Friday 6 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டில்லி சட்டபை தேர்தல்: வோட்டு பதிவு துவங்கியது டெல்லி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு

70 தொகுதிகளை கொண்ட டில்லிசட்டசபை தேர்தலுக்கான வோட்டுபதிவு துவங்கியது. காங்கிரஸ்.பா.ஜ., ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப்பேகட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் 66 பெண்கள் உட்பட 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் முடிவை சுமார் ஒரு கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயம் செய்ய உள்ளனர். இத் தேர்தலில் சுமார் 12 ஆயிரத்து 177 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, பிப்ரவரி, 07-02-2015,
டெல்லி சட்டமன்றத்துக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
70 தொகுதிகள்
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் குதித்தன.
பா.ஜனதா சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும், ஆம் ஆத்மி சார்பில் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் முதல்-மந்திரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் நடந்தது. காங்கிரஸ் கட்சியும் அஜய் மக்கான் தலைமையில் களமிறங்கியது.
673 வேட்பாளர்கள்
இவ்வாறு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சுறுசுறுப்பாக நடந்து வந்த அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.
                                                                                                               மேலும், . . . . .

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்


தமிழக சட்டசபை வருகிற 17-ந் தேதி கூடுகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்துகிறார்.
சென்னை, பிப்ரவரி, 07-02-2015,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில கவர்னர் உரையாற்றுவார்.
17-ந் தேதி கூடுகிறது
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 17-ந் தேதி தொடங்குகிறது.
முதல் நாள் கூட்டம் நடக்கும் 17-ந் தேதி கவர்னர் கே.ரோசய்யா சட்டசபையில் உரையாற்றுகிறார். அப்போது அவர், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசுவார்.
கவர்னர் உரை
இதுகுறித்து தமிழக சட்டசபையின் செயலாளர் அ.மு. பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                                                                    மேலும், . .. . 

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் ஆதரவு

சென்னை, பிப்ரவரி, 07-02-2015,
சென்னையில் 3-வது நாளாக நேற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டம்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் பணியால் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த கட்டிடத்தை சீரமைக்கவும், கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றவும் அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாணவர்கள் வாயில் கருப்பு கொடி கட்டிக்கொண்டும், மார்பில் கருப்பு கொடி அணிந்தவாறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்று சட்டக்கல்லூரிக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். மாணவர்களுடன் சிறிது நேரம் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்களின் போராட்டத்துக்கு தி.மு.க.வும், தி.மு.க. தலைவர் கருணாநிதி தரப்பிலும் முழு ஆதரவு உண்டு.
                                                                                                       மேலும், . . . .

டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 1 காசு குறைந்துள்ளது பஸ் கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. அரசு முன் வருமா? கருணாநிதி கேள்வி

சென்னை, பிப்ரவரி, 07-02-2015,
டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 1 காசு குறைந்துள்ள நிலையில், பஸ் கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. அரசு முன் வருமா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட ‘கேள்வி-பதில்’ வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர்கள் போராட்டம்
கேள்வி:- சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்களே?
பதில்:- நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து கடந்த 2 நாட்களாக மாணவர்கள் குறளகம் மற்றும் பாரிமுனைப் பகுதிகளில் சாலை மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து அவர்களின் பிரதிநிதிகளை முதல்- அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்வதற்குப் பதிலாக, காவல் துறையினரைக் குவித்து, பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னதன் காரணமாக, அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தி 5 மாணவர்களின் மண்டை உடைந்திருக்கிறது. 6 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் வேறு சாலையில் சென்றிருக்கிறார்கள்.
மாணவர்களை முன்பே அழைத்துப் பேசியிருந்தால், சாலை மறியலும் நடந்திருக்காது,
                                                                                                               மேலும், . . . . .

No comments:

Post a Comment