Saturday 7 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (08-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டெல்லி சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பு 67 சதவீதம் ஓட்டுப்பதிவு ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி சட்டசபை தேர்தலில் 67 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி, பிப்ரவரி, 08-02-2015,
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு, பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மல்லுக்கட்டுகிறது.
கண்காணிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலுக்காக 70 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 1 கோடி 33 லட்சம் வாக்காளர்களுக்காக 12 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
                                                                                                          மேலும், . ..  .

ரூ.9½ லட்சம் கொள்ளை போனதாக நாடகம் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

பூந்தமல்லி, பிப்ரவரி, 08-02-2015,
சென்னை போரூரில்கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
பணம் கொள்ளை போனதாக புகார்
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 40). இவர் கடந்த 2-ந்தேதி போரூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.
அதில் அவர், ‘வெளிநாட்டு சாக்லெட்டுகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு காஜாசெரீப்(30) என்பவர் உயர் ரக செல்போன்கள் விற்பனைக்கு உள்ளதாக கூறியதால், போரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த அவரை பார்க்க நானும், எனது நண்பர் அப்பாசும் சென்றோம். அப்போது எங்கள் மீது மயக்க மருந்தை தெளித்து விட்டு ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை காஜாசெரீப் மற்றும் அவரது கூட்டாளிகள் பறித்து சென்று விட்டனர்’ என்று கூறி இருந்தார்.
காரை மடக்கி சோதனை
இதனையடுத்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் போரூர் உதவி கமிஷனர் குழந்தைவேலு, போரூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த புகார் நம்பும்படியாக இல்லாத காரணத்தால் புகார் அளித்த சாகுல் அமீது மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போரூர் ரவுண்டானா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
                                                                                                                 மேலும், . . . .

கல்லூரியை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு: சட்டக்கல்லூரி மாணவர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் கல்லூரி கட்டிடத்தில் ஏறி மாணவர் தற்கொலை மிரட்டல்


சென்னை, பிப்ரவரி, 08-02-2015,
கல்லூரியை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டக்கல்லூரியை மாற்ற எதிர்ப்பு
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி சென்னை பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
                                                                                    மேலும், . . . .. 

ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்

பாட்னா, பிப்ரவரி, 08-02-2015,
பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பீகாரின் புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நீக்க முயற்சி
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கும், முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் மறைமுகமாக முயற்சித்து வந்தனர்.
இந்த பிரச்சினையில் கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக இருந்ததால், மஞ்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
சமரச உடன்பாடு இல்லை
புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரை தேர்ந்து எடுக்க தீர்மானித்த ஐக்கிய ஜனதாதள மேலிடம், முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுமாறு மஞ்சியை கேட்டுக் கொண்டது. ஆனால் மேலிட கட்டளையை ஏற்க மறுத்த அவர், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நிதிஷ்குமாரை பாட்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது அங்கு சரத் யாதவும் இருந்தார். ஆனால் அந்த கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமரச உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
                                                                                                                 மேலும், . . .. . 

No comments:

Post a Comment