Wednesday 29 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,

ராஜீவ் கொலை கைதிகளின் தூக்குதண்டனை ரத்து ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை கால அவகாசம் கேட்ட மத்திய அரசின் கோரிக்கை தள்ளுபடி

புதுடெல்லி, ஜனவரி, 30-01-2014,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000–வது ஆண்டு உறுதி செய்தது.
கருணை மனுக்கள் தள்ளுபடி
பின்னர் தமிழக கவர்னர் சிபாரிசின் பேரில் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை கடந்த 2011–ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்தார். 11 ஆண்டுகள் ஜனாதிபதியிடம் நிலுவையில் இருந்த பிறகு அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
                                                                                               மேலும், . . . . 

அன்புமணியுடன் மூத்த தலைவர்கள் சந்திப்பு பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியானது தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை மும்முரம்
சென்னை, ஜனவரி, 30-01-2014,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாசுடன், பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்து பேசியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெறுவது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க., பா.ம.க., கொங்குநாடு முன்னேற்ற கழகம், கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் பேட்டியளித்த பா.ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தே.மு.தி.க., பா.ம.க. உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
                                                                                                          மேலும், . . . .

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை, ஜனவரி, 30-01-2014,
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் கமிஷன் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
3 ஆண்டுகள் பணி
பாராளுமன்ற தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும், நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முன்வந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த சில முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment