Sunday 1 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ராணிப்பேட்டை அருகே பரிதாபம் கழிவுநீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் மூச்சு திணறி சாவு தூக்கத்திலேயே உயிர் இழந்தனர்



கழிவுநீர் சேமிப்பு தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெளியேறிய கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலியானார்கள்.
ராணிப்பேட்டை, பிப்ரவரி, 01-02-2015,
நள்ளிரவில் நடந்துள்ள இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தோல் கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையம்
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் தோல் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் (பேஸ்-1) உள்ளது. 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் 15 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அப்பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்பட்டு இருந்தது.
இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
                                                                                                            மேலும், . . . .

வக்கீல் சங்க தேர்தல் கொண்டாட்டத்தின்போது, நள்ளிரவில் பயங்கர மோதல்: எழும்பூர் கோர்ட்டு முன்பு வக்கீல் படுகொலை பெண் வக்கீல் உள்பட 2 பேர் கைது



சென்னை, பிப்ரவரி, 01-02-2015,
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு சங்க தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வக்கீல் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பெண் வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 30 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வக்கீல் சங்க தலைவர்
சென்னை எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 1993-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த வக்கீல் சங்க தேர்தல், 2007-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டது.
இந்த நிலையில், வக்கீல் சங்க தேர்தலின் போது தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து, இந்த ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு சந்தன் பாபு, மைக்கேல், மெஞ்ஞான மூர்த்தி, ரவிகுமார் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
                                                                                                     மேலும், . . . .. 

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது

பாலாசூர், பிப்ரவரி, 01-02-2015,
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
அக்னி-5 ஏவுகணை
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.
அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்க வல்லவை.
இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
                                                                                                         மேலும், . . . . 

இந்து அமைப்புகளின் எதிர்மறை கருத்துக்களை பிரதமர் அவ்வப்போது மறுத்து, தெளிவுபடுத்தாதது ஏன்? ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்ரவரி, 01-02-2015,
இந்து அமைப்புகளின் எதிர்மறையான கருத்துக்களுக்கு அவ்வப்போது பிரதமர் அதனை மறுத்தோ, தெளிவுப்படுத்தியோ கருத்து தெரிவிக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீதிபதியான தமிழர்
கேள்வி:-இலங்கையில் தமிழர் ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்:-இலங்கையில் பொறுப்பேற்றிருக்கும் சிறிசேனாவின் புதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தை சேர்ந்த 62 வயதான கே.ஸ்ரீபவன் என்பவரை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப்பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும். 1991-ம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப் பட்டிருக்கும் ஏராளமான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும். எனினும், இலங்கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறை அல்ல...
கேள்வி:-“இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். சட்டப்படி இந்தியாவை இந்துக்கள் நாடாக அறிவிக்க வேண்டும்” என்று கூறுகிறார்களே?
                                                                                                             மேலும், . . .  .

No comments:

Post a Comment