Wednesday 25 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஊழல் புகாரின் பேரில் போலீசார் வழக்கு அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச கவர்னர் ராஜினாமா

ஊழல் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால், மத்திய அரசின் கட்டளையை ஏற்று மத்திய பிரதேச மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2015,
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி ராம் நரேஷ் யாதவ்.
இவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2011-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிகாலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ளது.
ராஜினாமா
இந்த நிலையில் அவர் மீது பணியாளர் தேர்வு வாரிய ஊழல் தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
                                                                                                     மேலும் , . . . .

நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை பஸ்கள் உடைப்பு; ஆட்டோ எரிப்பு போலீஸ் தடியடியால் பதற்றம்


நெல்லை, பிப்ரவரி, 26-02-2015,
நெல்லையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர், பொன்னையா (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று காலை தச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டார். பின்னர் வண்ணார்பேட்டை மேம்பால ரவுண்டானாவை கடந்து வடக்கு பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. அந்த கும்பலில் சிலர் கைகளில் வைத்திருந்த அரிவாள்களால் பொன்னையாவை வெட்ட முயற்சி செய்தனர்.
படுகொலை
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னையா ஆட்டோவை விட்டு கீழே இறங்கி உயிர் பிழைப்பதற்காக ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.
பொன்னையாவுக்கு கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டுகள் விழுந்தன. இதில் பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பொன்னையா ஓட்டி வந்த ஆட்டோவை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே கவிழ்த்து போட்டுவிட்டு, தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி விட்டார்கள்.
                                                                                                     மேலும், . . . . .

1-ந் தேதி முதல் அமல் டெல்லியில் மின்கட்டணம் பாதியாக குறைப்பு மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை

புதுடெல்லி, பிப்ரவரி, 26-02-2015,
டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை செய்யப்படும். இது 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
தேர்தல் வாக்குறுதி
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் சப்ளை செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் இப்போது அந்த கட்சி நிறைவேற்றி உள்ளது.
மந்திரிசபை முடிவு
இதற்கான முடிவு, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்த மாநில மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 400 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு தற்போது வசூலிக்கப்படுகிற மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படுகிறது. இது வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன் பலனை டெல்லியில் வசிக்கிற 90 சதவீதம் மக்கள் அடைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
                                                                                    மேலும், . . . .

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே? கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி மீண்டும் சரமாரி கேள்வி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பதில் சொல்லாமல் மவுனம்

பெங்களூரு, பிப்ரவரி, 26-02-2015,
ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே? என்று கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி மீண்டும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.
பவானிசிங் வாதம்
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் ஜெயலலிதா உள்பட 4 பேர்கள் மற்றும் நிறுவனங்களின் வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து அரசு தரப்பு வாதம் நேற்று முன்தினம் தொடங்கியது.
அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை நடத்தி வருகிறார். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் நேற்று தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதிடுகையில், ‘‘ஜெயலலிதா அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராகவும், எம்.பி.யாகவும், முதல்- அமைச்சராகவும் பதவி வகித்தார். சசிகலாவின் கணவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுதாகரன் சென்னைக்கு படிக்க வந்தபோது ஜெயலலிதா வீட்டில் தங்கினார். இளவரசியின் கணவரும் உணவு துறையில் பணியாற்றினார். அவர் மரணம் அடைந்துவிட்டார். ஜெயலலிதா வீட்டில் 4 பேரும் தங்கி இருந்தனர். ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேருக்கு வருமானம் எதுவும் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்து தான் மற்ற 3 பேருக்கும் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றது’’ என்றார்.
ஆவணங்கள் எங்கே?
அப்போது நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, ‘‘ஜெயலலிதாவிடம் இருந்து மற்ற 3 பேருக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதாக நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா? 3 பேரும் ஜெயலலிதாவின் பினாமிகள் என்று சொல்கிறீர்கள். ரத்த உறவு இருப்பவர்கள் மட்டுமே பினாமிகளாக இருக்க முடியும். அவ்வாறு இருக்க இவர்களை எப்படி ஜெயலலிதாவின் பினாமிகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’’ என்று கேள்விகளை கேட்டார்.
நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு வக்கீல் பதில் சொல்லாமல் மவுனமாக நின்று இருந்தார்.
                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment