Friday 31 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-02-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

கூடங்குளம் 3, 4–வது அணு உலை அமைக்க எதிர்ப்பு உதயகுமார் உள்பட 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்


நெல்லை, பிப்ரவரி, 01-02-2014,
கூடங்குளம் 3, 4–வது அணு உலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 11 பேர் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
காலவரையற்ற போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் 900 நாட்களை எட்டியது. இதற்கிடையே போராட்ட குழுவினர் மீண்டும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
                                                                                                                                மேலும், . . . 

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - பரிசீலித்து முடிவு


நெல்லை, பிப்ரவரி, 01-02-2014,
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் வெற்றி விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி மேலும் பேசியதாவது:
பணகுடி அருகே உள்ள இந்த மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையம், கேரளத்தில் உள்ள வலியமாலா அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தை தன்னாட்சி பெற்ற தனி மையமாக மாற்ற வேண்டுமென இங்கு பணியாற்றும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், பிரதமர் அலுவலகமும் பரிசீலித்து மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையத்துக்கு தனி வளாக அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை (பிப்.1) முதல் இந்த வளாகத்தின் நிர்வாகம் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்திய விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ரஷியா க்ரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்களை நமக்கு தர மறுத்ததும், முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் க்ரையோஜெனிக் என்ஜின்களை மிகவும் குறுகிய காலத்தில் நமது விஞ்ஞானிகள் உருவாக்கிக் காட்டினர். 2013-ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் உலகளவில் 4-ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை 25 முறை ஏவியுள்ள இந்தியா, 24 முறை பெரும் வெற்றி கண்டுள்ளது. மங்கள்யான் மூலம் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியிலும் இந்தியா தனது இடத்தைப் பதிவு செய்துள்ளது.

                                                                                                                                  மேலும், . . .

அமெரிக்காவில், தரையில் வீசி குழந்தை கொலை தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் உள்பட 3 பேர் கைது

நியூயார்க், பிப்ரவரி, 01-02-2014,
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன்.
பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான். கடந்த 16–ந் தேதி குழந்தையின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
                                                                                                                                              மேலும், . .



Thursday 30 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்க மாநில வேலைவாய்ப்பு இணையதளம் தமிழக அரசின் புதிய திட்டம் பற்றி சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 31-01-2014
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.
அரசுக்கு பாராட்டு
தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டிய கவர்னர், அரசின் புதிய திட்டங்களையும் அறிவித்தார்.
வேலைதேடுவோர், வேலைவாய்ப்பு அளிப்போரை இணைக்கும் வகையில் மாநில வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்படும் என்று கவர்னர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
                                                                                                 மேலும், . . . . 

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பதவிஏற்று ஒரு மாதம் நிறைவு மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 31-01-2014,
டெல்லியில் ஆம் ஆத்மி பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததையொட்டி முதல்–மந்திரி கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரு மாதம் நிறைவு
டெல்லி முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்று, ஒரு மாதம் நிறைவடைந்தது. இதையொட்டி, தனது ஒரு மாத சாதனைகள் குறித்து கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எனது அரசின் ஒரு மாத கால செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருத்து கணிப்புகளும் இதையே தெரிவிக்கின்றன. நான் நிறைய அரசு அலுவலகங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதாக பொதுமக்கள் சொன்னார்கள். இது, டெலிபோன் புகார் சேவை தொடங்கியதால் ஏற்பட்ட விளைவாகும்.
                                                                                                                           மேலும், . . . .

250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் வைகோ அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 31-01-2014,
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
                                                                                              மேலும், . . . .

Wednesday 29 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

ராஜீவ் கொலை கைதிகளின் தூக்குதண்டனை ரத்து ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை கால அவகாசம் கேட்ட மத்திய அரசின் கோரிக்கை தள்ளுபடி

புதுடெல்லி, ஜனவரி, 30-01-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000–வது ஆண்டு உறுதி செய்தது.
கருணை மனுக்கள் தள்ளுபடி
பின்னர் தமிழக கவர்னர் சிபாரிசின் பேரில் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை கடந்த 2011–ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்தார். 11 ஆண்டுகள் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்த பிறகு அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
                                                                                               மேலும், . . . . 

அன்புமணியுடன் மூத்த தலைவர்கள் சந்திப்பு பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியானது தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை மும்முரம்
சென்னை, ஜனவரி, 30-01-2014,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாசுடன், பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்து பேசியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெறுவது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க., பா.ம.க., கொங்குநாடு முன்னேற்ற கழகம், கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் பேட்டியளித்த பா.ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தே.மு.தி.க., பா.ம.க. உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
                                                                                                          மேலும், . . . .

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை, ஜனவரி, 30-01-2014,
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் கமிஷன் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
3 ஆண்டுகள் பணி
பாராளுமன்ற தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும், நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முன்வந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த சில முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
                                                                                                       மேலும், . . . . 

Tuesday 28 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள் அ.தி.மு.க - 4, தி.மு.க - 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 1

சென்னை, ஜனவரி, 29-01-2014,
டெல்லி மேல்–சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் (ராஜ்ய சபா எம்.பி.) பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு பெறுகிறது.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7–ந்தேதி நடைபெறும் என்று மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது.
டெல்லி மேல்–சபை எம்.பி.க்களை மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இதன்படி இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக அ.மு.பி.ஜமாலுதீன் (தமிழக சட்டசபை செயலாளர்), தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக அ.வீரராஜேந்திரன் (சட்டசபை துணைச்செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
                                                                                                                    மேலும், . . . .

இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையா? அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க இலங்கை நடவடிக்கை
வாஷிங்டன், ஜனவரி, 29-01-2014,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை முடியடிக்க, ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கை திரட்டுகிறது.
போர்க்குற்றங்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009–ம் ஆண்டு உச்சகட்டம் அடைந்தது. அப்போது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு போர்க்குற்றங்கள் அரங்கேறின.
                                                                                                         மேலும், . . . .

நெல்லையில் 7 சதவீத இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்


நெல்லை, ஜனவரி, 29-01-2014,
முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நெல்லையில் திரளான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சிறை நிரப்பும் போராட்டம்
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீதமும், தமிழக அரசு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
                                                                                            மேலும், . . . .

Monday 27 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

சென்னையில், இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு இருநாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும்

சென்னை, ஜனவரி, 28-01-2014,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைகளில் அடைத்து விடுகின்றனர்.
ஜெயலலிதா முயற்சி
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
                                                                                        மேலும், . . . . .

டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்

சென்னை, ஜனவரி, 28-01-2014,
டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும் தங்கள் வேட்பு மனுவுடன் தங்களிடமுள்ள சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளனர்.
வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பு
டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க. வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், தங்களிடமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் குறிப்பிட்டு உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:–
                                                                               மேலும், . . . .

அந்தமான் தீவு படகு விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன காயம் அடைந்தவர்களும் விமானத்தில் வந்தனர்
சென்னை, ஜனவரி, 28-01-2014,
அந்தமான் தீவு படகு விபத்தில் பலியானவர்கள் உடல்கள், அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. காயம் அடைந்தவர்களும் விமானத்தில் வந்தனர்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
படகு விபத்து
அந்தமான் யூனியன் பிரதேசம், போர்ட் பிளேரில் உள்ள பே ஐலண்ட் அருகில் நேற்று மாலை விபத்துக்குள்ளாகிய தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரை போர்ட் பிளேருக்கு அனுப்பி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
                                                                                        மேலும், . . . .

Sunday 26 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடி ஏற்றினார் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலம் பலத்த பாதுகாப்புடன் கண்கவர் அணிவகுப்பு
புதுடெல்லி, ஜனவரி, 27-01-2014,
டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடியை ஏற்றினார். பலத்த பாதுகாப்புடன் நடந்த கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
போர் நினைவிடத்தில் மரியாதை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 65–வது குடியரசு தினம், தாய்நாட்டுப்பற்றுடனும், வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நேற்று கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ‘இந்தியா கேட்’டில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னம் அமர்ஜவான்ஜோதியில் பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, முப்படைத்தளபதிகள் உடனிருந்தனர்.

                                                                                          மேலும், . . .

அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற போது நடுக்கடலில் படகு கவிழ்ந்து 31 பேர் பலி காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்களும் இறந்த பரிதாபம்
போர்ட்பிளேர், ஜனவரி, 27-01-2014,
குடியரசு தின விடுமுறையையொட்டி காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒரு குழுவாக அந்தமானுக்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா பயணிகள்
அவர்கள் தெற்கு அந்தமான் மாவட்டத்தில் புரோத்தரபூர் என்ற இடத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். அந்தமான்–நிக்கோபார் பல தீவு கூட்டங்களை கொண்டது ஆகும். நேற்று மாலை அவர்கள் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வளைகுடா பகுதியில் உள்ள தீவுக்கு ‘அக்குவா மெரைன்’ என்ற சுற்றுலா படகில் சென்றனர்.
அந்த படகில் அவர்களுடன் மும்பையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இருந்தனர். 45–க்கும் அதிகமான பேர் அதில் பயணம் செய்தனர்.
நடுக்கடலில் படகு கவிழ்ந்தது
தலைநகர் போர்ட்பிளேர் அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று அந்த படகு தள்ளாடியது. கண் இமைக்கும் நேரத்தில் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்தவர்கள் அலறினார்கள்.
                                                                                                                            மேலும், . . . .

இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் என்ன? நரேந்திர மோடி விளக்கம்
காந்திநகர், ஜனவரி, 27-01-2014,
இந்தியாவை பற்றிய எதிர்கால திட்டங்கள் குறித்து நரேந்திர மோடி தனது வலைத்தளத்தில் விளக்கி உள்ளார்.
வலைத்தளத்தில் மோடி
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குடியரசு தினத்தையொட்டி தனது வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:–
நாம் 65–வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். 64 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் நமது நாடு குடியரசு ஆனது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இந்த நாள் தேசிய வலிமை நாள், சுய நம்பிக்கை நாள்.
‘மோடி எல்லாம் சரிதான், இந்தியாவை பற்றிய உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று பலரும் நீண்ட தலையங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னை கேட்டிருக்கிறார்கள்.
                                                                                                 மேலும், . . . .

Saturday 25 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தை சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்
சென்னை, ஜனவரி, 26-01-2014,
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 25 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விருதினை வழங்குகிறார்.
ஜனாதிபதி விருது
மாநில காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலானவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதன் மூலம் காவல்துறையை சேர்ந்தவர்களை கவுரவிப்பதுடன், அவர்களை மேலும் சிறப்பாக பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன்.
                                                                                                மேலும், . . . . 

நிலையான ஆட்சி அமைக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் குடியரசு தின விழா பேச்சு
புதுடெல்லி, ஜனவரி, 26-01-2014,
2014, ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கும் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வருகிற தேர்தல்களில் நிலையான அரசை தேர்ந்து எடுக்கும்படி, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரணாப் முகர்ஜி உரை
குடியரசு தின விழாவையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது–
                                                                                       மேலும், . . . . 

272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற பாடுபடுங்கள் பா.ஜனதாவினருக்கு நரேந்திர மோடி அழைப்பு
காந்திநகர், ஜனவரி, 26-01-2014,
வாக்காளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள், 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ‘மிஷன் 272 பிளஸ்’ திட்டம் வெற்றிபெற பாடுபடுங்கள் என்று பா.ஜனதாவினருக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்காளர் தினம்
வாக்காளர் தினத்தையொட்டி, குஜராத் மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
ஓட்டு என்பது வாக்காளர்களின் கையில் உள்ள மிகப்பெரிய ஆயுதம். அதன் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஓட்டுப்பெட்டியின் முன்பு, எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சாதாரணமானவர்கள் தான் என்று வாக்காளர்கள் காட்ட வேண்டும்.
                                                                                        மேலும், . . . 

Friday 24 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,
 
தி.மு.க.வில் இருந்து, தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தற்காலிக நீக்கம் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 25-01-2014,
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. பொதுக்குழுவில்
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதற் கான முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை.
ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படத்தில் மு.க.அழகிரியையும் இணைத்து, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்தனர். இது தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. பேனர் வைத்தவர்களை தி.மு.க. தலைமை கழகம் இடை நீக்கம் செய்தது.

                                                                                                                மேலும், . . . 

பா.ஜனதா கட்சி பொறுப்பாளர் சென்னை வருகை பா.ம.க.வுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை தொடக்கம்
சென்னை, ஜனவரி, 25-01-2014,
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, பா.ம.க.வுடன் இன்று (சனிக்கிழமை) மீண்டும் பா.ஜனதா கட்சி பேச்சு வார்த்தையை தொடங்குகிறது. அதற்கான, அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று சென்னை வருகிறார்.அதே நேரத்தில், தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு வருகிறது.
பா.ம.க.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க., தமிழகத்தில் 6 தொகுதியிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என மொத்தம் 7 இடங்களில் போட்டியிட்டது. அதாவது, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதியிலும், புதுச்சேரியிலும் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால், ஒன்றில்கூட பா.ம.க. வெற்றிபெறவில்லை.இந்த நிலையில், 2011–ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின்னர் பா.ம.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி சேரப்போவதில்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
சமூக ஜனநாயக கூட்டணி
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2013) அக்டோபர் மாதம் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து சமூக ஜனநாயக கூட்டணி என்ற புதிய அணியை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தலில் இந்த அணி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்ததுடன், பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்தார்.
                                                                                                              மேலும், . . . 

‘தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்’ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
சென்னை, ஜனவரி, 25-01-2014,
‘தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்’ என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கூறினார்.
தி.மு.க.வில் இருந்து நேற்று அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி. நேற்று இரவு தொலைபேசி மூலம் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க.அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:–
நியாயம் வெல்லும்
கேள்வி:– உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?.
                                                                                                 மேலும், . .. 

Thursday 23 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

உகாண்டா பெண்ணிடம் அத்துமீறியதாக புகார் டெல்லி சட்ட மந்திரி மீது நடவடிக்கை கிடையாது அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2014,
உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக டெல்லி சட்ட மந்திரி மீது புகார் எழுந்துள்ளது. இருப்பினும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சட்ட மந்திரி அத்துமீறல்
டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பார்தி, உகாண்டா நாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையில் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
                                                                           மேலும், . . . .

சாவில் மர்மம் நீடிப்பு சுனந்தா தரூர் வழக்கு, டெல்லி குற்றப்பிரிவுக்கு மாற்றம் மெல்லக்கொல்லும் விஷம் தரப்பட்டதா?
புதுடெல்லி, ஜனவரி, 24-01-2014,
சுனந்தா தரூர் சாவில் மர்மம் நீடிக்கும் நிலையில் வழக்கு, டெல்லி குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் தரப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மர்மச் சாவு
முதல் இரு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் மத்திய மந்திரி சசி தரூர் (வயது 57), மூன்றாவதாக சுனந்தாவை (52) திருமணம் செய்திருந்தார். 2 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில் சுனந்தாவுக்கும் சசி தரூர் மூன்றாவது கணவர். இவர்களின் 3 ஆண்டு கால இல்வாழ்வில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் புகுந்ததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சசி தரூர்–சுனந்தா இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, சுனந்தா கடந்த 17–ந் தேதி இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                                                       மேலும், . . . . 

எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிஷேகம் அவமதிப்பு செய்ததற்கு கண்டனம்





நெல்லை, ஜனவரி, 24-01-2014,
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள மறைந்த சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே ஐகோர்ட்டு விட்டுள்ளது. உள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் முத்துக்குமார் என்பவர், நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு நேற்று செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்தார். இதை அறிந்த பாதுகாப்பு போலீசார் முத்துக்குமாரை கைது செய்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
                                                                                     மேலும், . . . .

Wednesday 22 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,


டெல்லி மேல்-சபை தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா


சென்னை, 23-01-2014,
டெல்லி மேல்–சபை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி.) பதவியிடங்களில், தமிழகத்திற்கான ஆறு இடங்கள் ஏப்ரல் 2–ந்தேதியுடன் காலியாகின்றன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை 21–ந்தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 21–ந்தேதியில் இருந்து 28–ந் தேதிவரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
                                                                                                       மேலும், . . . . . 

தற்கொலை செய்யும் அளவுக்கு ‘சுனந்தா தரூர் கோழை அல்ல’ மகன் ஷிவ் மேனன் பேட்டி
புதுடெல்லி, 23-01-2014,
தற்கொலை செய்யும் அளவுக்கு சுனந்தா தரூர் கோழை அல்ல என அவரது மகன் ஷிவ் மேனன் கூறினார்.
மர்ம மரணம்
மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52), கடந்த 17–ந் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசி தரூருடன் மெஹர் தரார் (45) என்ற பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்.
                                                                          மேலும், . . . . .

ரிசர்வ் வங்கி அறிவிப்பு நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்
புதுடெல்லி, 23-01-2014,
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
ஆண்டு எண்
கடந்த 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் மத்தியில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும்.
கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
                                                                            மேலும், . . . .

Tuesday 21 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2014) மாலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,

 மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் விடிய, விடிய தர்ணா போராட்டம் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
புதுடெல்லி, ஜனவரி, 21–01-2014,
டெல்லிக்கு இந்த மாத தொடக்கத்தில் சுற்றுலா வந்த டென்மார்க் பெண் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்துக்காக 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய உள்துறை அதை நிராகரித்தது.
இதையடுத்து 4 போலீசாரை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும். போலீசாரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு தர வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நேற்று போராட்டத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தலைவரும், முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலே போராட்டத்துக்கு தலைமை தாங்கியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
                                                                                                               மேலும், . . . . 

அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு பீகார், ஜார்க்கண்டில் பா.ஜ.க. முந்துகிறது - கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடெல்லி, ஜனவரி, 21–01-2014,
பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று மாநிலம் வாரியாக ஐ.பி.என். தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஓடிசா ஆகிய 4 மாநில கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளை முந்தும் நிலை இருப்பது தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
                                                                                                                                           மேலும், . . 

உத்தரப்பிரதேசத்தில் நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரசாரம்
லக்னோ, ஜனவரி, 21–01-2014,
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே பல இடங்களில் பேசிய அவர் அங்கு மீண்டும் பிரசாரம் செய்ய செல்கிறார். நாளை மறுநாள் (23–ந்தேதி) கோரத்பூரில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு நரேந்திர மோடி உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேசுவார் என்று மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேசம் என்றாலே பாரதீய ஜனதா ராமர் கோவில் விவகாரத்தைத்தான் கையில் எடுக்கும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் மோடியின் பிரசாரம் இருக்கும்.
                                                                                                                        மேலும், . . . 

Monday 20 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2014) மாலை,IST- 02.00 மணி,நிலவரப்படி,

கூட்டணியில் காங்கிரசை சேர்க்க பயப்படும் கட்சிகள் எதிர்ப்பு அலை வீசுவதால் பரிதாபம்
சென்னை, ஜனவரி, 20–01-2014,
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜனதா ஒரு அணியாகவும் களத்தில் குதிக்கிறது. ஆனால் காங்கிரஸ் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
அ.தி.மு.க.வுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள், மூவேந்தர் முன்னணி கழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் ஆதரவாக உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

                                                                                           மேலும், . . . . . . 

கோடீசுவர பெண்ணாகா வலம் வந்த சுனந்தாவுக்கு ரூ. 95 கோடியில் துபாயில் 12 சொகுசு வீடுகள்
புதுடெல்லி, ஜனவரி, 20–01-2014,
மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012–13–ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில் இருந்து இது தெரிய வந்தது.
துபாயில் அவருக்கு 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 95 கோடியிருக்கும் இதில் ரூ.15 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கனடாவிலும் ரூ.3½ கோடிக்கு வீடு உள்ளது. இது ரூ.1.65 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.6 கோடிக்கு தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் வைத்திருந்தார். வங்கியில் டெபாசிட் செய்தது மற்றும் கையில் வைத்திருந்த மொத்த பணம் ரூ. 7 கோடியாகும்.

                                                                                 மேலும், . . . . 

யாருடன் கூட்டணி சேருவது? விஜயகாந்த் தீவிர ஆலோசனை
சென்னை, ஜனவரி, 20–01-2014,
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அகில இந்திய அளவில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்த வியூகங்களை அமைத்து வருகின்றன. பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதன் மூலம் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று அந்த கட்சி கருதுகிறது.
பா.ஜனதாவை முறியடிக்க ராகுல்காந்தி காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் அ.தி.மு.க தனித்து போட்டியிடுகிறது. பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.முக. ஆகிய கட்சிகளை சேர்க்க தமிழருவி மணியன் முயற்சி செய்து வருகிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டார். பா.ம.க சார்பில் அன்புமணி ராமராஸ் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புதிய தமிழகம், மனித நேயமக்கள் கட்சி ஆகியவை உள்ளன. தமிழக காங்கிரசுடன் எந்த கட்சியும் இல்லை. தே.மு.தி.க.வும் தனது முடிவை இதுவரை அறிவிக்க வில்லை.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணயில் சேர்க்க பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

                                                                                                                     மேலும், . . . . 

Sunday 19 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-01-2014) மாலை,IST- 04.00 மணி,நிலவரப்படி,



கள்ளக்காதல் தகராறில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுனந்தா மரணம் சசிதரூரிடம் போலீஸ் விசாரணை
புதுடெல்லி, ஜனவரி, 19–01-2014
மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்த சசிதரூர் அரசியலுக்கு திரும்பியது முதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். அரசியலில் நுழைந்த உடனேயே மத்திய மந்திரியானார்.
2 மனைவிகளை விவாகரத்து செய்த அவர் தனது 57–வது வயதில் 42 வயது பெண்ணான சுனந்தாவை 3–வது திருமணம் செய்தார்.
அடுத்த கொச்சி ஐ.பி.எல். அணியின் பினாமியாக செயல்பட்டதாக குற்றச் சாட்டுக்கு ஆளானார். இதனால் ஒரே வருடத்தில் மந்திரி பதவியை இழந்தார். அதன்பிறகு 2012–ல் மீண்டும் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு இடையேயான சமீபத்தில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வெடித்தது.
‘‘பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் எனது கணவரை பின் தொடர்கிறார். அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி. உங்களை விட்டு நான் பிரிந்து போக வைத்து விடாதீர்கள் சசி’’ என்று சுனந்தா கூறியிருந்தார்.
                                                                                                                         மேலும், . . . . .

தோல்வியில் இருந்து காப்பாற்றவே ராகுலை பிரதமர் வேட்பாளராக சோனியா அறிவிக்கவில்லை மோடி கேலி
புதுடெல்லி, ஜனவரி, 19–01-2014
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்றும் இன்றும் நடந்தது. நிறைவு நாளான இன்று உரையாற்றிய பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நடந்திருக்கலாம். ஆனால், 2014- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத பல பெரும் ஊழல்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற ஊழல்கள் இந்திய வரலாற்றில் இடம்பெற்றதே இல்லை.
                                                                                                  மேலும், . . . . 

காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் சேம.நாராயணன் புதிய கட்சி தொடங்கினார்

சென்னை, ஜனவரி, 19–01-2014
தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் மக்கள் தேசிய கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மற்றும் கட்சி கொடி அறிமுக விழா இன்று நுங்கம் பாக்கத்தில் நடந்தது. கட்சி தலைவர் சேம.நாராயணன் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
சேம நாராயணன் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்தவர். குலாலர் சங்க மாநில தலைவராகவும் இருந்து வருகிறார். கட்சி தொடங்கியது பற்றி அவர் கூறியதாவது:–

                                                                                            மேலும், . . . .

Saturday 18 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-01-2014) மாலை,IST- 03.00 மணி,நிலவரப்படி,


கள்ளக்காதல் விவகாரமா? சசிதரூர் மனைவி சாவில் மர்மம் - கொலையா? டெல்லி போலீஸ் விசாரணை
புதுடெல்லி, ஜனவரி, 18-01-2014,
மத்திய மந்திரிசபையில் மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் சசிதரூர். 57 வயதாகும் சசிதரூர் 2010–ம் ஆண்டு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்ற 52 வயது பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் இது 3–வது திருமணம். இருவரும் ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்கள்.
இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளம்பியது. சமீபத்தில் சசிதரூக்கு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர்தரார் என்பவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டினார். கடந்த சில நாட்களாக ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரத்தை மறுத்த சசிதரூர் ‘‘நானும் சுனந்தாவும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் டுவிட்டரில் யாரோ போலியாக உருவாக்கிய பேச்சுக்களால் மனவேதனை அடைந்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.
                                                                                            மேலும், . . . . .


சென்னையில் நடைபெற இருந்த தமிழக- இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 27-தேதிக்கு ஒத்திவைப்பு - ஜெயலலிதா உத்தரவு


சென்னை, ஜனவரி, 18-01-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் கச்சத்தீவையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த் தது தான். எனவே தான் கச்சத்தீவினை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகிறார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது அவர்களை மீட்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
                                                                                                மேலும், . . . . . .

மணி சங்கர் அலுவலகம் மீது தாக்குதல்
மயிலாடுதுறை, ஜனவரி, 18-01-2014,
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குறித்து கடுமையாக விமர்சித்த காங்., எம்.பி மணி சங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
காங்., ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருபவர் மணிசங்கர் அய்யர்.

                                                                                                    மேலும், . . . . . .


Thursday 16 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து
புதுடெல்லி, ஜனவரி, 17-01-2014,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.மீண்டும் பிரதமராக விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வந்தனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மத்திய மந்திரிகள் மிலிந்த் தியோரா, மனிஷ் திவாரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வற்புறுத்தினார்கள். இவர்கள் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள்.
                                                                                                 மேலும், . . . .

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரை எடுக்க வேண்டும் தொண்டர்களுக்கு, ஜெயலலிதா கடிதம்
சென்னை, ஜனவரி, 17-01-2014,
40 தொகுதிகளிலும் வெற்றி பெற எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சூளுரை எடுக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. நிறுவனத்தலைவர், எம்.ஜி.ஆர். 97–வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, என் உயிரினும் மேலான உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மடல் வாயிலாக சந்திப்பதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
‘பொன்மனச் செம்மல்‘ என்றும், ‘புரட்சித் தலைவர்‘ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி‘ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.‘ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.‘ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒரு சேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான்.

                                                                                                                மேலும், . . . .

மீனவர் பிரச்சினை: பேச்சுவார்த்தைகளின் போது மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜனவரி, 17-01-2014,
மீனவர் பிரச்சினை குறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசும், மாநில அரசும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மீனவர்கள் பிரச்சினை
மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து பேசும் கூட்டம் 20–ந்தேதி டெல்லியில் நடக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது; சென்னையில் நடைபெற போவதாக மற்றொரு செய்தி வருகிறது! எது உண்மை என்று யாரும் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.அனைத்துத்தரப்பிலிருந்தும் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இந்திய–இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அண்மையில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தலைமையிலான அதிகாரிகள் குழு 14–1–2014 அன்று டெல்லி வந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

                                                                                                                     மேலும், . . . 

Wednesday 15 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
புதுடெல்லி, ஜனவரி, 16-01-2014
பா.ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ள பா.ஜனதா கட்சி, ‘சிறந்த நிர்வாகம்’ மற்றும் ‘272+ இடங்கள்’ என்ற நோக்கங்களின் அடிப்படையில், வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகி வரும் அக்கட்சி, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
                                                                                               மேலும், . . . . . . 

பாராளுமன்ற தேர்தல் வல்லூறுகளை சிட்டுக்குருவி வீழ்த்தும் காலம் வரும் - வைகோ பேச்சு

சென்னை, ஜனவரி, 16-01-2014
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் 2 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடபட்டது. அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வைகோ பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மாடிகளில் புறாக்கள், குருவிகள், கரையும். காக்கைகள், வட்ட மிடும் பருந்துகளையும் அவைகள் எழுப்பும் ஓசைகளையும் கேட்கமுடியும். ஆனால் சுற்றுப்புற சூழல் மாசால் அவற்றினையும், அவற்றின் ஓசைகளையும் கேட்கமுடிய வில்லை. பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. ஆனால் அந்த ஓசைகளை இங்கு குழுமி இருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஓசைகளில் கேட்கிறேன். மனதுக்கு இதமாக உள்ளது.
எனது தந்தையார் (வையாபுரி) திருக்குறளின் 1330 பாடல்களை அடி பிறழாமல் பாடும் திறமை பெற்றார். 10 உரை ஆசிரியர்களின் பொழிப்புரைகளை படித்து தேர்ந்தவர். எனது தந்தையும், குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். எனது தாயார் சமையல் செய்வதில் வல்லவர். 9 பிரதமரை சந்தித்த தலைவர் என்று என்னை பாராட்டுகிறார்கள், 3 வயது சிறுமி வைகோ தாத்தா என்று என் கையை பற்றி பேசும் பொழுது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
                                                                                                                                 மேலும், . . . . .

பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. சேருமா?
சென்னை, ஜனவரி, 16-01-2014
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாட்டில் 4 அணிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தனியாக போட்டியிடுகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன.

                                                                                                                         மேலும், . . . . 

Tuesday 14 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா?
புதுடில்லி, ஜனவரி, 15-01-2014,
'பாகிஸ்தானில் மறைந்து வாழும், மும்பை தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டில்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, பலமுறை தடைவிதித்தார்' என, மத்திய உள்துறை, முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, "பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
                                                                                                                  மேலும், . . . .

தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம் அரசியல் கட்சிகள் புதுயுக்தி
சென்னை, 15-01-2014,
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வாக்காளர்கள், 5.37 கோடி. இவர்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், 23.49 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில், 30லிருந்து 39 வயதிற்கு உட்பட்டோர், 21.71 சதவீதம்.வாக்காளர் பட்டியலில், புதிதாக இடம் பெற்றுள்ள வர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள். அதனால், எஸ்.எம்.எஸ்., - எம்.எம்.எஸ்., இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான, பிரசாரங்களை மேற்கொண்டால், இவர்களை கவர முடியும் என, அரசியல் கட்சிகள் நம்புகின்றன.

                                                                                                               மேலும், . . . . .

டில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடில்லி, 15-01-2014,
டில்லி மாநில சட்ட அமைச்சரும், "ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி மீது, முக்கிய வழக்கு ஒன்றில், சாட்சியங்களை சீர்குலைத்ததாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபலமான வழக்கறிஞரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி, சட்ட அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், பா.ஜ., மற்றும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், சோம்நாத் பார்தி மீது, பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

                                                                                                              மேலும், . . . . 

Monday 13 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,



அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட முறைகேடை கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தென்காசி, ஜனவரி, 14-01-2014,
நெல்லை மாவட்டம் தென்காசியில் அரசு தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சி மையத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு முன்முயற்சி திட்டத்தின் கீழ் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்து, அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது.
                                                                                          மேலும், . . . . 

தமிழ்நாட்டில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க டெல்லி மேல்–சபைக்கு பிப்ரவரி 7–ந் தேதி தேர்தல் 21–ந்தேதி மனுதாக்கல் தொடங்குகிறது



சென்னை, ஜனவரி, 14-01-2014,
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுக்க டெல்லி மேல்–சபைக்கு பிப்ரவரி 7–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 21–ந்தேதி தொடங்குகிறது.
லோக் சபா–ராஜ்யசபா
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, டெல்லி பாராளுமன்றத்தில் லோக்சபா என்ற மக்களவையும், ராஜ்யசபா என்ற மாநிலங்கள் அவையும் செயல்படுகிறது. லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆகும்.

                                                                                                                 மேலும், . . . .

ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை எதிரொலி இலங்கை சிறையில் இருந்த 163 தமிழக மீனவர்கள் விடுதலை படகுகளுடன் ஊர் திரும்புகிறார்கள்


சென்னை, ஜனவரி, 14-01-2014,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மீனவர்கள் சிறைபிடிப்பு
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போது பாரதப்பிரதமருக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்து 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட போதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும், 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர்.
இருநாட்டு மீனவர்கள் கூட்டம்
தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளை சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்றும்,
                                                                                                          மேலும், . . . . 

Sunday 12 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

தற்போது விற்பனையில். . . . .



‘சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்துவிட்டது’ நரேந்திர மோடி தாக்கு
பனாஜி, ஜனவரி, 13-01-2014,
சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார்.
உள்துறை மந்திரியின் கடிதம்
கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்?
                                                                                                             மேலும், . . . 

‘என்னையும், தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது’ பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு
சென்னை, ஜனவரி, 13-01-2014,
என்னையும், தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என்று தே.மு.தி.க. அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசினார்.
பொங்கல் விழா
தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, மஞ்சள் குலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
                                                                                                                மேலும், . . . 

தமிழகத்தில் இளம்வயது பெண்கள் 900 பேர் காணவில்லை - பெற்றோர் கலக்கம்
சென்னை, ஜனவரி, 13-01-2014,
தமிழக போலீசில், 2013ம் ஆண்டு, 2,999 பேரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 900 பேர் இளம்பெண்கள். குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், சொத்து பிரச்னையால் துரத்தப்பட்டோர், குடும்ப தகராறு காரணமாக தலைமறைவானவர், பிடிக்காத திருமணத்தால் வீட்டை விட்டு ஓடிய பெண், ஏழ்மையால் குடும்பத்தில் இருந்து துரத்தப்பட்டோர் என, பல்வேறு காரணங்களால் மாயமானதாக, புகார்கள் அதிகரித்து வருகின்றன.
30 சதவீதம் அதிகரிப்பு
கடந்த, 2012ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த புகார்கள், 2013ல், 30 சதவீதம் அதிகரித்து உள்ளன.போலீஸ் இணையதள தகவல்படி, தமிழகம் முழுவதும், 2013 ஜனவரி, 1ம் தேதி துவங்கி, டிச., 29 வரை, 2,999 பேர் காணவில்லை என, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
                                                                                              மேலும், . . . . 


இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விஜயகாந்தை சந்தித்து திருமாவளவன் பேச்சு
சென்னை, ஜனவரி, 12-01-2014,
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர வேண்டும் என்று, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
விஜயகாந்துடன் சந்திப்பு
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில், தே.மு.தி.க.வை எப்படியும் தங்களது கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்று, பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

                                                                                                                           மேலும், . . .  

கருணாநிதியுடன் மு.க.அழகிரி ‘திடீர்’ சந்திப்பு ‘‘சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல’’
சென்னை, ஜனவரி, 12-01-2014,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்து பேசினார். பின்னர், வெளியே வந்த அவரிடம் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல என்று பதில் அளித்தார்.
மு.க.அழகிரி
தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் அவரது ஆதரவாளர்கள், ஒரு சில பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறி, மதுரை மாநகர் தி.மு.க. அமைப்புகள் முழுவதும் அதிரடியாக கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், மு.க.அழகிரி அளித்த பேட்டி ஒன்றில், தி.மு.க.வுக்கு எதிரான சில கருத்துகளை கூறியிருந்தார். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்ததுடன், கட்சியில் இருந்து நீக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
                                                                                               மேலும், . . . .

சென்னையில் 20–ந் தேதி இரு தரப்பு பேச்சுவார்த்தை இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை ஜெயலலிதா அறிக்கை
சென்னை, ஜனவரி, 12-01-2014,
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
மீனவர்களுக்கு உதவித்தொகை
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு ஏழை, எளிய மக்களின் பாதுகாவலனாகவும், மீனவர்களின் நண்பனாகவும் திகழ்ந்து வருகிறது.
மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் மாத உதவித்தொகை 2,000 ரூபாய் என உயர்த்தி வழங்கியதோடு, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் நான் உருவாக்கினேன். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அயல் நாட்டவரால் சிறைபிடிக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகையை 50 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக நான் உயர்த்தி வழங்கினேன். இந்த அடிப்படையில்,
                                                                                                        மேலும், . . . .



Friday 10 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

தற்போது விற்பனையில். . . . .




பாராளுமன்ற வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்தி தீவிரம் மாநிலம் வாரியாக குழு அமைப்பு தமிழக குழுவின் தலைவர் குலாம் நபி ஆசாத்
புதுடெல்லி, ஜனவரி, 11-01-2014,
பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் தேர்வுக்காக மாநிலம் வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு–புதுச்சேரி மாநில தேர்வுக்குழுவின் தலைவராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வேட்பாளர் தேர்வில் புதிய முறை
பாராளுமன்ற தேர்தல், ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்களை புதிய முறையில், முன்கூட்டியே தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக மாநில வாரியாக தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் தலைவர்களுடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். அதற்கு முன்பாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, மக்களின் குரலை பிரதிபலிக்கும் விதத்தில் வேட்பாளர் தேர்வில் புதிய முறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது–
                                                                                மேலும், . . . . . 

வேட்பாளர்கள் தேர்வு முதல்வர் சென்னை திரும்பியதும் வெளியீட முடிவு கம்யூனிஸ்ட், சமக கூட்டணி உறுதி
சென்னை, ஜனவரி, 11-01-2014,
லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், கிட்டத்தட்ட தயாராகி விட்டது. கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர், சென்னை திரும்பியதும், பட்டியல் வெளியிடப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடம்இருந்து, அந்தக் கட்சி தலைமை, விருப்ப மனுக்களை வாங்கியது.
தலா மூன்று பேர்
கட்சி நிர்வாகிகளும், போட்டி போட்டு மனு அளித்தனர். இது தவிர, மாவட்டச் செயலர்களிடமிருந்து, தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள, தலா மூன்று பேரின் பெயர்கள், தொகுதி வாரியாக கேட்டு பெறப்பட்டன.பின், விருப்ப மனு கொடுத்தவர்கள், மாவட்டச் செயலர்கள் பரிந்துரைத்த நபர்களின் பின்னணி பற்றி அலசப்பட்டது. உளவுத்துறை மூலமும், அவர்களைப் பற்றிய தகவல் திரட்டப்பட்டது. உளவுத் துறையினர் கொடுத்த தகவல் பற்றி, இரண்டு நாட்களுக்கு முன், அமைச்சர்கள், பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் அடங்கிய நால்வர் அணியினர், மாவட்டச் செயலர்களை அழைத்து பேசினர். அதன் பின், முதல்வர் உத்தரவுப்படி, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இது பற்றி, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் அறையில், நால்வர் அணியினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களை அழைத்து ஆலோசித்தனர். அதனால், அமைச்சர் பன்னீர்செல்வம் அறை, பரபரப்பாக காணப்பட்டது. ஒவ்வொரு தொகுதி வாரியாக, அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் அழைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது.அவர்கள் தெரிவித்த விவரம், முதல்வரிடம் தெரிவிக்கப்பட உள்ளது. முதல்வர் கொடநாட்டிலிருந்து திரும்பியதும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                    மேலும், . . . . . 

மத்திய மந்திரிசபையில் மாற்றம் வருமா? பிரதமர் மன்மோகன்சிங்குடன் சோனியா, ராகுல் ஆலோசனை
புதுடெல்லி, ஜனவரி, 11-01-2014,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினார்கள். மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்வது குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.
நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
பிரதமர் வேட்பாளர் ராகுல்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, வருகிற 17–ந்தேதி நடைபெற இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் துணைத்தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த நிலையில், ராகுலுக்கு பொது மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது.

                                                                                                மேலும், . . . .