Friday 30 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

1½ ஆண்டுகளாக சோனியாகாந்தியை சந்திக்க முடியவில்லை காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக பரபரப்பு பேட்டி

சென்னை, ஜனவரி, 31-01-2015,
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன்
காங்கிரஸ் கட்சி தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் இருந்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20–ந் தேதி மத்திய மந்திரி பதவியில் இருந்து திடீரென அவர் ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சி மேலிடம் வலியுறுத்தியதை தொடர்ந்தே ஜெயந்தி நடராஜன் இந்த முடிவை எடுத்தார் என்று அப்போது கூறப்பட்டது. மேலும், பாராளுமன்ற தேர்தலையொட்டி, அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் எந்த பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.
சோனியாகாந்திக்கு கடிதம்
கடந்த 1½ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட ஜெயந்தி நடராஜன், கடந்த நவம்பர் மாதம் 5–ந் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தின் நகல் நேற்று முன்தினம் திடீரென வெளிவந்தது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு, முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் எழுதியிருந்த கடிதத்தில், ‘‘என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னுடைய கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறோம். மந்திரி பொறுப்பில் 2 ஆண்டு காலம்தான் இருந்திருக்கிறேன். ஆனால், இரவு பகல் பாராமல் 30 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். மன்மோகன்சிங்கும், நீங்களும் கட்சியின் செய்தி தொடர்பாளராக நான் ஆற்றிய பணிகளை பாராட்டியிருக்கிறீர்கள். 10 ஆண்டு கால செய்தி தொடர்பாளர் பணியில் ஒரு தவறு கூட இழைத்ததும் இல்லை. ஆனால், இதுவரை என்னை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை’’ என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.
பேட்டி
இந்த கடிதம், தற்போது வெளியான நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
                                                                                                                    மேலும், . . . . .

தமிழகத்தில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை டெல்லியில் நடந்தது

புதுடெல்லி, ஜனவரி, 31-01-2015,
தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
1 லட்சம் அகதிகள்
இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மற்றும் படுகொலைகள் தீவிரமடைந்த போது, அங்கிருந்து சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர்.
இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலையீட்டினால், இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
தற்போது சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் அகதிகள் தமிழகத்தில் உள்ளனர்.
                                                                                                                     மேலும், . . . .

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது ஸ்ரீரங்கம் தொகுதியில் 29 பேர் போட்டி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 முனை போட்டி

திருச்சி, ஜனவரி, 31-01-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்பட 29 பேர் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 13-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
27-ந்தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 28-ந்தேதி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
34 வேட்பு மனுக்கள் ஏற்பு
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அண்ணாதுரை, ஜனதா பரிவார் வேட்பாளர் ஹேமநாதன் ஆகிய முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளர் மனுக்கள், உரிய படிவங்கள் இணைக்கப்படாத சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன
                                                                                             மேலும், . . . . .

ஜெயலலிதா வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட பண பரிமாற்றம் நடைபெறவில்லை சசிகலா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரு, ஜனவரி, 31-01-2015,
ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட முறையில் எந்தவொரு பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று சசிகலா தரப்பு வக்கீல் வாதாடினார்.
சாட்சியங்களை படித்து காட்டினார்
பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 5-ந்தேதியில் இருந்து தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, சசிகலா தரப்பு வக்கீல் தனது வாதத்தை தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று 17-வது நாளாக நீதிபதி குமாரசாமி முன்னிலையில் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு மூத்த வக்கீல் பசந்த்குமார்,
                                                                                                           மேலும், . . . . . 

No comments:

Post a Comment