Tuesday 17 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (18-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (18-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி

இந்தியாவில் மத சுதந்திரம் முழுமையாக நீடிக்கும் மத வெறுப்பை அனுமதிக்க முடியாது பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடெல்லி, பிப்ரவரி, 18-02-2015,
மத வெறுப்புணர்வை யார் தூண்டினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி சம்பவம்
தலைநகர் டெல்லியில், அண்மையில் கிறிஸ்தவ ஆலயம், கிறிஸ்வத பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எனினும் பிரதமர் மோடி இதுகுறித்து நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
டெல்லி போலீஸ் கமிஷனரை நேரில் அழைத்து இதுபற்றி பேசினார். இத்தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புனிதர் பட்டம்
கேரளாவை சேர்ந்த குரியகோஸ் இலியாஸ் சவாரா, அன்னை யூப்ராசியா ஆகியோருக்கு கடந்த ஆண்டு போப் ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கினார். இதை கொண்டாடுவதற்கான தேசிய விழா டெல்லி விஞ்யான் பவனில் நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி மத வெறுப்புணர்வை தூண்டிவிடுபவர்கள் குறித்து தனது அரசின் நிலைப்பாடு பற்றி முதல் முறையாக தெளிவாக குறிப்பிட்டார்.
                                                                                                 மேலும், . .. . 

சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும் சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா கூறினார்.
சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-
“ஸ்மார்ட்” நகரங்கள்
மாநிலத்தின் மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, சென்னையின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சென்னை பெருநகர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சாலைகள் போன்ற நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் இத்திட்டங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. தமிழகத்தின் 12 மாநகராட்சிகளை “ஸ்மார்ட் நகரங்கள்” திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ள தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என நம்புகிறேன்.
புதிய நீர்த்தேக்கம்
மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள, நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் முழுமையாக செயல்பட்டு சென்னையின் குடிநீர் தேவையை நிறைவு செய்து வருகின்றன. இவற்றுடன், நெம்மேலி மற்றும் பேரூரில் முறையே நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இரண்டு அலகுகளை அமைக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
                                                                                           மேலும், . . . . .

அரசு துறைகளில் ஊழல்: கவர்னரிடம் பா.ம.க.வினர் நேரில் புகார் மனு

சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
அரசு துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக கவர்னரிடம் பா.ம.க.வினர் நேரில் புகார் மனு அளித்தனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு, கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கிரானைட் கொள்ளை
* 2011-ம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார்.
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை காட்டுகிறது.
                                                                                                                     மேலும், . . . . 

திருச்சி அரசு மருத்துவமனையில்ஆக்சிஜன் சிலிண்டர் கசிவால் பீதிஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிய போதுகுழந்தைகள் உள்பட 6 பேர் காயம்


சென்னை, பிப்ரவரி, 18-02-2015,
திருச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கசிவால் பீதி ஏற்பட்டு, ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பியபோது குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
அரசு மருத்துவமனை
திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த குழந்தைகளின் அருகில் அவர்களின் பெற்றோர் இருந்து கவனித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வார்டில் எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். காலியாகும் சிலிண்டர்கள் இதன் அருகே அடுக்கி வைக்கப்படும்.
சிலிண்டரில் கசிவு
நேற்று பகல் 11.20 மணி அளவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரை சோதித்து வார்டில் வைப்பதற்காக சிலிண்டரின் மேல் பகுதியை திறந்தார்.
                                                                                                  மேலும், . .  . .
 

No comments:

Post a Comment