Wednesday 4 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (05-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (05-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

6 மணி நேர மறியலால் வடசென்னை ஸ்தம்பித்தது சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை கல்வீச்சு-போலீஸ் தடியடியால் பரபரப்பு

சென்னை, பிப்ரவரி, 05-02-2015,
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனையில் நடத்திய 6 மணி நேர மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வடசென்னை ஸ்தம்பித்தது.
கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
சட்டக்கல்லூரியை மாற்ற எதிர்ப்பு
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியானது.
சட்டக்கல்லூரி தற்போது செயல்படும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அதை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்றும் நேற்று முன்தினத்தில் இருந்து சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னை பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாகவும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று மதியம் 11.30 மணியளவில் சுமார் 200 சட்டக்கல்லூரி மாணவர்கள் பாரிமுனையில் திரண்டனர். அவர்கள் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்லப்போவதாகவும், கோட்டையில் தலைமை செயலாளரை சந்தித்து மனு கொடுக்க போவதாகவும் தெரிவித்தனர்.
தடுத்து நிறுத்தினர்
சட்டக்கல்லூரி மாணவர்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே செல்லும்போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
                                                                                                        மேலும், . . .  .

ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க - தி.மு.க. மோதல்; கார் கண்ணாடி உடைப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 8 பேர் கைது

திருச்சி, பிப்ரவரி, 05-02-2015,
ஸ்ரீரங்கத்தில், அ.தி.மு.க.-தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க.வினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க - தி.மு.க. மோதல்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் நேற்று காலை அ.தி.மு.க., தி.மு.க.வினர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் ராகவேந்திராபுரத்தில் திருவடி தெருவில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ரவி(வயது 56), தினகர்(43), ஆறுமுகம்(55), ராமஜெயம்(57) ஆகிய 4 பேரை பிடித்தனர். அப்போது அங்கு நின்றிருந்த தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கார் கண்ணாடி உடைப்பு
இது குறித்து ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி மனோகரனுக்கு அ.தி.மு.க.வினர் தகவல் தெரிவித்தனர்.
                                                                                                       மேலும், . . .  .

மேல் முறையீடு விசாரணையில் 3-வது நபராக சேர்க்க கோரும் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி மனுக்கள் மீது இன்று தீர்ப்பு? தள்ளுபடி செய்யுமாறு ஜெயலலிதா வக்கீல் வாதம்

பெங்களூரு, பிப்ரவரி, 05-02-2015,
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3-வது நபராக சேர்க்கக்கோரி க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்கள் மீது இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்பிரமணியசாமி வாதம்
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3-வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-
‘‘நான் தான் சொத்து குவிப்பு வழக்கின் உண்மையான புகார்தாரர். இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது ஆஜராகி சுதந்திரமாக வாதாடவும், எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்யவும் எனக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்:- அரசு தரப்பில் இன்னொரு வக்கீல் ஆஜராக சட்டத்தில் இடம் இல்லை. எனவே சுப்பிரமணியசாமி கோர்ட்டில் ஆஜராகி சுதந்திரமாக வாதாட முடியாது. இதை அனுமதிக்கக்கூடாது. இதுபற்றி குற்றவியல் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து மூலமான வாதத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கலாம்.
சுப்பிரமணியசாமி கிடையாது
வக்கீல் குமார்(ஜெயலலிதா தரப்பு):- சொத்து குவிப்பு வழக்கின் உண்மையான புகார்தாரர் சுப்பிரமணியசாமி கிடையாது.
                                                                                                                மேலும், . . .  .

டெல்லி தேர்தல் பிரசாரத்தில்ஜெயந்தி நடராஜன் குற்றச்சாட்டுக்கு, ராகுல் காந்தி பதில்“சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்களின் நலன்களைத்தான் பாதுகாக்க சொன்னேன்”

புதுடெல்லி, பிப்ரவரி, 05-02-2015,
முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் தம்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு, டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பதில் அளித்தார். சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்களின் நலன்களைத்தான் பாதுகாக்குமாறு அவரிடம் கூறியதாக தெரிவித்தார்.
ராகுல் மீது குற்றச்சாட்டு
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்த ஜெயந்தி நடராஜன், கடந்த 30-ந் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அப்போது அவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டினார். தான் சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்தபோது, தனது துறையில் ராகுல் காந்தியின் தலையீடு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதை காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் மறுத்தனர். ராகுல் காந்தி மீதான ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என அவர்கள் கூறினர். ஆனால் ராகுல் காந்தி நேரடியாக பதில் அளிக்கவில்லை.
குற்றச்சாட்டுக்கு பதில்
இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஜஹாங்கிர்புரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தன் மீதான ஜெயந்தி நடராஜனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கிற வகையில் ராகுல் காந்தி பேசினார்.
                                                                                                                    மேலும், . .  . .

No comments:

Post a Comment