Saturday 4 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

செய்தி இணையதளங்களில் வெளியான தேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சி உண்மையானவையா? அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன், ஜனவரி, 2014, 05-
செய்தி இணையதளங்களில் தேவயானி ஆடை அவிழ்ப்பு சோதனை வீடியோ காட்சிகள் என வெளியானவை உண்மையானவைதானா என்பது குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ஆடை அவிழ்ப்பு சோதனை
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, கடந்த மாதம் 12–ந்தேதி பணிப்பெண் சங்கீதாவின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக இந்தியா–அமெரிக்கா இடையே தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவயானியின் ஆடை அவிழ்ப்பு சோதனை காட்சிகள் என்று செய்தி இணைய தளங்களில் சில காட்சிகள் வெளியாகி உள்ளன.

                                                                                                           மேலும், . . . . 

கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் செயல்பட்டதால் மதுரை மாநகர் தி.மு.க. அமைப்புகள் கூண்டோடு கலைப்பு தலைமைக்கழகம் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 2014, 05-
கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் செயல்பட்டதால், மதுரை மாநகர் தி.மு.க. அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்படுவதாக தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
மு.க.அழகிரி ஆதரவாளர்கள்
மதுரையில் தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, அவரது ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மதுரை மாவட்ட இணைச்செயலாளர் அன்பரசு இளங்கோவன், கீரிப்பட்டி செந்தில் ஆகியோர் பெயரில் மதுரை நகரில் சில இடங்களில் பரபரப்பான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டது.
                                                                                  மேலும், . . . 

தமிழக மக்களுக்கான பணிகளை மேலும் நிறைவு செய்ய மக்கள் உறுதுணையோடு இந்திய அளவில் மாற்றம் ஏற்படும் ஜெயலலிதா உறுதி



நீலகிரி, ஜனவரி, 2014, 05-
தமிழக மக்களுக்கான பணிகளை மேலும் நிறைவு செய்ய மக்கள் உறுதுணையோடு இந்திய அளவில் மாற்றம் ஏற்படும் என்று குன்னூரில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
குன்னூரில் பொங்கல் பரிசு திட்டம், நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்கள் என் பக்கம்
தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவிகளை நான் செய்து வருவதால் தான் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய இடத்திலே நீங்கள் என்னை வைத்து இருக்கிறீர்கள்.
                                                                   மேலும், . . . .



No comments:

Post a Comment