Friday 28 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

திருச்சியில் நடைபெற்ற விழாவில் மீண்டும் உதயமானது ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ புதிய கட்சியின் பெயரை ஜி.கே.வாசன் அறிவித்தார்

திருச்சியில் நடைபெற்ற விழாவில், ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ மீண்டும் உதயமானது. புதிய கட்சியின் பெயரை ஜி.கே.வாசன் அறிவித்தார்.
திருச்சி, நவமபர், 29-11-2014,
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
கட்சி கொடி அறிமுகம்
புதிய கட்சியின் தொடக்க விழா திருச்சியில் நடைபெறும் என்றும், அப்போது கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஜி.கே.வாசன் சென்னையில் கடந்த புதன்கிழமை புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். காவி, வெள்ளை, பச்சை நிறத்துடன் கூடிய அந்த கொடியில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று உள்ளன.
திருச்சியில் தொடக்க விழா
ஏற்கனவே அறிவித்தபடி, புதிய கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
                                                                                     மேலும், . . . .  

பெண் என்ஜினீயரை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, நவமபர், 29-11-2014,
பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் என்ஜினீயர்
சேலம் மாவட்டம் ஆத்தூர், ஜோதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் உமா மகேஸ்வரி (வயது 23). இவர் சென்னையை அடுத்த சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இதற்காக அவர் மேடவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தோழிகளுடன் தங்கியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு 10.15 மணிக்குமேல் நிறுவனத்தில் இருந்து வேலை முடிந்து வெளியே வந்தார். ஆனால் உமா மகேஸ்வரி வீட்டுக்கு செல்லவில்லை. நெடுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் சகதோழிகள் உமா மகேஸ்வரிக்கு போன் செய்தனர். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவரது தோழிகள் உமா மகேஸ்வரியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்டனர்
அதிர்ச்சி அடைந்த அவர் மறுநாள் இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
                                                                                              மேலும், . . . . 

அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்: வகுப்பு அறையில் மாணவர் குத்திக்கொலை ஓரினச்சேர்க்கைக்கு மறுத்து போலீசில் புகார் செய்ததால் முன்னாள் மாணவர் ஆத்திரம்

அருப்புக்கோட்டை, நவமபர், 29-11-2014,
வகுப்பு அறையில் மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டான். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததுடன் போலீசில் புகார் செய்ததால் ஆத்திரமடைந்து அவனை முன்னாள் மாணவன் கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
வகுப்பறையில் புகுந்தான்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மாசார்பட்டி போலீஸ் சரகம் அயன்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாஸ்கரன் (வயது 13). அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனது தந்தை கோபால் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார். இதனால் தாயாருடன் தங்கி இருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தான். நேற்று காலை 8½ மணிக்கு பாஸ்கரன் பள்ளிக்கு வந்து தனது வகுப்பு அறையில் அமர்ந்து இருந்தான்.
அப்போது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் ஒருவன் பள்ளிக்கு வந்து பாஸ்கரன் இருந்த வகுப்பு அறைக்குள் திடீரென புகுந்தான்.
                                                                                                  மேலும், . .  . .

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் மோதல் நாற்காலிகள் உடைப்பு; சாலை மறியலால் பரபரப்பு

கிருஷ்ணகிரி, நவமபர், 29-11-2014,
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மன்ற கூடத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
நகராட்சி கூட்டம்
கிருஷ்ணகிரி நகராட்சியின் கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் தங்கமுத்து(அ.தி.மு.க.) தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, சமீபத்தில் இறந்த 16-வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ராஜாவெங்கட்ராமன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சி சார்பிலும் உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானம் குறித்துப் பேசினார்கள்.
                                                                                     மேலும், . .  . .

No comments:

Post a Comment