Saturday 29 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட்அடுத்த மாதம் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவிப்பு


சென்னை, நவம்பர், 30-11-2014,
‘‘நாட்டிலேயே முதன்முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிரசாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நேற்று ஈடுபட்டு இருந்தனர். இந்த பணியின் மேம்பாடு குறித்து நிருபர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர் மையத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள ராக்கெட் ஏவுதள பகுதிக்கு நேற்று நிருபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                      மேலும்,. . . . . 

முதல்கட்டமாக 12 இடங்களில் அமல்படுத்த முடிவு பயணிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு மத்திய அரசு திட்டம் பற்றி பிரதமர் மோடி தகவல்

பயணிகளுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்த ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 12 இடங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
கவுகாத்தி, நவம்பர், 30-11-2014,
பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங் களை அறிவித்து வருகிறார்.
பிரதமர் திட்டம்
அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் ஏதுவாக ரெயில்வேயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அவர் பரிசீலித்து வருகிறார்.
இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளான நிலையில், இந்திய ரெயில்வே வரைபடத்தில் இடம் பெறாமல் இருந்த மேகாலயா மாநிலத்தில், மெந்திபத்தார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தது.
                                                                                                     மேலும், . . . . 

இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, நவம்பர், 30-11-2014,
திருவள்ளுவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
தருண் விஜய்
உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் டெல்லி மேல்-சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவர் தினத்தை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் வள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புக்களை வட இந்தியாவின் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் பெருத்த வரவேற்பை பெற்றது. தருண் விஜய் உரையைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வரும் ஆண்டில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
                                                                                                                            மேலும், . .  . .

காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திப்பேன் சத்தியமூர்த்தி பவனில் நடிகை குஷ்பு பேட்டி

சென்னை, நவம்பர், 30-11-2014,
காங்கிரஸ் கட்சிக்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திப்பேன் என்று நடிகை குஷ்பு கூறினார்.
குஷ்புக்கு வரவேற்பு
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு முதல் முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று காலை 11.50 மணிக்கு வந்தார்.
அவரை கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் தணிகாச்சலம், தேசிய ஊடக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமணி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மாநில ஒழுங்கமைப்பு செயலாளர் சுமதி அன்பரசு, துறைமுகம் ரவிராஜ் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர்.
நிர்வாகிகள்-தொண்டர்களின் வரவேற்பை நடிகை குஷ்பு ஏற்றுக்கொண்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment