Monday 10 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பது பற்றி ராஜபக்சேவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு மீனவர்கள், தமிழக சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்பது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இதைத்தொடர்ந்து, 5 மீனவர்களும், தமிழக சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்.
புதுடெல்லி, நவம்பர், 11-11-2014,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை
இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், போதைப்பொருள் கடத்தியதாக கூறி 5 பேரையும் மற்றும் அவர்களுடன் இலங்கை மீனவர்கள் 3 பேரையும் கைது செய்து கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.
                                                                                                             மேலும், . . .

மதுரையில் பரபரப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 வெடிகுண்டுகள் பறிமுதல் முக்கிய பிரமுகரை கொல்ல திட்டமா?


மதுரை, நவம்பர், 11-11-2014,
மதுரையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சதி வேலையில் ஈடுபட ரவுடிகள் திட்டமிட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குப்பைத் தொட்டியில் குண்டுகள்
மதுரை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 40), மாநகராட்சி சுகாதாரத்துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அண்ணாநகர் கிழக்கு முதல் தெருவில் நேற்று மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் இருந்த குப்பைகளை உழவர்சந்தை செல்லும் வழியில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டினார். அப்போது அங்கு சிவப்பு நிற பை ஒன்று கிடப்பதை பார்த்தார்.
அந்த பையை எடுத்து அவர் பார்த்தபோது அதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான டேப் சுற்றப்பட்ட டப்பா இருப்பதை கண்டார்.
                                                                                                                        மேலும், . . . . 

இந்தியா தலையீடு இல்லாமல் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது சென்னையில், வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் பேட்டி

சென்னை, நவம்பர், 11-11-2014,
இந்தியா தலையீடு இல்லாமல் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று அந்த நாட்டின் வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.
விக்னேஸ்வரன்
இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவர், நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை வடக்கு மாகாணத்தில் தற்போது சூழ்நிலை எப்படி இருக்கிறது?
பதில்:- மக்களுடைய பிரதிநிதிகள் என்ற முறையில் எங்கள் வேலைகளை செய்ய மத்திய அரசு (இலங்கை) தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
                                                                                                                     மேலும், . . . . .

காலி இடம் என்று அறிவிப்பு எதிரொலி: ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

சென்னை, நவம்பர், 11-11-2014,
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-
காலி இடம்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சபாநாயகரின் அறிவிப்பை சட்டசபை செயலகம் அறிவிப்பாணையாக 8-ந் தேதி வெளியிட்டுள்ளது. இதில் ஒரு நகல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மற்றொன்று எனக்கும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீனால் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (8-ந் தேதி) எனது அலுவலகத்துக்கு அந்த அறிவிப்பாணை வரப்பெற்றது.
                                                                                                            மேலும், . . . .

No comments:

Post a Comment