Saturday 21 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (22-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை திடுக்கிடும் தகவல் அம்பலம்

மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, பிப்ரவரி, 22-02-2015,
மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சக ஆவண திருட்டு ஊழல் விவகாரம், விசுவரூபம் எடுக்கிறது.
ஆவண திருட்டு ஊழல்
டெல்லி பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், இறக்குமதி தொடர்பான முக்கிய கொள்கை ஆவணங்கள் களவாடப்பட்டு, பிரபல நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள ஊழல், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊழலில் முதலில் கடந்த 19-ந் தேதி பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ்நிலை ஊழியர்கள் 2 பேர், இடைத்தரகர்கள் 3 பேர் என 5 பேர் சிக்கினர். அஷாராம், ஈஸ்வர் சிங், லால்தா பிரசாத், ராகேஷ் குமார், ராஜ்குமார் சவுபே ஆகிய அந்த 5 பேரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் எரிசக்தி ஆலோசகர்களான முன்னாள் பத்திரிகையாளர் பிரவாஸ் ஜெயின், சாந்தனு சைக்கியா ஆகிய2 பேரை கைது செய்தனர்.
பட்ஜெட் ஆவணங்கள்
7 பேரும் டெல்லி பாட்டியாலா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
                                                                                                               மேலும், . . . . .

சபாநாயகர் மீது தாக்குதல்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீசு

சென்னை, பிப்ரவரி, 22-02-2015,
சட்டசபையில் சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, அதற்கு விளக்கம் கேட்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீசு அனுப்பியுள்ளது.
தள்ளுமுள்ளு
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 19-ந் தேதி நடந்த விவாதத்தின் போது தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மோகன் ராஜ், முன்னாள் முதல்-அமைச்சர் பற்றி கூறிய வார்த்தைக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளியும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு,
                                                                                                                           மேலும்,.. . . 

சென்னை திரிசூலம் கல்குவாரி 300 அடி பள்ளத்தில் கிளீனருடன் நீரில் மூழ்கிய டிப்பர் லாரி கிரேன் மூலம் மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை


தாம்பரம், பிப்ரவரி, 22-02-2015,
திரிசூலத்தில் உள்ள கல்குவாரியில் டிப்பர் லாரி ஒன்று கிளீனருடன் 300 அடி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கியது. லாரியை கிரேன் மூலம் மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கல்குவாரிகள்
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த பகுதியில் கல்குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டதால் குவாரிகள் இயங்கவில்லை. இந்த பகுதியில் 100-க்கும் அதிகமான கிரஷர்கள் உள்ளன.
நல்லம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த கிரஷர்களுக்கு லாரிகள் மூலம் கருங்கற்கள் கொண்டுவரப்படும். அவற்றை இங்கு ஜல்லிகளாக தயார் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன.
                                                                                                                        மேலும், . . . . .

நான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஆலந்தூர், பிப்ரவரி, 22-02-2015,
நான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷியம், பிராங்கிளின்பிரகாஷ், நாஞ்சில்பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரிய நபர்கள் இல்லை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சி பொருளாளர் மோதிலால்வோரா ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி பேசினோம். அதுபற்றி உங்களிடம் சொல்வதற்கு இல்லை. கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை.
ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நான் பதில் சொல்ல போவது இல்லை.
                                                                                                       மேலும், . . . . .

No comments:

Post a Comment