Tuesday 7 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

மு.க.அழகிரிக்கு கருணாநிதி கண்டனம் ‘கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க நேரிடும்’
சென்னை, ஜனவரி, 08-01-2014,
தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளர் மு.க.அழகிரிக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மக்களை திசை திருப்பும் காரியம்
தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் வரவிருக்கின்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
                                                                            மேலும், . . . . 

கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, ஜனவரி, 08-01-2014,
கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்த கோர்ட்டில் தீர்ப்பு வெளியானால், வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதிகள் சி.கே.பிரசாத், ஜே.எஸ்.கெஹர் ஆகியோரை கொண்ட அமர்வில் நேற்று நடைபெற்றது.
நீதிபதிகள் கவலை
இந்த விசாரணையின்போது போலீசார் மேற்கொள்ளும் மோசமான விசாரணையினால் நாடு முழுவதும் பல கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளின் விடுதலை அதிகரித்து வருவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளின் விடுதலைக்கு காரணமான தவறு செய்யும் விசாரணை அதிகாரிகளுக்கு (போலீஸ் அதிகாரிகள்) தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உத்தரவில் நீதிபதிகள் மேலும் கூறி இருப்பதாவது–
அதிகாரிகளுக்கு தண்டனை
‘‘குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், அப்பாவிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்கு 6 மாதங்களில் புதிய அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலையாகும்போது நீதி வழங்கும் முறை தோல்வி அடைவதை புரிந்து கொள்ள வேண்டும்.
                                                                                                                        மேலும், . . . 

எண்ணெய் நிறுவனங்கள் கெடுபிடி செய்வதாக புகார் 19–ந் தேதி முதல் சமையல் கியாஸ் சப்ளை நிறுத்தம் வினியோகஸ்தர்கள் போராட்ட அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 08-01-2014,
இந்தியா முழுவதும் 15 கோடி குடும்பங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன.
வினியோகஸ்தர்கள்
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை சமையல் கியாஸ் சிலிண்டர்களை தயாரித்து பயன்பாட்டுக்காக வழங்குகின்றன.எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்களை பெற்று வீடுகளுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் ‘சப்ளை’ செய்வதற்காக சுமார் 12 ஆயிரத்து 600 வினியோகஸ்தர்கள் (டீலர்கள்) இருக்கிறார்கள்.
வர்த்தக சிலிண்டர்கள்
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும்.ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்துவதற்காக 19 கிலோ எடையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment