Sunday 30 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல்துறை சிறந்து விளங்கவேண்டும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

கவுகாத்தி, டிசம்பர், 01-12-2014,
புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல் துறை மிகவும் வலிமையாக செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அசாமின் கவுகாத்தி நகரில் 49-வது போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தகவல்களை திரட்டவேண்டும்
நாட்டின் பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. நம்மிடம் எவ்வளவு ஆயுதங்கள் இருக்கிறது, அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சார்ந்ததாக இருக்கக் கூடாது. புலனாய்வு தகவல்களை திரட்டித் தருவதில்தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது.
ஆயுதங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோர், அதன் பயன்பாடு போன்றவற்றை விட புலனாய்வு தகவல்களை சேகரிப்பதுதான் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும்.
                                                                                                மேலும், . . .  . .

பா.ஜனதா தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றோரின் கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம் கூட மோடியிடம் இல்லை வைகோ பரபரப்பு பேட்டி

நாகர்கோவில், டிசம்பர், 01-12-2014,
பா.ஜனதா தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றவர்களின் கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம் கூட மோடியிடம் இல்லை என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று குமரி மாவட்டம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நியாயப்படுத்துகிறாரா?
கடந்த 27-ந் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான விமர்சனம். அந்த விமர்சனத்தை நான் தொடர்ந்து செய்வேன். காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னொரு நாட்டில் நடைபெறும் தேர்தலில் இன்னார் வெற்றி பெற வேண்டும் என்று நமது நாட்டின் எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இப்படி வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி அவர். சுப்பிரமணியசுவாமி,
                                                                                                              மேலும், . . . .  . 

முதலாளித்துவம் பற்றி ஸ்டாலின் பேசலாமா? குடும்பத்தினர் தொழில்களை பட்டியலிட்டு சாமி பதிலடி

புதுடில்லி, டிசம்பர், 01-12-2014,
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது, என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:
                                                                                                    மேலும், . .  . . 

புதுக்கோட்டை அருகே தனியார் வங்கி லாக்கரை உடைத்து 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை போலீசாரை கண்டதும் நகை மூட்டையை போட்டு விட்டு கொள்ளையன் ஓட்டம்


புதுக்கோட்டை, டிசம்பர், 01-12-2014,
தனியார் வங்கி லாக்கரை உடைத்து 35 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து மூட்டையில் அள்ளிச் சென்ற கொள்ளையன் போலீசாரை பார்த்ததும் நகை மூட்டையை போட்டு விட்டு தப்பியோடினான்.
சாக்கு மூட்டை
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கீரனூரை அடுத்துள்ள குளத்தூரில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் வங்கியை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். தினமும் இரவு நேரத்தில் இந்த வங்கியை போலீசார் கண்காணிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் போலீசார் வங்கி பகுதியில் ரோந்து சென்றனர்.
                                                                                                மேலும், . .  . . 

Saturday 29 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட்அடுத்த மாதம் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவிப்பு


சென்னை, நவம்பர், 30-11-2014,
‘‘நாட்டிலேயே முதன்முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிரசாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நேற்று ஈடுபட்டு இருந்தனர். இந்த பணியின் மேம்பாடு குறித்து நிருபர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர் மையத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள ராக்கெட் ஏவுதள பகுதிக்கு நேற்று நிருபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                      மேலும்,. . . . . 

முதல்கட்டமாக 12 இடங்களில் அமல்படுத்த முடிவு பயணிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு மத்திய அரசு திட்டம் பற்றி பிரதமர் மோடி தகவல்

பயணிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 12 இடங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
கவுகாத்தி, நவம்பர், 30-11-2014,
பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங் களை அறிவித்து வருகிறார்.
பிரதமர் திட்டம்
அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் ஏதுவாக ரெயில்வேயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அவர் பரிசீலித்து வருகிறார்.
இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளான நிலையில், இந்திய ரெயில்வே வரைபடத்தில் இடம் பெறாமல் இருந்த மேகாலயா மாநிலத்தில், மெந்திபத்தார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தது.
                                                                                                     மேலும், . . . . 

இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, நவம்பர், 30-11-2014,
திருவள்ளுவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
தருண் விஜய்
உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் டெல்லி மேல்-சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவர் தினத்தை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் வள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புக்களை வட இந்தியாவின் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் பெருத்த வரவேற்பை பெற்றது. தருண் விஜய் உரையைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வரும் ஆண்டில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
                                                                                                                            மேலும், . .  . .

காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திப்பேன் சத்தியமூர்த்தி பவனில் நடிகை குஷ்பு பேட்டி

சென்னை, நவம்பர், 30-11-2014,
காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திப்பேன் என்று நடிகை குஷ்பு கூறினார்.
குஷ்புக்கு வரவேற்பு
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை 11.50 மணிக்கு வந்தார்.
அவரை கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் தணிகாச்சலம், தேசிய ஊடக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமணி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மாநில ஒழுங்கமைப்பு செயலாளர் சுமதி அன்பரசு, துறைமுகம் ரவிராஜ் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர்.
நிர்வாகிகள்-தொண்டர்களின் வரவேற்பை நடிகை குஷ்பு ஏற்றுக்கொண்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                       மேலும், . . . . 

Friday 28 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

திருச்சியில் நடைபெற்ற விழாவில் மீண்டும் உதயமானது ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ புதிய கட்சியின் பெயரை ஜி.கே.வாசன் அறிவித்தார்

திருச்சியில் நடைபெற்ற விழாவில், ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ மீண்டும் உதயமானது. புதிய கட்சியின் பெயரை ஜி.கே.வாசன் அறிவித்தார்.
திருச்சி, நவமபர், 29-11-2014,
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
கட்சி கொடி அறிமுகம்
புதிய கட்சியின் தொடக்க விழா திருச்சியில் நடைபெறும் என்றும், அப்போது கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஜி.கே.வாசன் சென்னையில் கடந்த புதன்கிழமை புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். காவி, வெள்ளை, பச்சை நிறத்துடன் கூடிய அந்த கொடியில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று உள்ளன.
திருச்சியில் தொடக்க விழா
ஏற்கனவே அறிவித்தபடி, புதிய கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
                                                                                     மேலும், . . . .  

பெண் என்ஜினீயரை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, நவமபர், 29-11-2014,
பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் என்ஜினீயர்
சேலம் மாவட்டம் ஆத்தூர், ஜோதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் உமா மகேஸ்வரி (வயது 23). இவர் சென்னையை அடுத்த சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இதற்காக அவர் மேடவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தோழிகளுடன் தங்கியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 10.15 மணிக்குமேல் நிறுவனத்தில் இருந்து வேலை முடிந்து வெளியே வந்தார். ஆனால் உமா மகேஸ்வரி வீட்டுக்கு செல்லவில்லை. நெடுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் சகதோழிகள் உமா மகேஸ்வரிக்கு போன் செய்தனர். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவரது தோழிகள் உமா மகேஸ்வரியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்டனர்
அதிர்ச்சி அடைந்த அவர் மறுநாள் இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
                                                                                              மேலும், . . . . 

அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்: வகுப்பு அறையில் மாணவர் குத்திக்கொலை ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து போலீசில் புகார் செய்ததால் முன்னாள் மாணவர் ஆத்திரம்

அருப்புக்கோட்டை, நவமபர், 29-11-2014,
வகுப்பு அறையில் மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டான். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததுடன் போலீசில் புகார் செய்ததால் ஆத்திரமடைந்து அவனை முன்னாள் மாணவன் கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
வகுப்பறையில் புகுந்தான்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மாசார்பட்டி போலீஸ் சரகம் அயன்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாஸ்கரன் (வயது 13). அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனது தந்தை கோபால் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார். இதனால் தாயாருடன் தங்கி இருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தான். நேற்று காலை 8½ மணிக்கு பாஸ்கரன் பள்ளிக்கு வந்து தனது வகுப்பு அறையில் அமர்ந்து இருந்தான்.
அப்போது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் ஒருவன் பள்ளிக்கு வந்து பாஸ்கரன் இருந்த வகுப்பு அறைக்குள் திடீரென புகுந்தான்.
                                                                                                  மேலும், . .  . .

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் நாற்காலிகள் உடைப்பு; சாலை மறியலால் பரபரப்பு

கிருஷ்ணகிரி, நவமபர், 29-11-2014,
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மன்ற கூடத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
நகராட்சி கூட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சியின் கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் தங்கமுத்து(அ.தி.மு.க.) தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, சமீபத்தில் இறந்த 16-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ராஜாவெங்கட்ராமன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி சார்பிலும் உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானம் குறித்துப் பேசினார்கள்.
                                                                                     மேலும், . .  . .

Sunday 23 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 24-11-2014,
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்தின் 3-வது வாரம் முடிய நடைபெறும்.
இன்று கூடுகிறது
அதன்படி இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. மொத்தம் 22 அமர்வுகளை கொண்டதாக இந்த கூட்டத்தொடர் இருக்கும்.
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி கடந்த 6 மாதத்தில் சந்திக்கும் 2-வது முக்கிய கூட்டத்தொடர் இது ஆகும். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
                                                                                                              மேலும், . . .  .

சிசு மரண விகிதம் தமிழ்நாட்டில் குறைந்து உள்ளது மருத்துவ சேவையை குறை கூறி யாரும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

சென்னை, நவம்பர், 24-11-2014,
தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் குறைந்துள்ளது. மருத்துவ சேவையை குறை கூறி யாரும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிசு மரணம் விகிதம் குறைவு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தினசரி 1,800 குழந்தைகளும், ஆண்டுக்கு 6.8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக சதவீதமான பிரசவங்கள் தமிழகத்தில் குறிப்பாக 99.8 சதவீதம் அரசு மருத்துவநிலையங்களில் நடைபெறுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் சிசு மரண விகிதம் 40 ஆக இருக்க,
                                                                                                                            மேலும், . . . . 

வேப்பேரி பெண் கொலையில் திடீர் திருப்பம் மனைவியை கொன்று நாடகமாடிய தொழில் அதிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, நவம்பர், 24-11-2014,
சென்னை வேப்பேரி கொலை-கொள்ளை வழக்கில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை-கொள்ளை
சென்னை வேப்பேரி, காளயத்தியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் ஜெயின்(வயது 50). இவர் சவுகார் பேட்டையில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது மனைவி பெயர் மஞ்சு(48). இவர்களுக்கு ஆஷிஷ்புஞ்ச்(23) என்ற மகனும், பூஜா(21) என்ற மகளும் உள்ளனர். வசதி படைத்த, இந்த இனிய குடும்பத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, கடும் புயல் வீசியது போன்று பெரும் சம்பவம் நிகழ்ந்து விட்டது.
அன்றைய தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த மஞ்சு மிகவும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் குளியலறையில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியானது.
கொலை நடந்த வீட்டில் அன்றைய தினம் பூச்சி மருந்து அடித்த ஊழியர் ஒருவர்தான், மஞ்சுவை கொலை செய்து விட்டு, நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக, மஞ்சுவின் கணவர் ஹேம்ராஜ் ஜெயின் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதை அடிப்படையாக வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணை தொடங்கினார்கள்.
                                                                                                         மேலும், . .  . .

அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப்பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்துகின்றன கருணாநிதி அறிக்கை

சென்னை, நவம்பர், 24-11-2014,
அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று நான் மட்டுமல்ல அனைத்து எதிர்கட்சிகளும் திரும்ப திரும்ப கேட்டுள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டசபைக்குஏன் வருவதில்லை?
கேள்வி:-நீங்கள் சட்டசபைக்கு வருவதில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத்தெரியும் என்றும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் கூறியிருக்கிறாரே?
                                                                                                                     மேலும், . . . .

Saturday 22 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

மே மாதம் நடந்த பயங்கர தாக்குதலில் துப்பு துலங்கியது சென்னை சென்டிரலில் குண்டு வைத்த 3 பேர் கைது கர்நாடகத்தில் பிடிபட்ட தீவிரவாதிகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள்

சென்னை சென்டிரலில் கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பில் துப்பு துலங்கியது. இது தொடர்பாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உப்பள்ளி(ஊப்ளி), நவம்பர், 23-11-2014,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு வாரத்தில் 3 நாட்கள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக் கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகிறது.
                                                                                                   மேலும், . . . . . 

அனைவரையும் கைது செய்யக்கோரி நாளை போராட்டம்: ‘மேற்கு வங்காள அரசை கலைத்துப் பாருங்கள்’ மத்திய அரசுக்கு மம்தாபானர்ஜி சவால்

கொல்கத்தா, நவம்பர், 23-11-2014,
முடிந்தால் மேற்கு வங்காள மாநில அரசை கலைத்துப் பாருங்கள் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். தங்கள் அனைவரையும் கைது செய்யக் கோரி நாளை போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கோபம்
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு சாரதா சீட்டு நிறுவனத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டு சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதில் ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஸ்ரீன்ஜாய் போஸ் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
இது மம்தா பானர்ஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மத்திய அரசு மீதும் பிரதமர் நரேந்திரமோடி மீதும் தனது கோபத்தை கொட்டித் தீர்த்தார்.
                                                                                                                   மேலும், . .  . . 

சட்டமன்ற கூட்டத்தை எப்போது கூட்டுவது என்று எங்களுக்கு தெரியும் முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, நவம்பர், 23-11-2014,
சட்டமன்ற கூட்டம் எப்போது கூட்டப்படவேண்டும்? என்று எங்களுக்கு தெரியும் என தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவை
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் “சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது” என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி “சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
                                                                                                    மேலும், . . . . 

காஷ்மீர் மக்களின் விதியை மாற்றவேண்டும் என்பதே எனது கனவு தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேச்சு

கிஷ்த்வார், நவம்பர், 23-11-2014,
ஜம்மு காஷ்மீர் மக்களின் விதியை மாற்ற வேண்டும் என்பதே எனது கனவாகும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
சட்டசபை தேர்தல்
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கிஷ்த்வார் நகரில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:-
                                                                                                  மேலும், . . . . .

Friday 21 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் இருந்து சென்னை வந்த மீனவர்களை யார் அழைத்துச்செல்வது என்பதில் பிரச்சினை விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு


ஆலந்தூர், நவம்பர், 22-11-2014,
டெல்லியில் இருந்து சென்னை வந்த மீனவர் களை யார் அழைத்துச்செல்வது என்பதில் பிரச்சினை உருவானதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தியதாக கூறி கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுக்கு கொழும்பு ஐகோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.
இவர்களை விடுவிக்கக்கோரி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே, 5 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, பொது மன்னிப்பு வழங்கினார். இதையடுத்து 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை வந்தனர்
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மாலை இலங்கையில் இருந்து டெல்லி வந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் வந்தனர். நள்ளிரவு 12.50 மணிக்கு 5 மீனவர்களையும் மத்திய அரசு அதிகாரி செல்வக்குமார் அழைத்து வந்தார்.
விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்க அமைச்சர்கள் பா.வளர்மதி, சுந்தர்ராஜன், ஜெயபால் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வந்து இருந்தனர்.
                                                                                                                மேலும், . . .  .

மாணவரை அடித்ததால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் 20 பேர் கைது; மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை

சென்னை, நவம்பர், 22-11-2014,
சென்னையில் தனியார் பள்ளியில் மாணவரை அடித்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். வேலையாட்களை அனுப்பிய மாணவரின் தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆசிரியர் அடித்தார்
சென்னை, கோடம்பாக்கம், யுனெடெட் இந்தியா காலனி, 4-வது குறுக்குத்தெருவில் லயோலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பழமையான இந்த ஆண்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன. சுமார் 1,500 மாணவர்கள் படிக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் சாப்பாட்டு வேளை முடிந்தபிறகு, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ், 8-ம் வகுப்பு மாணவர்களை உடற்பயிற்சிக்காக விசிலடித்து அழைத்தார்.
அப்போது அந்த வகுப்பு மாணவர் அர்னால்டும், பதிலுக்கு விசிலடித்து குறும்பில் ஈடுபட்டார். இதைப்பார்த்த ஆசிரியர் பாஸ்கர் ராஜ், மாணவர் அர்னால்டை தலையில் கொட்டியும், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
                                                                                                  மேலும், . . . . 

சென்னை ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளை கொள்ளையடித்த பண கட்டுகள் மீது படுத்து தூங்கியவர் கைது கூட்டாளியும் சிக்கினார்

அம்பத்தூர், நவம்பர், 22-11-2014,
சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பண கட்டுகளின் மீது படுத்து இருந்த போது வாலிபர் சிக்கினார்.
தொடர் கொள்ளை
சென்னை முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் நகர் பகுதியில் இந்த ஆண்டு கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து உள்ளது. இதில் ஒரு சில குற்ற செயல்களில் ஈடுபட்ட திருடர்கள் சிக்கினாலும், தொடர்ந்து சங்கிலி தொடராக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் நூதன முறையில் கலக்கி வரும் கொள்ளையர்கள் போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்து வந்தனர்.
இதுபோன்ற கொள்ளையர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை பொறி வைத்து பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
                                                                                             மேலும், . . .  . . 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகிறார் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற ஜனவரி மாதம் இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தின ராக அவர் கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி, நவம்பர், 22-11-2014,
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர், பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்து, அந்த நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
அமெரிக்கா பயணம்
கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
                                                                                                  மேலும், . . .  . .

Thursday 20 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2014) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

'நான் குற்றமற்றவன்'- சாமியார் ராம்பால் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்கிறார்

ஹிசார், நவம்பர், 20-11-2014,
அரியானா மாநில சாமியார் ராம்பால் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய சாமியார் நான் குற்றமற்றவன் என்றும், எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைதும் தவறானவை என்றும் கூறியுள்ளார். அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள ஆஸ்ரமத்தில் சாமியார் ராம்பாலை பலர் பின்பற்றி வருகின்றனர். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் ஆஜராகாமல் எத்தனித்து வந்தார். இதனையடுத்து கோர்ட் வாரண்ட் படி சாமியார் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய முற்பட்டபோது ஆசிரமத்தில் போலீசாருக்கும், அங்குள்ள சாமியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டு வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவத்தினால் ஆசிரமம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் 6 பேர் உயிழந்தனர்.
போலீசார் வசம் உள்ள சாமியார் இன்று மதியம் 2 மணியளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய எட்டு சாமியார்கள் லிஸ்ட்
இந்தியாவில் சாமியார்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதுவரை 8க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். கற்பழிப்பு, கொலை, நிலம் அபகரிப்பு, மோசடி போன்றவை இந்த சாமியார்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள் ஆகும்.
                                                                                                மேலும், . . . . . .

ஐதராபாத் தொழில் அதிபரை கடத்த முயன்ற போலீஸ்காரர் கண்காணிப்பு கேமிரா காட்டி கொடுத்தது

நகரி, நவம்பர், 20-11-2014,
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா ரெட்டி (50). நாட்டின் 10 மருந்து கம்பெனிகளில் ஒன்றாக திகழும் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை தனது சகோதரர் பிரசாத் ரெட்டியுடன் ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் வாக்கிங் சென்றார்.
பின்னர் வீடு திரும்ப தனது காரில் ஏறிய போது ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த ஒரு வாலிபர் அவரை மிரட்டி காரில் பின் இருக்கையில் ஏறி தான் சொல்லும் இடத்துக்கு காரை ஓட்டும்படி கூறி அவரை கடத்த முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட நித்யானந்தா ரெட்டி தனது கைதுப்பாக்கியால் அந்த மர்ம நபரின் துப்பாக்கி தட்டி விட்டார். அதோடு அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
இந்த சண்டையில் கார் தாறுமாறாக நகர தொடங்கியது. இதனை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
                                                                                                   மேலும், . . . . . . . 

350 டன் பாடப்புத்தகங்கள் மோசடி கல்வி அதிகாரிகள் 3 பேரிடம் போலீஸ் விசாரணை

கோவை, நவம்பர், 20-11-2014,
கோவையில் உள்ள பள்ளிகளின் குடோன்களில் சமச்சீர் கல்வி திட்டத்தில் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படாத 350 டன் அரசு பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
அந்த பாடப்புத்தகங்கள் மோசடியாக கடத்தி சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு விற்கப்பட்டது. இந்த மோசடி விவகாரத்தில் கோவை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சரவணக்குமார், சேது ராமலிங்கம் ஆகியோரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேதுராமலிங்கத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு (எண்–6) மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்தது.
                                                                                                    மேலும், . . . .  .

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ராஜபக்சே பொது மன்னிப்பு தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை விமானம் மூலம் இன்று திருச்சி வருகிறார்கள்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே பொதுமன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து, நேற்று அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். 5 பேரும் விமானம் மூலம் இன்று திருச்சி அழைத்து வரப்படுகிறார்கள்.
கொழும்பு, நவம்பர், 20-11-2014,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.
                                                                                                               மேலும், . . . . . 

Tuesday 18 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்கு பெயர்பெற்ற சாமியார் ஆதரவாளர்கள், போலீஸ் பயங்கர மோதல் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


சார், நவம்பர், 19-11-2014,
அரியானா மாநிலத்தில், சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியார் ராம்பால் ஆதரவாளர்கள், போலீசார் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சாமியார் ராம்பால்
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
கடந்த 2006-ம் ஆண்டு, ஜூலை 12-ந் தேதி இவரது ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சாமியார் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ரோட்டாக் செசன்சு கோர்ட்டில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
ஐகோர்ட்டு பிடிவாரண்டு
இந்த நிலையில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் சாமியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் தொடர்ந்து 3 முறை ஆஜர் ஆகாத நிலையில், அவர் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வெள்ளிக்கிழமைக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அரியானா மாநில போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்புடன் உத்தரவிட்டது.
                                                                                                                         மேலும், . . .  .

கர்நாடக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 19-11-2014,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்து உள்ளது.
குடிநீர் மற்றும் நீர்மின் திட்டத்துக்கு இந்த அணைகள் கட்டப்பட இருப்பதாக கர்நாடகா கூறுகிறது.
தமிழகம் எதிர்ப்பு
காவிரியில் புதிதாக அணைகள் கட்டப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகம் அணைகட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் ஜி.உமாபதி தயாரித்து தமிழக அரசு வக்கீல் பி.பாலாஜி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                                                                 மேலும், . . . . . 

11 குழந்தைகள் இறப்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, நவம்பர், 19-11-2014,
தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்ததையொட்டி, தொடர் கண்காணிப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் கடந்த 14-ந்தேதி முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பெ.மு.பஷீர் அஹமது, ப.செந்தில் குமார், என்.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                                                                                                            மேலும், . . . .

சென்னை கே.கே.நகரில் பயங்கரம் அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை கூலிப்படை கும்பல் வெறியாட்டம்

சென்னை, நவம்பர், 19-11-2014,
சென்னை கே.கே.நகரில் அ.தி.மு.க. பிரமுகர் நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கூலிப்படை கும்பல் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
விசுவநாதன்
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பல்லவன் சாலையை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், 128-வது வட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்தார். அந்த பகுதியில் தீவிர அரசியல் செல்வாக்குடன் வலம்வந்தவர். இவரது ரியல் எஸ்டேட் அலுவலகமும், கட்சி அலுவலகமும் சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்து விசுவநாதன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சென்றுகொண்டிருந்தார்.
                                                                                          மேலும், . . . . . 

Thursday 13 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மியான்மர் நாட்டில் உலக தலைவர்களுடன் நரேந்திர மோடி சந்திப்பு சீன பிரதமருடன் முக்கிய ஆலோசனை

நே பி தா, நவம்பர், 14-11-2014,
மியான்மர் நாட்டில் சீன பிரதமர் லீ கேகியாங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
உலக தலைவர்களுடன் மோடி சந்திப்பு
மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன.
மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அங்கு அவர் சந்தித்து பேசினார். நே பி தா நகரில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
                                                                                              மேலும், . . .  . .

சகதிக்காடான கோயம்பேடு மார்க்கெட்: சென்னையில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது




சென்னை, நவம்பர், 14-11-2014,
சென்னையில், தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு மார்க்கெட் சகதிக் காடாக மாறியது.
வடகிழக்கு பருவமழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 2 நாட்களாக இரவு, பகலாக விட்டு,விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை காரணமாக கோயம்பேடு 100 அடி சாலை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, தரமணி சர்வீஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, புழல் பைபாஸ் சாலை, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
                                                                                                                    மேலும், . . . . 

டெல்லியில் நேரு பிறந்த நாள் விழா பாரதீய ஜனதாவினர் மீது ராகுல் காந்தி ஆவேசம் “புகைப்படத்துக்காக சாலைகளை சுத்தம் செய்து, எங்கும் வெறுப்பு விஷத்தை பரப்புகிறார்கள்”

புதுடெல்லி, நவம்பர், 14-11-2014,
டெல்லியில் நேரு பிறந்த நாள் விழாவில் பாரதீய ஜனதாவினரை ராகுல் காந்தி ஆவேசமாக தாக்கிப் பேசினார். அப்போது அவர், “ புகைப்படத்துக்காக சாலைகளை சுத்தம் செய்து, எங்கும் வெறுப்பு விஷத்தை பரப்புகிறார்கள்” என கூறினார்.
நேரு பிறந்த நாள்
இன்று நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் 125-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. இதற்கான விழா, டெல்லியில் டால்கோதரா மைதானத்தில் நேற்று நடந்தது.
அப்போது காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் நேருவின் கொள்கைகளை, தொலைநோக்கு பார்வையை கட்டிக்காப்பதற்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி உறுதிமொழி செய்து வைத்தார்.
மதவாத சக்திகளை எதிர்த்து...
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                மேலும், . .  . .

குன்றத்தூரில் துணிகர சம்பவம் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியரை கட்டிப்போட்டு கொள்ளை 16 பவுன் நகை, பணத்துடன் காரையும் கடத்தி சென்ற கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

பூந்தமல்லி, நவம்பர், 14-11-2014,
தனியார் கல்லூரி பேராசிரியரின் குடும்பத்தை கட்டிப்போட்டு விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், காரையும் கடத்தி சென்றனர். நடு வழியில் நின்ற காரை மட்டும் போலீசார் மீட்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், இரண்டாம் கட்டளை, சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம்மேத்யூஸ்(வயது 45). இவருடைய மனைவி ஆலிஸ்(41). கணவன்-மனைவி இருவரும் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஹேபல்(12) என்ற மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள்.
                                                                                   மேலும், .  . . . 

Wednesday 12 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காவிரியின் குறுக்கே புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடகம் முடிவு மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தல்

காவிரியின் குறுக்கே புதிதாக 2அணைகள் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது. இதேபோல் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வற்புறுத்தி உள்ளனர்.
சென்னை, நவம்பர், 13-11-2014,
தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ‘டெல்டா’ மாவட்டங்களில் 12 லட்சம் ஹெக்டேர் நிலம் காவிரி நீர் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள 13 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி விளங்குகிறது.
புதிதாக 2 அணைகள்
ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை கர்நாடகம் சரிவர வழங்குவது இல்லை. பெரும்பாலும் கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு, உபரி நீரைத்தான் கர்நாடகம் திறந்து விடுகிறது. இதனால் சட்டப் போராட்டம் நடத்தித்தான் காவிரி நீரை பெற வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே 48 டி.எம்.சி.
                                                                                                                    மேலும்,. . . . .

அப்பீல் மனுவை வாபஸ் பெற முடியாது: 5 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய இந்தியா வற்புறுத்தல்


புதுடெல்லி, நவம்பர், 13-11-2014,
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்க ராஜபக்சே தயாராக இருந்தபோதிலும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
தூக்கு தண்டனை
ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 5 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
3 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், கடந்த மாதம் 30-ந் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மோடி பேச்சுவார்த்தை
இந்த தீர்ப்பை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
                                                                                          மேலும்,. . . . .

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் ரூ.5½ லட்சம் கோடி பண பரிவர்த்தனை முடக்கம் ரூ.8 கோடி காசோலைகள் தேக்கம்

சென்னை, நவம்பர், 13-11-2014,
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால், நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. ரூ.8 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஒரு நாள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் 8 ஆயிரத்து 800 கிளைகள் உள்பட இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கண்டன உரையாற்றினார்.
ரூ.70 ஆயிரம் கோடி வராக்கடன்
ஆர்ப்பாட்டத்தின் போது சி.எம்.பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                     மேலும், . . . . 

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்து இருக்கிறோம் ‘கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், தமிழகத்தில் மோடி அரசை அமைப்போம்’ பா.ஜனதா பொதுக்குழு கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் சூளுரை


சென்னை, நவம்பர், 13-11-2014,
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக நாம் உருவெடுத்து இருக்கிறோம். கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், தமிழகத்தில் மோடி அரசை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
செயற்குழு-பொதுக்குழு
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த குமணன் சாவடியில் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, தேசிய அமைப்பு இணை பொதுச்செயலாளர் சதீஷ், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிக்கப்பட்டதற்கு செயற்குழு-பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியது. அதனை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடையே, தலைவர்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
                                                                                                மேலும், . . . . 

Tuesday 11 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது மத்திய அரசு அறிவிப்பு

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 12-11-2014,
கோவாவில், 45-வது சர்வதேச திரைப்பட விழா, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
75 நாடுகள்
இந்த விழா 11 நாட்கள் நடைபெறும். 75 நாடுகள், இதில் பங்கேற்கின்றன. ஆசிய நாடுகளின் 7 படங்களும், இதர நாடுகளின் 61 படங்களும் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.
முதலாவது படமாக ஈரான் மொழிப்பட இயக்குனர் மோசன் மக்மல்பப் இயக்கிய ‘தி பிரசிடண்ட்’ என்ற படம் திரையிடப்படும்.
இந்த ஆண்டு மரணம் அடைந்த ஆலிவுட் பிரபலங்கள் ரிச்சர்டு அட்டன்பரோ, ராபி வில்லியம்ஸ் மற்றும் இந்திய திரையுலக பிரபலங்கள் ஜோரா சேகல், சுசித்ரா சென்,
                                                                                                    மேலும், . . . . . 

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுடெல்லி, நவம்பர், 12-11-2014,
நாடு முழுவதும் இன்று பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஊதிய உயர்வு
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும் என்று கூறியது.
இதனால், 12-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக, நேற்று இந்தியன் வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் சார்பில் வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற
                                                                                                                       மேலும், . . .  . 

அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்த கொல்கத்தா கொள்ளையர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர் பரபரப்பான புதிய தகவல்கள்

சென்னை, நவம்பர், 12-11-2014,
சென்னை அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்த கொல்கத்தா கொள்ளைர்கள் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளை
சென்னை அண்ணாநகர் கிழக்கு, கியூ பிளாக், 15-வது தெருவைச்சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 61). டாக்டரான இவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலைபார்க்கிறார். கடந்த 4-ந் தேதி அன்று மாலையில் டாக்டர் ஆனந்தன் வீட்டில் அவரது மனைவி சாந்தி, தாயார் ஆண்டாள் மற்றும் வீட்டு வேலைக்காரப்பெண் மீனா என்ற அகீல்மாபீபி ஆகியோர் இருந்தனர்.
அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து, பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி, பெண்களை கட்டிப்போட்டு, 107 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றுவிட்டனர். இந்த கொள்ளைச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இந்தியில், வீட்டு வேலைக்காரி மீனாவுடன் பேசினார்கள்.
                                                                                                     மேலும், . . .  .

மாமனார் அவதூறாக பேசியதால் மகளை கொன்று தாய் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

கும்மிடிப்பூண்டி, நவம்பர், 12-11-2014,
மாமனார் அவதூறாக பேசியதால் மனம் உடைந்த இளம்பெண் மகளை கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
பாதுகாப்பு ஊழியர்
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள ஏரிப்பேட்டை சம்மந்தம் நகரை சேர்ந்தவர் மெவில்ஸ் (வயது 39). இவர் சென்னையில் தனியார் ஓட்டலில் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாதவி(30). இவர்களது மகள்கள் திரிஷா (11), ராகவிஸ்ரீ (5). நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மெவில்ஸ் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். காலையில் மூத்த மகள் திரிஷாவை பள்ளிக்கு அனுப்பி வைத்த மாதவி பின்னர் கதவை உள்பக்கமாக மூடி தாழ்பாள் போட்டு பூட்டிக்கொண்டார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பிய திரிஷா வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மெவில்ஸ் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பதை அறிந்து அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகளும், மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடிதம் சிக்கியது
மாதவி தனது மாமனார் தூயமூர்த்திக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
                                                                                                மேலும், . .  . .

Monday 10 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பது பற்றி ராஜபக்சேவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு மீனவர்கள், தமிழக சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இதைத்தொடர்ந்து, 5 மீனவர்களும், தமிழக சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்.
புதுடெல்லி, நவம்பர், 11-11-2014,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை
இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், போதைப்பொருள் கடத்தியதாக கூறி 5 பேரையும் மற்றும் அவர்களுடன் இலங்கை மீனவர்கள் 3 பேரையும் கைது செய்து கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.
                                                                                                             மேலும், . . .

மதுரையில் பரபரப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 வெடிகுண்டுகள் பறிமுதல் முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமா?


மதுரை, நவம்பர், 11-11-2014,
மதுரையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சதி வேலையில் ஈடுபட ரவுடிகள் திட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குப்பைத் தொட்டியில் குண்டுகள்
மதுரை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 40), மாநகராட்சி சுகாதாரத்துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அண்ணாநகர் கிழக்கு முதல் தெருவில் நேற்று மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் இருந்த குப்பைகளை உழவர்சந்தை செல்லும் வழியில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டினார். அப்போது அங்கு சிவப்பு நிற பை ஒன்று கிடப்பதை பார்த்தார்.
அந்த பையை எடுத்து அவர் பார்த்தபோது அதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான டேப் சுற்றப்பட்ட டப்பா இருப்பதை கண்டார்.
                                                                                                                        மேலும், . . . . 

இந்தியா தலையீடு இல்லாமல் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது சென்னையில், வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் பேட்டி

சென்னை, நவம்பர், 11-11-2014,
இந்தியா தலையீடு இல்லாமல் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று அந்த நாட்டின் வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.
விக்னேஸ்வரன்
இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவர், நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை வடக்கு மாகாணத்தில் தற்போது சூழ்நிலை எப்படி இருக்கிறது?
பதில்:- மக்களுடைய பிரதிநிதிகள் என்ற முறையில் எங்கள் வேலைகளை செய்ய மத்திய அரசு (இலங்கை) தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
                                                                                                                     மேலும், . . . . .

காலி இடம் என்று அறிவிப்பு எதிரொலி: ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

சென்னை, நவம்பர், 11-11-2014,
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
காலி இடம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சபாநாயகரின் அறிவிப்பை சட்டசபை செயலகம் அறிவிப்பாணையாக 8-ந் தேதி வெளியிட்டுள்ளது. இதில் ஒரு நகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மற்றொன்று எனக்கும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீனால் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (8-ந் தேதி) எனது அலுவலகத்துக்கு அந்த அறிவிப்பாணை வரப்பெற்றது.
                                                                                                            மேலும், . . . .