Monday 6 January 2014

இன்றைய அரசியல் செய்திகள் (07-01-2014)

இன்றைய அரசியல் செய்திகள் (07-01-2014) காலை,IST- 10.00 மணி,நிலவரப்படி,

தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

தென்காசி, ஜனவரி, 07-01-2014,
புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடந்தது. கட்சியின் நிறுவனததலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தாமிரபரணி நதி மாசுபடாமல் பாதுகாக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும். தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி அனைத்த மாவட்டங்களிலும் ஜன. 22–ந்தேதி பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:–
திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றிருப்பதற்கு பொதுக்குழுவில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை சொல்வதற்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது.
புதிய தமிழகத்தை பொறுத்தவரை எப்பவுமே தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் நடத்திய வரலாறு இதுவரை கிடையாது.

                                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment