Wednesday 14 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து காளை நீக்கம் மத்திய அரசு முடிவால் ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்குகிறது

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்குகிறது.
புதுடெல்லி, ஜனவரி, 14-01-2015,
தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் அரசிதழில் ஒரு ஆணை வெளியிட்டது. அதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காளை சேர்க்கப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் ஆணையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழக அரசுதீவிர முயற்சி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது. எனினும், இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
                                                                                          மேலும், . . .. .  

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்த் கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜனவரி, 14-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என்.ஆனந்த் நிறுத்தப்படுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்றதால், அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக, காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதி உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
அறிவிப்பு வெளியான அடுத்த நாளே தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் வேட்பாளராக என்.ஆனந்த் நிறுத்தப்படுகிறார்.
இவர் ஏற்கனவே, 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இருந்தாலும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
                                                                                                                 மேலும், ., . . . . 

பொங்கல் செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஓட்டல் அதிபரின் மனைவி கொலை; பணம், நகை கொள்ளை 2 குழந்தைகளையும் கத்தியால் குத்திய வேலைக்காரன் கைது

அம்பத்தூர், ஜனவரி, 14-01-2015,
பொங்கல் செலவுக்கு பணம் தர மறுத்ததால், ஓட்டல் அதிபரின் மனைவியை படுகொலை செய்தும், அவரது 2 குழந்தைகளை கத்தியால் குத்தியும் நகை, பணத்தை கொள்ளையடித்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டல் அதிபர்
சென்னையை அடுத்த அம்பத்தூர், கே.கே.ரோடு துளசி தெருவில் உள்ள ஒரு பங்களாவின் முதல்மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் மைக்கேல்ராஜ். இவர் அதே பகுதியில் உள்ள வெங்கடாபுரம் வடக்கு பூங்கா தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியவனிதா (வயது 25). இவர்களுக்கு டேனிஷ் (5) என்ற மகனும், பிரின்சிகா (2½) என்ற மகளும் உள்ளனர்.
மைக்கேல்ராஜ் நடத்தி வரும் ஓட்டலில் 4 பேர் தொழிலாளிகளாக வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு மைக்கேல்ராஜ் ஓட்டல் அருகிலேயே வாடகைக்கு ஒரு தனி அறை எடுத்து கொடுத்திருந்தார்.
தொழிலாளர்களில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள முருகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (21) என்ற வாலிபர் கடந்த 4 வருடங்களாக அங்கு வேலை செய்துவருகிறார்.
                                                                                                                          மேலும், . . . . .

குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க 22 ஆயிரம் முதலீட்டாளர்கள் சம்மதம் அரசு தலைமை செயலாளர் டி.ஜெ.பாண்டியன் பேட்டி

காந்திநகர், ஜனவரி, 14-01-2015,
குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க 22 ஆயிரம் முதலீட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக, அம்மாநில அரசு தலைமை செயலாளர் டி.ஜெ.பாண்டியன் கூறினார்.
டி.ஜெ.பாண்டியன்
குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில், கடந்த 3 நாட்களாக ‘துடிப்பான குஜராத்-2015’ என்ற பெயரிலான உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதன் பயனாய் அங்கு 22 ஆயிரம் முதலீட்டாளர்கள், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு வித்திட்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்றாலும், இந்த ஆண்டு நடந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர், அம்மாநில தலைமை செயலாளர் டி.ஜெ.பாண்டியன் ஆவார். இவர் ஒரு தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை.
குஜராத் மாநில வளர்ச்சி குறித்து, அம்மாநில அரசு தலைமை செயலாளர் டி.ஜெ.பாண்டியன், காந்திநகரில் வைத்து நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                     மேலும், . . . .

No comments:

Post a Comment