Tuesday 18 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்கு பெயர்பெற்ற சாமியார் ஆதரவாளர்கள், போலீஸ் பயங்கர மோதல் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


சார், நவம்பர், 19-11-2014,
அரியானா மாநிலத்தில், சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியார் ராம்பால் ஆதரவாளர்கள், போலீசார் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சாமியார் ராம்பால்
அரியானா மாநிலத்தில் சார் நகர் அருகே பர்வாலா என்ற இடத்தில் 12 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஆசிரமம் நடத்தி வருபவர் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் (வயது 63).
கடந்த 2006-ம் ஆண்டு, ஜூலை 12-ந் தேதி இவரது ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக சாமியார் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ரோட்டாக் செசன்சு கோர்ட்டில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
ஐகோர்ட்டு பிடிவாரண்டு
இந்த நிலையில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் சாமியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் தொடர்ந்து 3 முறை ஆஜர் ஆகாத நிலையில், அவர் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வெள்ளிக்கிழமைக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அரியானா மாநில போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்புடன் உத்தரவிட்டது.
                                                                                                                         மேலும், . . .  .

கர்நாடக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 19-11-2014,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்து உள்ளது.
குடிநீர் மற்றும் நீர்மின் திட்டத்துக்கு இந்த அணைகள் கட்டப்பட இருப்பதாக கர்நாடகா கூறுகிறது.
தமிழகம் எதிர்ப்பு
காவிரியில் புதிதாக அணைகள் கட்டப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகம் அணைகட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் ஜி.உமாபதி தயாரித்து தமிழக அரசு வக்கீல் பி.பாலாஜி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                                                                 மேலும், . . . . . 

11 குழந்தைகள் இறப்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு முதல்-அமைச்சர் அறிக்கை

சென்னை, நவம்பர், 19-11-2014,
தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்ததையொட்டி, தொடர் கண்காணிப்புக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் கடந்த 14-ந்தேதி முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் இரா.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பெ.மு.பஷீர் அஹமது, ப.செந்தில் குமார், என்.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                                                                                                            மேலும், . . . .

சென்னை கே.கே.நகரில் பயங்கரம் அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை கூலிப்படை கும்பல் வெறியாட்டம்

சென்னை, நவம்பர், 19-11-2014,
சென்னை கே.கே.நகரில் அ.தி.மு.க. பிரமுகர் நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கூலிப்படை கும்பல் அவரை தீர்த்துக்கட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
விசுவநாதன்
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கம் பல்லவன் சாலையை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், 128-வது வட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்தார். அந்த பகுதியில் தீவிர அரசியல் செல்வாக்குடன் வலம்வந்தவர். இவரது ரியல் எஸ்டேட் அலுவலகமும், கட்சி அலுவலகமும் சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்து விசுவநாதன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக சென்றுகொண்டிருந்தார்.
                                                                                          மேலும், . . . . . 

No comments:

Post a Comment