Monday 23 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சென்னை திரிசூலம் கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய டிப்பர் லாரி, கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல் லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும் மீட்கப்பட்டன

தாம்பரம், பிப்ரவரி, 23-02-2015,
சென்னையை அடுத்த திரிசூலத்தில் உள்ள கல்குவாரி 300 அடி பள்ளத்தில் கிளீனருடன் நீரில் மூழ்கிய லாரி மற்றும் கிளீனர் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லாரியின் பின்பக்க டயர்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன.
300 அடி பள்ளத்தில் விழுந்தது
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த பகுதியில் 100-க்கும் அதிகமான கிரஷர்களும் உள்ளன. இங்குள்ள 1-ம் நம்பர் கல்குவாரியின் மேல் பகுதியில் தனியார் கிரஷர் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை ஜல்லி ஏற்ற வந்த லாரியை டிரைவர் ராமு என்பவர் ஓட்டி வந்தார்.
லாரியில் கிளீனராக கலைவாணன்(வயது 25) என்பவர் இருந்தார். லாரியை கிரஷரில் விட்டு விட்டு ராமு சாப்பிட சென்று விட்டதாக தெரிகிறது. ஜல்லி ஏற்ற வசதியாக லாரியை விடுவதற்காக கலைவாணன் லாரியை முன்னோக்கி எடுத்தார். அப்போது ‘பிரேக்’ பிடிக்காததால் டிப்பர் லாரி, கல்குவாரி உச்சியில் இருந்து 300 அடி பள்ளத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கியது. டிப்பர் லாரியுடன் கிளீனர் கலைவாணன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கிரேன் கொண்டுவரவில்லை
இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சூரியபிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் டியூப் கட்டி, லாரி விழுந்த இடத்தில் பாதாள கொலுசை கயிறு மூலம் கட்டி ஆய்வு செய்தனர். அப்போது 50 அடி ஆழத்தில் லாரி சிக்கிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.
300 அடி பள்ளத்தில் கிரேனை கொண்டு வந்து இறக்குவது சிரமம் என்பதால் கல்குவாரியின் உச்சியில் லாரி கவிழ்ந்த பகுதியில் ராட்சத கிரேன் கொண்டு வந்து அதன் மூலம் ரோப் கயிறு இறக்கி லாரியை தூக்க முடிவு செய்யப்பட்டது.
கிரேன் உரிமையாளர்கள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்து விட்டு கிரேன் கொண்டு வருவதாக கூறிச்சென்றனர்.
                                                                                                                       மேலும், . . . . .

நாமக்கல் அருகே: தாய், மனைவி உள்பட 3 பேரை கொலை செய்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல், பிப்ரவரி, 23-02-2015,
நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரை படுகொலை செய்த விவசாயி, அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாய குடும்பம்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (வயது 75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் 6½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் காளியண்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மனைவி-மகன் தற்கொலை
பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
                                                                                             மேலும், . . . . . .

கணவரை கொன்ற ரவுடியை கூலிப்படையை ஏவி பழி தீர்த்தார் சென்னை ரவுடி கொலையில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் மனைவி பற்றி பரபரப்பு தகவல்

சென்னை, பிப்ரவரி, 23-02-2015,
சென்னை எழும்பூரில் ரவுடியை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மனைவி கைது செய்யப்பட்டார். கணவரை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரவுடி கொலை
சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் என்ற டி.வி.செந்தில்(வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்ற இவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கடந்த 9-ந் தேதி அன்று இரவு இவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் எதிரில் உள்ள பொன்னியம்மன் கோவில் சாலை சந்திப்பில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் செந்திலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் தப்பி ஓடி விட்டனர்.
கூலிப்படை கும்பல் கைது
இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் மதிஅரசு தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கூலிப்படை தலைவன் ஜான்சன்(வயது 26), அவரது கூட்டாளிகள் பாபு(25), ரமேஷ்(27), சதீஷ்(27), சரத்குமார்(27), அருண்குமார்(26), சந்துரு(30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். ஜான்சன் செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்தவர். மாதவரத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் ஆட்டோ டிரைவர் முருகன் என்பரை கொலை செய்த வழக்கிலும், மதுரவாயலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளை அடித்த வழக்கிலும் ஜான்சன் சிறைக்கு போனவர். கைதான சந்துரு, திருவான்மியூரில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைக்கு போனவர்.
கைதான மற்றவர்கள் அனைவரும் சாதாரண கூலித்தொழிலாளிகள், கொலை தொழிலுக்கு புதியவர்கள்.
                                                                                                               மேலும், . . .

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை இன்று சொந்த ஊர் திரும்புகிறார்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 23-02-2015,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் (வயது 47).
ஆப்கானிஸ்தான் சென்றார்
இவர் ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று, அங்கு ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.
                                                                                                          மேலும், . . . . . 

No comments:

Post a Comment