Wednesday 1 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை அதிரடி உயர்வு சிலிண்டருக்கு ரூ.220 உயர்ந்தது; உடனடியாக அமலுக்கு வந்தது
புதுடெல்லி, ஜனவரி, 02-01-2014
தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும்.
அதிரடி விலை உயர்வு
இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இதுவரை ரூ.1021–க்கு விற்கப்பட்டு வந்த கியாஸ் சிலிண்டரின் விலை, ரூ.1241 ஆகவும், மும்பையில் ரூ.1038–ல் இருந்து ரூ.1264.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

                                                                                                     மேலும், . . . 

தூத்துக்குடியில் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலம் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு





02-01-2014,
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் ஆராதனை நடைபெற்றது.
ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் ஆங்கில புத்தாண்டினை கொண்டாடும் பழக்கம் இன்று அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
2013ம் ஆண்டு முடிவடைந்து 2014ஐ வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
புது வருட தொடக்கத்தையொட்டி தூத்துக்குடியில் நேற்று தேவாலயங்களிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த‌து.
தூத்துக்குடியில் உள்ள சின்னகோவில், பனிமயமாதா கோவில், அந்தோணியார் ஆலயம், தூய மத்தேயு ஆலயம், தூய ஜோசப் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
                                                                     மேலும், . . . 

பெரும்பான்மை பெற்று ஆட்சியை தொடர்வாரா கெஜ்ரிவால்? இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு
புதுடில்லி, ஜனவரி, 02-01-2014
டில்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. 28 உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தொடர பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சட்டசபை கூட்டம்
டில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி, டிசம்பர் 28ம் தேதி ஆட்சி அமைத்தது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 01) டில்லி சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. டிசம்பர் 07ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் டிசம்பர் 03ம் தேதி, ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 02ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் எனவும், டிசம்பர் 03ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 06ம் தேதி டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜக், சட்டசபையில் உரையாற்ற உள்ளார். சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான டிசம்பர் 07ம் தேதி ஆளுனரின் உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

                                                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment