Wednesday 8 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-01-2014) காலை,IST- 10.00 மணி,நிலவரப்படி,


தற்போது விற்பனையில்,. . . . . . . . .

கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டுக்கு வந்த மு.க.அழகிரி தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
சென்னை, ஜனவரி, 09-01-2014,
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்த மு.க.அழகிரி, தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவில் தென்மண்டல தி.மு.க. செயலாளர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் பெயருடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழு மீண்டும் நடக்க இருப்பதாக மு.க.அழகிரி படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
                                                                                                                                 மேலும், . . . 

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டி
ஜம்மு, ஜனவரி, 09-01-2014,
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி உள்ள நிலையில் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
தொண்டர்கள் வலியுறுத்தல்
காஷ்மீரில் 2013ம் ஆண்டின் இறுதி நாளில் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிஷாவர் கலவரம் தொடர்பான 73வது சட்டத்தில் மத்திய அரசு திருத்தத்தை அமல்படுத்தியது குறித்து உமர் அப்துல்லா கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக உமர் அப்துல்லா ஆதராளர்களுக்கும், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
                                                                                                            மேலும், . . . 

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 6,514 அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் 19–ந்தேதி வரை இயக்கப்படுகின்றன

சென்னை, ஜனவரி, 09-01-2014,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சவுகரியமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
                                                                            மேலும், . .. . 

No comments:

Post a Comment