Thursday 5 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (06-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சட்டசபைக்கு நாளை தேர்தல் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? பா.ஜனதா - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி

டெல்லி சட்டசபைக்கு நாளை (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜனதா - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுடெல்லி, பிப்ரவரி, 06-02-2015,
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘நீயா, நானா?’ போட்டி
பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க வரிந்து கட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியோ, இந்த தேர்தலிலாவது ஆறுதல் வெற்றி கிடைத்து விடாதா என தவிக்கிறது.
673 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தாலும், பாரதீய ஜனதாவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேதான் ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
முதல்-மந்திரி வேட்பாளர்கள்
ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியிலும், பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும்கூட, முன்னிறுத்தப்பட்டுள்ள அஜய் மக்கான், சாதர் பஜார் தொகுதியில் நிற்கிறார்.
ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் என 3 கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை வசீகரித்து ஓட்டுகளை அள்ளுகிற விதத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளன.
அனல் பறந்த பிரசாரம்
கடந்த 15 நாட்களாக நடந்து வந்த தீவிர பிரசாரத்தில் அனல் பறந்தது.
                                                                                                                    மேலும், . . . . .

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை

சென்னை, பிப்ரவரி, 06-02-2015,
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கை விட்டு, கல்லூரிக்கு திரும்பவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
கட்டிட விரிசல்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம், மெட்ரோ ரெயில் திட்டத்தினால், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த கல்லூரியை வேறு ஒரு இடத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.
இதையடுத்து, சட்டக்கல்லூரி வளாகத்துக்குள் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 கோரிக்கைகள்
இதையடுத்து சட்டக்கல்லூரியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இரவும், பகலும் அங்கு தீவிர பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
                                                                                                      மேலும், . . . .

வட சென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் படுகொலை உறவினர் திருமணத்தில் பங்கேற்றவரை மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது

பெரியபாளையம், பிப்ரவரி, 06-02-2015,
உறவினர் திருமணத்தில் பங்கேற்ற வடசென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
திருமணம்
சென்னை புளியந்தோப்பு வெங்கடாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தென்னரசு(வயது35). வடசென்னை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி செயலாளராக இருந்தார். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் அவரது உறவினர் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் இவர் தனது மனைவி மைதிலி, தாய் சகுந்தலா ஆகியோருடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர், தென்னரசு திருமண மண்டப வாசலில் நிறுத்தி இருந்த தனது காரில் வந்து ஏற சென்றார். பின் இருக்கையில் மனைவி மற்றும் தாய் காரில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் சீட்டில் அமர தென்னரசு கதவை திறந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது திருமண மண்டப வாசலில் தயாராக இருந்த மர்ம கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து தென்னரசை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத தென்னரசு அலறினார். மர்ம கும்பல் தென்னரசு தப்பி செல்ல முடியாதபடி சுற்றி வளைத்து வெட்டியது. மைதிலி காரில் இருந்து இறங்கி வந்து தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது.
சாவு
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தென்னரசு உயிருக்கு போராடினார்.
                                                                                                                     மேலும், . . . .

ஜெயலலிதா வழக்கில் 3-வது நபராக சேர்க்க கோரிய க.அன்பழகனின் மனு, கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி அரசு தரப்புக்கு சுப்பிரமணியசாமி உதவலாம் என உத்தரவு

பெங்களூரு, பிப்ரவரி, 06-02-2015,
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் 3-வது நபராக சேர்க்க கோரிய க.அன்பழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசு தரப்புக்கு சுப்பிரமணியசாமி உதவி செய்யலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
க.அன்பழகன் மனு
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தங்களை 3-வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்து முடிந்தது. சுப்பிரமணியசாமி மற்றும் க.அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் சரவணன் ஆகியோர் தங்களை இந்த வழக்கில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த வாதம் நிறைவடைந்த நிலையில் இதன் மீது நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சொன்னார்.
தள்ளுபடி
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு நேற்று கூடியதும் சசிகலா வக்கீல் பசந்த்குமார் ஆஜராகி வாதிட்டார்.
                                                                                                  மேலும், . . . .

No comments:

Post a Comment