Thursday 16 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து
புதுடெல்லி, ஜனவரி, 17-01-2014,
பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.மீண்டும் பிரதமராக விரும்பவில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கட்சி எந்த பொறுப்பை வழங்கினாலும், ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வந்தனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மத்திய மந்திரிகள் மிலிந்த் தியோரா, மனிஷ் திவாரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வற்புறுத்தினார்கள். இவர்கள் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள்.
                                                                                                 மேலும், . . . .

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரை எடுக்க வேண்டும் தொண்டர்களுக்கு, ஜெயலலிதா கடிதம்
சென்னை, ஜனவரி, 17-01-2014,
40 தொகுதிகளிலும் வெற்றி பெற எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சூளுரை எடுக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க. நிறுவனத்தலைவர், எம்.ஜி.ஆர். 97–வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, என் உயிரினும் மேலான உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மடல் வாயிலாக சந்திப்பதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
‘பொன்மனச் செம்மல்‘ என்றும், ‘புரட்சித் தலைவர்‘ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி‘ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.‘ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.‘ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒரு சேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான்.

                                                                                                                மேலும், . . . .

மீனவர் பிரச்சினை: பேச்சுவார்த்தைகளின் போது மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும் கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜனவரி, 17-01-2014,
மீனவர் பிரச்சினை குறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசும், மாநில அரசும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மீனவர்கள் பிரச்சினை
மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து பேசும் கூட்டம் 20–ந்தேதி டெல்லியில் நடக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது; சென்னையில் நடைபெற போவதாக மற்றொரு செய்தி வருகிறது! எது உண்மை என்று யாரும் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.அனைத்துத்தரப்பிலிருந்தும் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இந்திய–இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அண்மையில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தலைமையிலான அதிகாரிகள் குழு 14–1–2014 அன்று டெல்லி வந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

                                                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment