Tuesday 3 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (04-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (04-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் தேர்தல் பிரசாரம் கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு மக்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார்

புதுடெல்லி, பிப்ரவரி, 04-02-2015,
மக்கள் நம்பிக்கைக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்து விட்டார் என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
மோடி பிரசாரம்
டெல்லி சட்டசபைக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
வீணடித்த காங்கிரஸ்
15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் அதை வீணடித்து விட்டது. பின்பு தற்காலிகமாக இன்னொரு புதிய சிறிய கட்சி(ஆம் ஆத்மி) ஒரு வருடம் டெல்லியை வீணாக்கியது.
கடந்த 16 ஆண்டு காலமாக உள்ள இந்த பிரச்சினையில் இருந்து டெல்லியை மீட்கவேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கும், எனக்கும் உள்ளது.
தாயும்-மகனும்(சோனியா -ராகுல்) பேசுவதை இன்று யாராவது கவனிக்கிறார்களா? அவர்களுடைய பேச்சையோ, அவர்களையோ யாரும் கவனிப்பதில்லை.
                                                                                                      மேலும், . . . . .

பல இளம்பெண்களிடம் கைவரிசை: ‘பேஸ்புக்’ மூலம் பெண்களை ஏமாற்றி நகை பறித்த போலி டாக்டர் கைது 40 பவுன் நகைகள் மீட்பு

தாம்பரம், பிப்ரவரி, 04-02-2015,
‘பேஸ்புக்’ மூலம் பல பெண்களை ஏமாற்றி நகை பறித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து, 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் பல பெண்கள் அவரிடம் ஏமாந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
நன்மையும், தீமையும்
‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், சிலர் இதனை தவறான வழிகளில் பயன்படுத்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. சிலர் தங்களை பற்றிய உண்மை விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை வெளியிடுவதால் அவர்களை தொடர்பு கொள்ளும் பெண்கள் தங்களையும், தங்கள் உடமைகளையும் இழந்து ஏமாறும் நிலையும் உள்ளது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
‘பேஸ்புக்’ மூலம் அறிமுகம்
போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வெளிநபர்கள் வந்து நகையை எடுத்துச் செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டில் இருப்பவர்கள் தான் நகையை எடுத்து இருப்பார்கள் என தெரிவித்தனர். வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது வக்கீலின் மகள் தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின..
                                                                                                           மேலும், . . . . 

கும்மிடிப்பூண்டி அருகே தாய்-மகள் வெட்டிக்கொலை

கும்மிடிப்பூண்டி, பிப்ரவரி, 04-02-2015,
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் தாய்-மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தாய்-மகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னசோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). ஊராட்சி பம்பு ஆபரேட்டர். இவருடைய கணவர் ராஜேந்திரன், ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு அம்பிகா (26), நிரோஷா (23) என்ற 2 மகள்களும், யுவராஜ் (24) என்ற மகனும் உண்டு. அம்பிகாவுக்கு திருமணமாகி தனது கணவருடன் பூவலம்பேடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு பெண் ஒருவரை கிண்டல் செய்ததாக 7 பேர் கொண்ட கும்பலால் யுவராஜ் அடித்து கொலை செய்யப்பட்டதாக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணையும் நடந்து வருகிறது.
தற்போது சின்ன சோழியம்பாக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் லட்சுமியும், அவரது மகள் நிரோஷாவும் மட்டுமே வசித்து வந்தனர்.
                                                                                                                   மேலும், . . . . 

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு சென்னையில் இன்று, மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை

நாமக்கல், பிப்ரவரி, 04-02-2015,
சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று (புதன்கிழமை) சென்னையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
வேலைநிறுத்தம்
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் (பல்க் எல்.பி.ஜி.) டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து புதிய வாடகை ஒப்பந்தம் செய்வது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு முதல் தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக 3,200-க்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை.
கியாஸ் எடுத்து செல்லும் பணி
இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகள்) கியாஸ் எடுத்து செல்லும் பணி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சில பாட்லிங் பிளாண்டுகளில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சிலிண்டரில் கியாசை அடைக்கும் பணி முடங்கி உள்ளது.
இதே நிலை நீடித்தால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால்
                                                                                                             மேலும், . . . . .

No comments:

Post a Comment