Tuesday 10 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (11-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆம் ஆத்மி அமோக வெற்றி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் 14-ந் தேதி பதவி ஏற்கிறார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 11-02-2015
டெல்லி சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
பலத்த போட்டி
இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கியது. மத்தியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா, டெல்லியிலும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, போட்டியில் இறங்கியது. 2013 வரை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்று விரும்பியது.
ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே நட்சத்திர பிரசாரகராக விளங்கினார். பாரதீய ஜனதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, முன்னணி தலைவர்கள், மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 3 கட்சிகளுமே வாக்காளர்களுக்கு வாக்குறுதி களை வாரி வழங்கின.
வரலாறு காணாத ஓட்டுப்பதிவு
70 இடங்களுக்கு கடந்த 7-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில், வரலாறு காணாத அளவுக்கு 67.08 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியே தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என கூறின. எனினும் இந்த கருத்துக் கணிப்புகளை பாரதீய ஜனதா கட்சி நிராகரித்தது.
ஓட்டு எண்ணிக்கை
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
                                                                                                                மேலும், . . . .

‘டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி எங்களுக்கு பெரிய பின்னடைவு’ பா.ஜனதா ஒப்புதல்

புதுடெல்லி, பிப்ரவரி, 11-02-2015
டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி எங்களுக்கு பெரிய பின்னடைவுதான் என்று பா.ஜனதா ஒப்புக்கொண்டு உள்ளது.
டெல்லியில் 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 31 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவுக்கு தற்போது 3 தொகுதிகள் மட்டுமே கிடைத்து உள்ளது. இது அக்கட்சி தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தேர்தல் தோல்வி பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி கூறியதாவது:-
பெரிய பின்னடைவு
இந்த தேர்தல் தோல்வி பா.ஜனதாவுக்கு பெரிய பின்னடைவுதான். இந்த தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம்.
டெல்லி மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கெஜ்ரிவால் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைவருக்கும் பங்கு உண்டு
கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான முரளிதர ராவ் கூறும்போது, ‘‘டெல்லி தேர்தலில் பா.ஜனதாவுக்கு கிடைத்த தோல்வியில் அனைவருக்குமே பங்கு உண்டு. இதற்காக எந்த ஒரு தனி நபரையும் விமர்சிக்க கூடாது. டெல்லி தேர்தலுக்கு தொடர்பு இல்லாத பிரச்சினைகளை இதில் தொடர்பு படுத்தக்கூடாது. மத்திய அரசின் செயல்பாடுகள் தேர்தல் பிரச்சினையாக அமையவில்லை’’ என்றார்.
மற்றொரு செய்தி தொடர்பாளரான நளின் கோஹ்லி,
                                                                                                                 மேலும், .. . . .

கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம்மாற்றம் செய்வது அத்தியாவசியம் ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, பிப்ரவரி, 11-02-2015
கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சட்டக்கல்லூரியை இடம் மாற்றம் செய்வது அத்தியாவசியமானது ஆகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கட்டிடம் விரிசல்
சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவன் சித்திக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம், மெட்ரோ ரெயில் பணியினால் சேதமடைந்துள்ளது என்று கூறி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து, போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் விதிமுறை மீறி தடியடி நடத்தியுள்ளனர். எனவே, கல்லூரியை இடம்மாற்ற தடை விதிக்கவேண்டும். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
நிபுணர்கள் குழு அறிக்கை
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆரோக்கியதாஸ் ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம்:-
வக்கீல்:- சட்டக்கல்லூரி இடம்மாற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டு வக்கீல் ராகவாச்சாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
                                                                                                                   மேலும், . . . .

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு

திருச்சி, பிப்ரவரி, 11-02-2015,
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் புதன்கிழமை (பிப்.11) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா பதவியை இழந்ததால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் சீ. வளர்மதி (அதிமுக), என்.ஆனந்த் (திமுக), எம். சுப்பிரமணியம் (பாஜக), க. அண்ணாதுரை (சிபிஎம்) உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
                                                                                              மேலும், . . . . .

No comments:

Post a Comment