Sunday 8 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (09-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது பற்றி முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை

டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது பற்றி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 09-02-2015,
இந்திய சுதந்திரத்துக்குப்பின் நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 1950-ம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசால் திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது.
‘நிதி ஆயோக்’ அமைப்பு
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த குழுவை, மோடி தலைமையிலான மத்திய அரசு கலைத்துவிட்டது.
இதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. பிரதமரை தலைவராக கொண்ட இந்த அமைப்பின் துணைத்தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பில் மாநிலங்களுக்கு அதிகார பகிர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரிகள்
இந்த அமைப்பின் முதல் ஆட்சி மன்ற குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது.
                                                                                                         மேலும், . . . .

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. பயங்கர மோதல் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர்

திருச்சி, பிப்ரவரி, 09-02-2015,
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர்.
தேர்தல் பிரசாரம்
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் 13-ந் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் வீதி, வீதியாக வாக்கு கேட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியம் நேற்று காலை ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்திற்கு இருபுறமும் பா.ஜ.க.வினர் சென்று கொண்டிருந்தனர்.
அ.தி.மு.க-பா.ஜ.க. மோதல்
மேலத்தெருவில் பா.ஜனதாவினர் பிரசாரம் செய்ய சென்றபோது, அங்கு ஏற்கனவே அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க.வினரும் வந்ததால் அ.தி.மு.க.வினர், அவர்களிடம் இரண்டு விரலை உயர்த்தி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். அ.தி.மு.க.வினரின் செயலை பா.ஜ.க.வினர் கிண்டல் செய்தனர். அப்போது பா.ஜ.க. பிரசார வாகனத்தின் மைக்கை அ.தி.மு.க.வினர் பிடுங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். இதனால் பா.ஜ.க.வினர் கோபமடைந்து தட்டிக்கேட்டனர்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது.
                                                                                               மேலும், . . . . .

கல்லூரி இடம் மாற்றத்தை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் மொட்டை அடித்து போராட்டம்

சென்னை, பிப்ரவரி, 09-02-2015,
கல்லூரி இடம் மாற்றத்தை எதிர்த்து 6-வது நாளாக தொடர்ந்து போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவர்களில் 6 பேர் நேற்று மொட்டை அடித்தனர்.
தொடர் போராட்டம்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி சென்னை பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் அன்றைய தினமே உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாகவும், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மொட்டை அடித்தனர்
இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாற்றப்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் மொட்டை போடும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்தனர். அதன்படி நேற்று மதியம் 3 மணியளவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் மொட்டை அடித்தனர்.
பின்னர் மாணவர் ஒருவரை பிணமாக படுக்கவைத்து, பாடை கட்டினர்.
                                                                                                                    மேலும், . . . .

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை: ஒரே அணியாக தான் அனைவரும் செயல்படுகிறோம் நடிகை குஷ்பு பேட்டி


சென்னை, பிப்ரவரி, 09-02-2015,
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை என்றும், ஒரே அணியாக தான் அனைவரும் செயல்படுகிறோம் என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கட்சியில் இருந்து விலகினார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், கார்த்தி ப.சிதம்பரத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், செயலாளர் ஜி.சின்னா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியை வலுப்படுத்த விவாதம்
இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், விஜயதரணி எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, கார்த்தி ப.சிதம்பரம் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்து பலப்படுத்துதல், கட்சியில் அடிக்கடி நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இன்றி கட்சியை வலுப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மாலை 3 மணிக்கு தொடங்கிய செயற்குழு கூட்டம் 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
உறுப்பினர் சேர்க்கை
கூட்டம் முடிந்து வெளியே வந்த தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                           மேலும், . . . .

No comments:

Post a Comment