Friday 20 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மத்திய அரசின் ரகசியங்களை திருடி விற்றதில் பரபரப்பு பட்ஜெட் ஆவணங்களும் திருட்டு கைதான 7 பேரிடம் விசாரணை

ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில், மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களும் திருடப்பட்டதாக தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக, கைதான 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி, பிப்ரவரி, 21-02-2015,
டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவனில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆவணங்கள் திருட்டு
அந்த அமைச்சகத்தின் அலுவலகத்தில் தனிச்செயலாளர் ராஜீவ் குமார், இணைச்செயலாளர்கள் சந்தீப் பவுண்ட்ரிக், யு.பி.சிங், இயக்குனர்கள் நளின்குமார், ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டவர்களின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், வரி விதிப்பு, இறக்குமதி உள்ளிட்டவை தொடர்பான ரகசிய ஆவணங்களை திருடி, நகல் எடுத்து, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
                                                                                                               மேலும், . . . .

சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் வெளிநடப்பு


சென்னை, பிப்ரவரி, 21-02-2015,
சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.
தமிழக சட்டசபை கேள்வி- பதில் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதில் திருநெல்வேலியில் அரசு இசைக் கல்லூரி தொடங்கப்படுமா என்று தே.மு.தி.க, (அதிருப்தி) உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் கேள்வி கேட்டிருந்தார்.
அவர் அவையில் நேற்று இல்லாததால், அவருக்கு பதிலாக மற்றொரு தே.மு.தி.க. (அதிருப்தி) உறுப்பினர் தமிழழகன், இதுகுறித்து பேசும் போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி செய்த செயல்களை பட்டியலிட்டு புகழ்ந்து பேசினார். இடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி பேசும் போது, காவிரியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்ற பொருள்படும் படியாக ஒரு சில வார்த்தைகளை பேசினார்.
தி.மு.க. வெளிநடப்பு
இவ்வாறு அவையில் பேசுவதற்கு அனுமதி தரகூடாது என்று சபாநாயகரிடம்,தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
                                                                                                        மேலும், . . . . .

என்ஜினீயரிங் மாணவர் படுகொலை மக்கள் திடீர் வன்முறை, போலீஸ் தடியடி

வள்ளியூர், பிப்ரவரி, 21-02-2015,
வள்ளியூரில் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மக்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
என்ஜினீயரிங் மாணவர்
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள நம்பியான்விளையைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. ஆட்டோ டிரைவரான இவருடைய மகன் டேவிட்ராஜா (வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை 9 மணி அளவில் அவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வள்ளியூர்-ராதாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்து நின்ற ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியது.
                                                                                                              மேலும், . . . .

பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் நாளை பதவி ஏற்கிறார் ஓட்டெடுப்புக்கு முன், மஞ்சி திடீர் ராஜினாமா

பாட்னா, பிப்ரவரி, 21-02-2015,
நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் மஞ்சி நேற்று திடீரென்று பீகார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரின் அழைப்பை ஏற்று நிதிஷ்குமார் நாளை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
நிதிஷ்குமார் தேர்வு
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்ததை தொடர்ந்து, முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவு அளித்த 7 மந்திரிகளும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர்.
                                                                                                            மேலும், . . . .

No comments:

Post a Comment