Wednesday 18 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (19-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டீசல் விலை குறைவு காரணமாக தமிழகத்தில் பஸ் கட்டணம் குறையுமா? சட்டசபையில் முதல்-அமைச்சர் பதில்

டீசல் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணம் குறைக்கப்படுமா என்பதற்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று தே.மு.தி.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் (மேட்டூர் தொகுதி) பேசும்போது, ‘‘தற்போது டீசல் கட்டணம் குறைந்துள்ளதால், பஸ் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்’’ என்றார்.
மேலும் ‘‘120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுக்க வேண்டும்’’ என்றார்.
பன்னீர் செல்வம் பதில்
அதற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது:-
2011-ம் ஆண்டு பஸ் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டபோது, டீசல் விலை என்ன இருந்தது,
                                                                                                         மேலும், . . . . .

சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து வாக்குவாதம்: தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் உறுப்பினர் அன்பழகனை கோமாளி என்றதால் கூச்சல் - குழப்பம்

சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் அவர்கள் உள்ளே வந்த நிலையில், தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என்று கூறியதால், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் பேச முயற்சி
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் காலை 11.37 மணிக்கு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘‘மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் சிலர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தொடர்ந்து பேச முற்பட்டார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
தி.மு.க. வெளிநடப்பு
சபாநாயகர் ப.தனபால்:- இது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம். அதுகுறித்து பேசுங்கள்.
அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன்:- கவர்னர் உரை மீதான விவாதம் நடக்கும் நாளில் ‘ஜூரோ ஹவர்’ (நேரமில்லா நேரம்) கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். பட்ஜெட் மீதான விவாதத்தில் நீங்கள் இதுகுறித்து பேசலாம்.
(அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து பேச முயன்றனர்)
சபாநாயகர்:- இதுகுறித்து பொதுவிவாதம் நடக்கும் போது பேசுங்கள். பதில் கிடைக்கும்.
                                                                                                    மேலும், . . . . .

பந்தலூர் அருகே பெண்ணை கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது

பந்தலூர், பிப்ரவரி, 19-02-2015,
பந்தலூர் அருகே பெண்ணை கடித்து கொன்ற புலி அதிரடிப்படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டது.
பெண்ணை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே சோலைக்கடவு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் கடந்த 14-ந் தேதி மகாலட்சுமி (வயது 32) என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தை கடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மகாலட்சுமி பலியானார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இது பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகாலட்சுமி உடலை பிதிர்காடு பஜாரில் நடுரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 இடங்களில் இரும்பு கூண்டு
இந்த புலியை பிடிப்பதற்காக 5 இடங்களில் இரும்பு கூண்டுகள் பொருத்தப்பட்டன. மேலும் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
                                                                                                         மேலும், . . . . .

சென்னை பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பெட்டி தடம் புரண்டது; பயணிகள் உயிர் தப்பினர் வேளச்சேரி-கடற்கரை இடையே 6½ மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு


சென்னை, பிப்ரவரி, 19-02-2015,
சென்னை பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தடம் புரண்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் வேளச்சேரி-கடற்கரை இடையே 6½ மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
பூங்காநகர் ரெயில் நிலையம்
சென்னை வேளச்சேரி-கடற்கரை இடையே இருமார்க்கமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில்(வண்டி எண்:41038) காலை 10.45 மணிக்கு பூங்காநகர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.
மின்சார ரெயிலை பார்த்ததும் பயணிகள் ரெயிலில் ஏற ஆயத்தமாகி கொண்டிருந்தனர். பூங்காநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்காக 6 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகளும் நடைமேடையில் இறங்குவதற்காக காத்திருந்தனர்.
தடம் புரண்டது
அப்போது திடீரென மின்சார ரெயிலின் 3-வது பெட்டி திடீரென தடம்புரண்டது. ரெயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கிய வேகத்தில் ரெயில் பெட்டியானது நடைமேடையில் பலத்த சத்தத்துடன் மோதியது.
இதனால் நடைமேடையில் இறங்க காத்திருந்தவர்கள் அலறினர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
                                                                                                     மேலும், . . . . .

No comments:

Post a Comment