதிகளும் பலி ஆனார்கள்.
மற்றொரு படகு
இதனால் இந்தியாவில் நடைபெற இருந்த பெரிய நாசவேலை தடுக்கப்பட்டது.
                                                                                                              மேலும், . . . . 

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொலையா? சுஷ்மா மறுப்பு

புது தில்லி, ஜனவரி, 04-01-2015,
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த தங்கள் நாட்டுப் படையினர் இருவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தார் அஜீஸுக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பேச்சுவார்த்தைக்கு வந்த பாகிஸ்தான் படையினர் இருவரை நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
ஜம்முவில் கடந்த 31ஆம் தேதியன்று, பிஎஸ்எஃப் வீரர்கள் கொடியுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது பாகிஸ்தான் படையினர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
அப்போது, இந்திய வீரர்கள் தற்காத்துக் கொள்ளும் வகையில் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் பாகிஸ்தான் படையினரோ, கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
தங்கள் தாக்குதல் இலக்கை பொது மக்கள் வசிப்பிடங்களுக்கும் விரிவுபடுத்தினர்.
                                                                                               மேலும், . . . . . 

மும்பையில் இந்திய அறிவியல் மாநாடு தொடக்கம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் “இந்தியாவை மாற்ற உங்களது உதவியை எதிர்பார்க்கிறேன்”

மும்பை, ஜனவரி, 04-01-2015,
மும்பையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்தியாவை மாற்ற உங்களது உதவியை எதிர்பார்க்கிறேன்” என்று விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டார்
இந்திய அறிவியல் மாநாடு
மும்பை பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கும் 102-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:-
நமது பல்கலைக்கழகங்கள் அதிகப்படியான சுதந்திரத்தையும், தன்னாட்சி உரிமையையும் பெற வேண்டும்.
                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment