Saturday 10 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
மோடியின் அழைப்பை ஏற்று, அடுத்த மாதம் சிறிசேனா இந்தியா வருகிறார் இலங்கை அதிபராக பதவி ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணம்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
கொழும்பு, ஜனவரி, 11-01-2015,
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா அமோக வெற்றி பெற்றார்.
ராஜபக்சே படுதோல்வி
அவரை எதிர்த்து சுதந்திரா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதிபர் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் அவர் தோல்வியை சந்தித்தார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராஜபக்சேயை விட சிறிசேனாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அவர் எளிதில் வெற்றி பெற்றார்.
சிறிசேனா முன்பு ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேறிய சிறிசேனா, அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை வீழ்த்தி மிக உயர்ந்த பதவியான அதிபர் பதவியை பிடித்து விட்டார்.
புதிய அதிபர் சிறிசேனா
கொழும்பு நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற எளிய விழாவில், இலங்கையின் புதிய அதிபராக சிறிசேனா பதவி ஏற்றார். அவருடன், புதிய பிரதமராக ரனில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றுக் கொண்டார்.
நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானதும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிறிசேனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
                                                                                                                மேலும், . . . . .

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையை நீக்க நடவடிக்கை மத்திய அரசுடன் பேச, தமிழக அதிகாரிகள் நாளை டெல்லி பயணம்


சென்னை, ஜனவரி, 11-01-2015,
ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேச, தமிழக அரசு உயர் அதிகாரிகள் நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார்கள் என்றும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாள்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது மஞ்சு விரட்டு, ஊர்மாடு, வடமாடு மற்றும் எருது விடும் விழா போன்றவற்றை உள்ளடக்கியதாகும். ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு இறுதியாக கடந்த 7-5-2014 அன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தினை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுவதற்கு இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்பதை முதற்கண் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு தடை
2006-ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி நாகராஜ் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
                                                                                                               மேலும், . . . . . 

எங்களை பார்த்து கருணாநிதி பயப்படுகிறார் ‘மதத்தால் அல்ல; வளர்ச்சி திட்டங்களால் தமிழகத்தில் காலூன்றி வருகிறோம்’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை, ஜனவரி, 11-01-2015,
மதத்தால் அல்ல, வளர்ச்சி திட்டங்களால் மட்டுமே தமிழகத்தில் காலூன்றி வருகிறோம் என்றும், பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை பார்த்து கருணாநிதி பயப்படுகிறார் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அச்சத்தின் வெளிப்பாடு
திருவள்ளுவர், பாரதியாரின் சிறப்புகளை இந்தியா முழுவதும் பரப்ப பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது. நாளை (இன்று) எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருப்பயணம் பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் மத்தியமந்திரி ஸ்மிருதி இராணி கலந்து கொள்கிறார்.
தமிழுக்கும், தமிழர்களுக்காக வும் பாடுபட்டு வரும் பாரதீய ஜனதாவை பார்த்து மதத்தை வைத்து பிரித்தாளுகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுகிறார். மொழி வெறி பிடித்தவர்கள் என்று கூறுகிறார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்றி விடப்போகிறதே என்ற அச்சத்தின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருக்கிறது.
காலூன்றி வருகிறோம்
எங்கள் மீது மதவாதத்தை திணிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
                                                                                                                  மேலும், . . . . .

கடைசி நேரத்தில் தேர்தல் முடிவை ரத்து செய்ய ராஜபக்சே திட்டம் தீட்டியது அம்பலம் பரபரப்பு தகவல்கள்

கொழும்பு, ஜனவரி, 11-01-2015,
தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கடைசி நேரத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து தேர்தல் முடிவை ரத்து செய்ய ராஜபக்சே திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
10 ஆண்டு ஆட்சிக்கு முடிவு
கடந்த 8-ந்தேதி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து நின்ற மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
இதனிடையே, நேற்று முன்தினம் காலை தேர்தல் முடிவுகள் சிறிசேனாவுக்கு சாதகமாக வரத் தொடங்கிய நிலையில், தோல்வியை ஜீரணிக்க முடியாத ராஜபக்சே கடைசி நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, இப்போது அம்பலமாகி உள்ளது.
ரத்து செய்ய முயற்சி
தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்தவாறே இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயன்று இருக்கிறார்.
ஆனால் இதை இலங்கையின் அட்டர்னி ஜெனரல் அறவே ஏற்க மறுத்து விட்டார். ராணுவ அதிகாரிகளும் ராஜபக்சேவின் நெருக்கடி நிலை பிரகடன யோசனையை நிராகரித்து விட்டனர்.
                                                                                                      மேலும், . . . . .

No comments:

Post a Comment