Monday 9 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (10-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சட்டசபை தேர்தல் டெல்லியில் இன்று ஓட்டு எண்ணிக்கை ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது மதியத்துக்குள் தெரியவரும்

புதுடெல்லி, பிப்ரவரி, 10-02-2015,
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. மதியம் 1 மணிக்குள் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது தெரிந்து விடும்.
இன்று எண்ணிக்கை
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் 673 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் டெல்லியில் உள்ள 14 மையங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையையொட்டி இந்த மையங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.
மதியத்துக்குள் தெரிந்துவிடும்
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் மதியம் 1 மணிக்குள் வெளியாகி விடும்’ என்றார்.
அப்போது, டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப்போவது பா.ஜனதாவா? அல்லது ஆம் ஆத்மியா? என்பது தெரிந்துவிடும்.
                                                                                                            மேலும், . . . .

எழும்பூரில் ரவுடி வெட்டிக்கொலை பழிக்குப்பழி வாங்க முகமூடி கும்பல் அட்டூழியம்


சென்னை, பிப்ரவரி, 10-02-2015,
சென்னை எழும்பூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழி வாங்க முகமூடி அணிந்த கும்பல் அவரை வெட்டிக்கொன்று தப்பி விட்டது.
டி.வி.செந்தில்
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செந்தில்(எ) டி.வி.செந்தில்(வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை வழக்கு உள்பட 24 வழக்குகள் உள்ளன. சென்னை தொலைக்காட்சி கோபுரத்துக்கு குண்டு வைத்த வழக்கில், இவர் சம்பந்தப்பட்டதால் இவரை டி.வி.செந்தில் என்றும் நண்பர்கள் அழைப்பார்கள்.
ஆரம்பத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜோதியம்மாள் நகர் குடிசைப்பகுதியில் வாழ்ந்தார். அங்கு வசித்தவர்கள் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் குடியமர்த்தப்பட்டனர். அதன்பிறகு செந்திலும் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டார்.
மது அருந்தினார்
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரவுடி ஒழிப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஏழுமலை கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே கொலை திட்டம் தீட்டி ஏழுமலையை தீர்த்துக்கட்டியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குண்டர் சட்ட காவலை முடித்துக்கொண்டு கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் செந்தில் விடுதலை ஆனார்.
                                                                                                         மேலும், . . . . .

ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

திருச்சி, பிப்ரவரி, 10-02-2015,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
13-ந்தேதி இடைத்தேர்தல்
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
இதனால் காலி இடமான ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
29 பேர் போட்டி
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பாரதீய ஜனதா), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆவார்கள். டிராபிக் ராமசாமி உள்பட 24 பேர் சுயேச்சைகள்.
29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க, தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
                                                                                                 மேலும், . . . .

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து முதல்-மந்திரி மஞ்சி நீக்கம் பீகார் கவர்னருடன் நிதிஷ்குமார் சந்திப்பு 128 எம்.எல்.ஏ.க்கள் அணிவகுப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

பீகார் முதல்-மந்திரி மஞ்சி ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, கவர்னரை சந்தித்து பேசிய நிதிஷ்குமார், ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரியதோடு, தன்னை ஆதரிக்கும் 128 எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பையும் நடத்தினார்.
பாட்னா, பிப்ரவரி, 10-02-2015,
பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது.
நிதிஷ்குமார் தேர்வு
கடந்த ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததால், அவரது ஆதரவாளரான மஞ்சி புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவருக்கும் ஐக்கிய ஜனதாதள தலைமைக் கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஐக்கிய ஜனதாதள தலைவர்களும் மற்றும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களும் பாட்னா நகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தனர்.
ராஜினாமா செய்ய மறுப்பு
இதற்கிடையே, தனது பதவிக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த முதல்-மந்திரி மஞ்சி, மந்திரிசபையை அவசரமாக கூட்டி சட்டசபையை கலைக்குமாறு கவர்னருக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பெரும்பாலான மந்திரிகள் சட்டசபையை கலைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய மஞ்சி, பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், முதல்-மந்திரி பதவியை தான் ராஜினாமா செய்யப்போவது இல்லை என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அவர் டெல்லியில் இருக்கும் போதே, அவரது மந்திரிசபையில் இருந்து நிதிஷ்குமார் ஆதரவு மந்திரிகள் 20 பேர் ராஜினாமா செய்தனர்.
                                                                                                                                மேலும், . . . .

No comments:

Post a Comment