Wednesday 28 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப ஆலோசனை டெல்லியில் நாளை நடைபெறும் கூட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை, ஜனவரி, 29-01-2015,
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழ் அகதிகள்
இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்வது குறித்து, நாளை (30-ந் தேதி) நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது அகதிகள் விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால், அது அவர்களின் விருப்பம் என்பதை பிரதமர் அறிவார்.
எனவே, இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த கூட்டம் கருதப்படும். மேலும், தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
3 லட்சம் பேர் வருகை
கடந்த 1983-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி முதல் இன்று வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் தமிழகத்திற்கு 4 கட்டங்களில் வந்துள்ளனர்
                                                                                                                   மேலும், . . . .

ஆசிரியையிடம் வழிப்பறி செய்த வழக்கு நீராவி முருகன், தப்பிச்செல்ல பாலத்தில் இருந்து குதித்தான் கை, கால் உடைந்த நிலையில் பிடிபட்டு கோர்ட்டில் ஆஜர்

ஆலந்தூர், ஜனவரி, 29-01-2015,
துரைப்பாக்கத்தில் ஆசிரியையிடம் வழிப்பறி செய்து பிடிபட்ட கொள்ளையன் நீராவி முருகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட பாலத்தில் இருந்து குதித்தான்.
கை, கால் உடைந்த நிலையில் பிடிபட்ட அவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.
ஆசிரியையிடம் வழிப்பறி
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி வேலம் (வயது 37). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த மாதம் 19-ந் தேதி ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர். அவர்களில் ஒருவன் வேலத்திடம் கத்தியை காட்டி 14 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டதும், இருவரும் தப்பினர்.
இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                                                                                                        மேலும், . . . .

அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 34 பேர் மனுக்கள் ஏற்பு பா.ஜனதா வேட்பாளரின் மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு

திருச்சி, ஜனவரி, 29-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட 34 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் வளர்மதி (அ.தி.மு.க), ஆனந்த் (தி.மு.க), சுப்பிரமணியம் (பா.ஜ.க.), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள்.
வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி வி.மனோகரன் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் பால்கார் சிங் முன்னிலையில் இந்த பரிசீலனை நடந்தது.
முக்கிய கட்சி மனுக்கள் ஏற்பு
அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரது மனுக்களில் எல்லா விவரங்களும் சரியாக இருந்ததால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
                                                                                                 மேலும், . . . . .

மதுவில் விஷம் கலந்து 4 பேரை கொன்றவர் போலீசில் சரண் பரபரப்பான வாக்குமூலம்


விழுப்புரம், ஜனவரி, 29-01-2015,
மதுவில் விஷம் கலந்து கொடுத்து 4 பேரை கொலை செய்த பட்டதாரி வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
பட்டதாரி வாலிபர் சரண்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 35), எம்.காம்., எம்.பில். பட்டதாரியான இவர் முன்பு கள்ளக்குறிச்சியில் தனிப்பயிற்சி கல்லூரி(டூட்டோரியல்) நடத்தி வந்தார்.
கடந்த 24-ந்தேதி, இவர் தனது நண்பர்கள் கனகராஜ், மூர்த்தி, முனியன், பஞ்சாட்சரம் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து துடிக்கத்துடிக்க கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராமகிருஷ்ணன் மூக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜாவிடம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.
                                                                                                           மேலும், . . . .

No comments:

Post a Comment