Wednesday 15 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-01-2014) காலை,IST- 11.00 மணி,நிலவரப்படி,

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
புதுடெல்லி, ஜனவரி, 16-01-2014
பா.ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ள பா.ஜனதா கட்சி, ‘சிறந்த நிர்வாகம்’ மற்றும் ‘272+ இடங்கள்’ என்ற நோக்கங்களின் அடிப்படையில், வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகி வரும் அக்கட்சி, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
                                                                                               மேலும், . . . . . . 

பாராளுமன்ற தேர்தல் வல்லூறுகளை சிட்டுக்குருவி வீழ்த்தும் காலம் வரும் - வைகோ பேச்சு

சென்னை, ஜனவரி, 16-01-2014
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் 2 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடபட்டது. அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வைகோ பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மாடிகளில் புறாக்கள், குருவிகள், கரையும். காக்கைகள், வட்ட மிடும் பருந்துகளையும் அவைகள் எழுப்பும் ஓசைகளையும் கேட்கமுடியும். ஆனால் சுற்றுப்புற சூழல் மாசால் அவற்றினையும், அவற்றின் ஓசைகளையும் கேட்கமுடிய வில்லை. பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. ஆனால் அந்த ஓசைகளை இங்கு குழுமி இருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஓசைகளில் கேட்கிறேன். மனதுக்கு இதமாக உள்ளது.
எனது தந்தையார் (வையாபுரி) திருக்குறளின் 1330 பாடல்களை அடி பிறழாமல் பாடும் திறமை பெற்றார். 10 உரை ஆசிரியர்களின் பொழிப்புரைகளை படித்து தேர்ந்தவர். எனது தந்தையும், குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். எனது தாயார் சமையல் செய்வதில் வல்லவர். 9 பிரதமரை சந்தித்த தலைவர் என்று என்னை பாராட்டுகிறார்கள், 3 வயது சிறுமி வைகோ தாத்தா என்று என் கையை பற்றி பேசும் பொழுது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
                                                                                                                                 மேலும், . . . . .

பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. சேருமா?
சென்னை, ஜனவரி, 16-01-2014
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
தமிழ்நாட்டில் 4 அணிகள் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தனியாக போட்டியிடுகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன.

                                                                                                                         மேலும், . . . . 

No comments:

Post a Comment