Wednesday 12 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காவிரியின் குறுக்கே புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடகம் முடிவு மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தல்

காவிரியின் குறுக்கே புதிதாக 2அணைகள் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது. இதேபோல் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வற்புறுத்தி உள்ளனர்.
சென்னை, நவம்பர், 13-11-2014,
தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ‘டெல்டா’ மாவட்டங்களில் 12 லட்சம் ஹெக்டேர் நிலம் காவிரி நீர் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள 13 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி விளங்குகிறது.
புதிதாக 2 அணைகள்
ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை கர்நாடகம் சரிவர வழங்குவது இல்லை. பெரும்பாலும் கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு, உபரி நீரைத்தான் கர்நாடகம் திறந்து விடுகிறது. இதனால் சட்டப் போராட்டம் நடத்தித்தான் காவிரி நீரை பெற வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே 48 டி.எம்.சி.
                                                                                                                    மேலும்,. . . . .

அப்பீல் மனுவை வாபஸ் பெற முடியாது: 5 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய இந்தியா வற்புறுத்தல்


புதுடெல்லி, நவம்பர், 13-11-2014,
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்க ராஜபக்சே தயாராக இருந்தபோதிலும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
தூக்கு தண்டனை
ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 5 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
3 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், கடந்த மாதம் 30-ந் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மோடி பேச்சுவார்த்தை
இந்த தீர்ப்பை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
                                                                                          மேலும்,. . . . .

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் ரூ.5½ லட்சம் கோடி பண பரிவர்த்தனை முடக்கம் ரூ.8 கோடி காசோலைகள் தேக்கம்

சென்னை, நவம்பர், 13-11-2014,
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால், நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. ரூ.8 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஒரு நாள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் 8 ஆயிரத்து 800 கிளைகள் உள்பட இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கண்டன உரையாற்றினார்.
ரூ.70 ஆயிரம் கோடி வராக்கடன்
ஆர்ப்பாட்டத்தின் போது சி.எம்.பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                     மேலும், . . . . 

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக உருவெடுத்து இருக்கிறோம் ‘கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், தமிழகத்தில் மோடி அரசை அமைப்போம்’ பா.ஜனதா பொதுக்குழு கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் சூளுரை


சென்னை, நவம்பர், 13-11-2014,
அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக நாம் உருவெடுத்து இருக்கிறோம். கோடி உறுப்பினர்களை சேர்ப்போம், தமிழகத்தில் மோடி அரசை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
செயற்குழு-பொதுக்குழு
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த குமணன் சாவடியில் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, தேசிய அமைப்பு இணை பொதுச்செயலாளர் சதீஷ், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிக்கப்பட்டதற்கு செயற்குழு-பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியது. அதனை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடையே, தலைவர்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினர். டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment