Wednesday 11 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (12-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

15-ந் தேதி முதல் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் சிறிசேனா வருகையையொட்டி தமிழக மீனவர்களின் 87 படகுகள் விடுவிப்பு

இலங்கை அரசு நடவடிக்கை
சிறிசேனாவின் இந்திய வருகையையொட்டி, தமிழக மீனவர்களின் 87 படகுகளை இன்று விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
கொழும்பு, பிப்ரவரி, 12-02-2015,
ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது, கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டு, கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்றன.
தமிழக மீனவர்களின் 87 படகுகள்
சில சமயங்களில் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்ததோடு, மீன்களை அள்ளிச்சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை தொடர்ந்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்களை அந்த நாட்டு அரசு அவ்வப்போது விடுதலை செய்தது.
ஆனால் தங்கள் வசம் உள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவிக்க முடியாது என்று அப்போதைய அதிபர் ராஜபக்சே மறுத்து விட்டார்.
                                                                                                                       மேலும், . . . . .

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு

திருச்சி, பிப்ரவரி, 12-02-2015,
ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
4 முனை போட்டி
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பாரதீய ஜனதா), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.
அமைச்சர்கள்
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், வெளிமாவட்ட அ.தி.மு.க செயலாளர்கள் ஸ்ரீரங்கத்திலேயே முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்தனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 4 நாள் திருச்சியில் முகாமிட்டு ஆதரவு திரட்டினார்.
                                                                                                   மேலும், . . . .

டெல்லி ராம் லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் 40 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படுகிறது

புதுடெல்லி, பிப்ரவரி, 12-02-2015,
கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவுக்கான பணிகள் ராம் லீலா மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மைதானத்தில் 40 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படுகிறது.
கெஜ்ரிவால் பதவி ஏற்பு
டெல்லி சட்டசபைக்கு கடந்த 7-ந்தேதி நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை ஆளும் கட்சித் தலைவராக(முதல்-மந்திரி) ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக நாளை மறுநாள்(சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
டெல்லி மாநில துணை நிலை கவர்னர் நஜீப் சுங், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கும், மந்திரிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராம்லீலா மைதானம்
கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது.
                                                                                                 மேலும், . .  .

பீகாரில் ஆட்சி அமைக்கும் விவகாரம் 130 எம்.எல்.ஏ.க்களுடன் ஜனாதிபதியை சந்தித்தார், நிதிஷ் குமார் கவர்னருக்கு அறிவுரை கூற வேண்டுகோள்

புதுடெல்லி, பிப்ரவரி, 12-02-2015,
பீகாரில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பாக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 130 பேருடன் ஜனாதிபதியை நிதிஷ் குமார் சந்தித்தார். உடனடி முடிவு எடுக்க கவர்னருக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
உரிமை கோரினார்
பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, முதல்-மந்திரி பதவியில் இருந்து ஜிதன்ராம் மஞ்சி நீக்கப்பட்டு, புதிய முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 9-ந் தேதி, கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ் குமார், தனக்கு 130 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதே சமயத்தில், ஜிதன்ராம் மஞ்சியும் கவர்னரை சந்தித்து, தனக்கும் மெஜாரிட்டி இருப்பதாக கூறினார்.
டெல்லி சென்றார்
ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோரி, 24 மணி நேரம் கடந்த பிறகும், அரசு அமைக்க தனக்கு கவர்னர் அழைப்பு விடுக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஜனாதிபதி முன்பு அணிவகுக்கச் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, நேற்றுமுன்தினம் மாலை, பாட்னாவில் இருந்து 2 விமானங்கள் மூலம் 130 எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
                                                                                                                 மேலும், .. . . .

No comments:

Post a Comment