Monday 19 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு கூடுதல் நிதி: மானியங்கள் குறைக்கப்படும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேச்சு

அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.
சென்னை, ஜனவரி, 20-01-2015,
2015-2016-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், வருகிற பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மானியம்
நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான செலவு நிதி கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து இருப்பதாகவும், அதில் அரசின் செலவினங்களையும், மானியங்களையும் குறைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எண்ணெய் மற்றும் ரசாயன உரங்களுக்காக மட்டும் லட்சக்கணக் கான கோடி ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
நிதி மந்திரி அருண் ஜெட்லி
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
                                                                                                  மேலும், . . . .

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு மனு தாக்கல்

திருச்சி, ஜனவரி, 20-01-2015,
ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் எஸ்.வளர்மதி போட்டியிடுகிறார். இவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த என். ஆனந்த், தி.மு.க வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி நேற்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
                                                                                                                  மேலும், . . . .

செனாய்நகரில் மெட்ரோ பணியின் போது கட்டிடம் 2 அடி ஆழம் பூமியில் இறங்கியதால் பரபரப்பு


சென்னை, ஜனவரி, 20-01-2015,
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி நடந்து வரும் சென்னை செனாய் நகரில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென்று 2 அடி பூமியில் இறங்கியது. அதில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரெயில் பணி
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் சுரங்கப்பாதை 24 கிலோ மீட்டர் தூரமும், 21 கிலோமீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட வழித்தடத்திலும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மொத்த தூரத்தில் 55 சதவீதம் சுரங்கப்பாதையாகும்.
ஆக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வரும் பணியில், தரைக்குமேல் 13 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 19 ரெயில் நிலையங்கள் உட்பட 32 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சுரங்கப்பாதையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
போர்க்கால பணி
சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) உதவியுடன் சென்னையில் 5 கட்டமாக நடந்து வரும் சுரங்கம் தோண்டும் பணியில், முதல்கட்டமாக திருமங்கலம்- அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு - செனாய் நகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பாதையிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த மாதம் 13-ந்தேதி நிறைவடைந்தது.
                                                                                                  மேலும், . . . . 

தாய், மகளை கொன்றதற்கு பழிக்குப்பழி: ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை தலையை துண்டித்து வீடு அருகே வீசி சென்ற கொடூரம்

சோழவந்தான், ஜனவரி, 20-01-2015,
தாய், மகள் கொலைக்கு பழிக்குப்பழியாக ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளியின் தலையை தனியாக துண்டித்து எடுத்து, அதனை கொலை செய்யப்பட்ட தாய்-மகள் வீடு அருகே வீசி சென்றனர்.
தாய், மகள் கொலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் தெற்குதெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 55). இவரது மகள் முருகேஸ்வரி (32). இதே தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (48). விவசாயி. இவர்களுக்கிடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்து வந்தது. கடந்த 19.8.2013-ம் ஆண்டு இரவு செல்லம்மாளும், முருகேஸ்வரியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
                                                                                                                     மேலும், . . . . . .

No comments:

Post a Comment